எப்போதும் இளமையாக இருக்கவும், நோயில்லா வாழ்வும் கிடைக்க தன்வந்திரி சித்தரின் இந்த மந்திரத்தை 108 முறை இப்படி உச்சரியுங்கள்
தன்வந்திரி ஜீவ சமாதி
வைத்தீஸ்வரன் கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார். இன்றும் அக்கோவிலை சுற்றி சித்தரின் ஆன்மா உலாவிக் கொண்டிருப்பதாக அங்குள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவரின் அருளைப் பெறுவதற்கு இவருடைய இந்த மந்திரத்தை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.
ஒரு சிறு குண்டூசி சத்தம் கூட கேட்காத ஒரு இடத்தில் அமைதியாக தியான நிலையில் அமர வேண்டும். தியானத்திற்கு உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். தன்வந்திரி சித்தர் உடைய புகைப்படத்தை வைத்து, அவருக்கு முன்னால் அகல் தீபம் ஒன்றை வைத்து, அதனுள் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்வந்திரி சித்தரை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.
தன்வந்திரி சித்தர் மந்திரம்:
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி!
தன்வந்திரி சித்தர் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுமார் 800 ஆண்டுகள் 32 நாட்கள் வரை இவருடைய ஆயுட்காலம் உள்ளது. பலநூறு சீடர்களை பெற்ற இவர் நந்தியை குருவாகக் கொண்டவர். இந்திய விஞ்ஞானத்தின் தந்தையாக இருந்த தன்வந்திரி சித்தர் ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்கு அளித்தவர். கர்ம வினைகளின் படி ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தீர தன்வந்திரியை வழிபடலாம்.
இவர் எழுதிய பல்வேறு நூல்களில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி 1200, தன்வந்திரி தண்டகம் 140, தன்வந்திரி நிகண்டு 300 ஆகிய நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவருடைய நூல்களில் இருக்கும் மருத்துவ குறிப்புகள் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்க வல்லது. இவருடைய அருளைப் பெற்று அனைவரும் நலம் பெறுவோம்.
தன்வந்திரி சமாதி
தன்வந்திரியின் ஜீவ சமாதி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சிவன் சன்னதி பிரகாரத்தில் உள்ளது. மருத்துவ துறையில் சாதனை செய்ய வேண்டுவோர் , மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் , மருத்துவ தொழில் சிறக்க வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள இவருடைய ஜீவசமாதிக்கு சென்று வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்
நன்றி தெய்வீகம்
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment