Search This Blog

Monday, July 1, 2024

கிருத்திகை விரதம்

 💥🦚 கிருத்திகை விரதம்...💥🦚

தீராத இடர் தீர

என்றும் இளமை எழிலன் எனினும்

இடர்மா மலைக்கே இடராவன்

துன்றும் கரிமா முகத்தோன் எனினும்

சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்

நன்றே நாடி இந்திரன் பிரமன்

நாடித் தேடும் கணேசனெனும்

ஒன்றே எனக்கு சுபம் திருவும்

உ தவும் மங்கள மூர்த்தமதே

 🦚கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதிலும்  சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் (பிப்ரவரி 26ஆம் தேதி) கிருத்திகை தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.



*கிருத்திகை நட்சத்திர விரதம் :

🦚கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

🦚சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் பாலூட்டி வளர்த்தனர்.

🦚முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

🦚சிவபெருமான், கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்கு இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் வரம் அளித்தார்.

* கார்த்திகை விரதம் இருக்கும் முறை :

🦚ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🦚முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.

🦚கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

🦚மேற்கண்ட முறையில் முருகனை கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

🦚மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கிருத்திகை விரதத்தை பின்பற்றுங்கள்..!🙏🏻உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றா

விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக

பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல

மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே

-கந்தர் அலங்காரம் 39

ஆனி கிருத்திகை நாளில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு சொந்த வீடு அமையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு மனம் குளிரும் வகையில் நல்ல செய்தி தேடி வரும். வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும்.

கார்த்திகேயனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் மகா கிருத்திகை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் செவ்வாய்கிழமையுடன் கூடிய கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.



செவ்வாய்க்கிழமையில் கிருத்திகையும் சேரும் பொழுது பொதுவாக முருகனை வழிபடுவது சகல, சௌபாக்கியங்களையும் கொடுக்கும் என்பது சாஸ்திர நியதி. செவ்வாய்க்கிழமையில் கிருத்திகை நட்சத்திர வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் வேண்டியபடியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன, குங்கும திலகம் இட வேண்டும். முருக மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், மூல மந்திரங்கள் உச்சரித்து முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆனி கிருத்திகை நன்னாளில் முருகனை வழிபடுபவர்களுக்கு சொந்த வீடு அமையும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும் என்பது ஐதீகம் உள்ளது.

No comments:

Post a Comment