கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
கும்ப
ராசியின் கிரஹ நிலைகள் -01-05-2024
முதல் மே 13, 2025 வரை
கும்ப ராசிக்கு குரு பகவான் 2 மற்றும் 11ம் அதிபதி
ஆவார். தன காரகர் ஆன குரு தனஸ்தானங்களான 2 மற்றும் 11ம் அதிபதி என்பதால் கும்ப ராசி
நேயர்களுக்கு அளவில்லாத செல்வ வளத்தை குரு பகவான் தருவார்.
1ல் சனி, 2ல் ராகு , 8ல் கேது , 4ல் குரு
உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்களை நீங்கள்
சந்திக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை கூடும். பொருளாதார நிலை சரளமாக இருக்கும்.. அதிக
வருமானம் வரும். என்றாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஓரளவு
லாபம் பெறலாம்.வெளி நாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது அனுகூலமாக நேரம் ஆகும்.
குல தெய்வ வழிபாடு அவசியம் மேற்கொள்ள வேண்டும்.ஸ்பெகுலேஷன் , ஷேர் மார்க்கெட்
போன்ற துறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணியில்
இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.தொழில் விரிவாக்கத்திற்கு
தேவையான பண உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல
நினைத்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ஜென்ம சனி
கும்ப ராசிக்கு கோச்சாரம் சரியாக இல்லை. இந்த குரு
பெயர்ச்சி முதல் சற்று சோதனையான காலம் . கும்ப ராசிக்கு ஏழரை சனியில் தற்சமயம் ஜென்ம
சனி நடை பெறுகிறது. ஜென்ம சனி என்றால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். ஆயினும்
சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி என்பதால் , அதிக பாதிப்புகளை தரமாட்டார். மேலும்
ராசியில் ஆட்சி பெற்று காணப்படுவதால் , பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகத்தை
தருவார். இந்த சச யோகத்தால் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள்,
செல்வம் ஆகியவற்றை தரும்.நீண்ட ஆயுள் . நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை
பெறுவீர்கள்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பெரியளவு லாபம்
இருக்காது. பணியில் உள்ளவர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு,
உங்களின் கூட்டாளி, பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படலாம். வாழ்கை துணையிடம் விட்டு கொடுத்து
போனால் இல்லற வாழ்கை வசந்தமாக இருக்கும்.வேலை தேடுபவர்களுக்குச் சரியான வேலை அமையாமல்
கஷ்டப்பட வேண்டி இருக்கும்.ஏமாற்றப்படக்கூடிய காலம் என்பதால் மன வே..தனை உண்டாகும்.
கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை
தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும் என்கிறது ஜோதிட பாடல்
கோச்சாரத்தில் குரு, 4ல் இருப்பதால் உற்றார், நண்பர், இவர்கள் எல்லாம் பகை போன்று தோன்றுவார்கள்.
மனதில் குழப்பம் மிஞ்சும். பெற்ற தாயால் அனுகூலம்
உண்டு. மனம் அலை பாயும். வீடு வாகனம் வாங்கும்
யோகம் அமையும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும்
கிடைக்கும். செல்வமும், செல்வாக்கும் ஏற்படும்.வசதி வாய்ப்புக்கள் உண்டாகும்.ஆன்மிகப்
பணிகளில் ஆர்வம் இருக்கும்.
2ல் ராகு
முன்கோபம் வரும். புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும்.
தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும். உடல் நலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில்
விட்டு கொடுத்து செல்வது நல்லது.
8ல் கேது
உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உடல் உபாதைகளால் மருத்துவ சிலவுகள் அதிகரிக்கலாம்
இவை எல்லாமே பொதுப்பலன்கள் ஆகும். உங்கள் தசை ,
புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும்.
குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும்
நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.
குருவின் பார்வை யோகம்
குருவின்
பார்வை உங்கள் ராசிக்கு 8-வது வீடு,
10-வது வீடு மற்றும் 12-வது வீட்டில் இருக்கும்.
ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தை குரு பகவான் இந்த கால
கட்டத்தில் பார்வை இடுவது உங்கள் ஆயுள் விருத்தி அடையும்.
ஜீவனஸ்தானமான 10ம் இடத்தை குரு பார்வை இடுவது தொழில்
மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு
அமையும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
2024ல் உங்கள் முடிவுகள் புத்திசாலித்தனமாகவும்
விவேகமாகவும் இருக்கும். மேலும் மதம் மற்றும்
ஆன்மீகம் விஷயத்தில் நாட்டம் அதிகம் ஆகும். உங்கள் அதிர்ஷ்டம். கூடும்.
12ம் இடம்
விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின்
பார்வை படும் போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம்,
மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
4ல் உள்ள குருவால் கும்ப ராசிக்கு ஏற்பட போகும்
நன்மை தீமைகள்
1. பணவரவு சரளமாக இருக்கும். சிலவுகள் அதிகரிக்கும். கவனம் கடன்
வாங்காமல் சமாளிக்க கற்று கொள்ள வேண்டும்.
2. நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கவனித்து கேட்கும் நிலை ஏற்படும்.
3. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும். தடைகள் விலகும்.
4. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில்
குதூகலம் நிறைந்து காணப்படும்.
5. புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வெற்றியும் முன்னேற்றமும்
உண்டாகும்.
6. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ சிலவுகள் கட்டுக்குள்
அமையும்.
7. இதுநாள் வரை கஷ்ட படுத்திய கடன் சுமை நீங்கும்.
8.எதிரிகளை வெல்ல கூடிய ஆற்றல் உருவாகும்.
9.இழுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்
10. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
11. எதிர்பாராத தன வரவு ஏற்படும்
12. பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு , அனுகூல இடமாற்றம் , மேலதிகாரிகளின்
ஆதரவு கிடைக்கும்.
13. தொழில் உள்ளவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள் .
பரிஹாரம்
குரு
கும்ப ராசி
நேயர்களுக்கு குரு 4ல் சஞ்சரிக்க இருப்பதால் தீமையான பலன்கள் ஏற்படலாம்.. வியாழக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள்
வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்,
கொண்டக்கடலை சாற்றி அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
கேது
கேது 8ம் இடத்தில இருப்பதால் செவ்வாய் கிழமைகளில்
உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது
அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
சனி
கும்ப ராசி
நேயர்களுக்கு சனி 1ல் சஞ்சரிக்க இருப்பதால் சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு
அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி பகவானுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை
செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.
2ம் ராகு
ராகு பகவான் 2ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில்
கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர
நன்மையான பலன்களே உண்டாகும்.
No comments:
Post a Comment