Search This Blog

Thursday, July 11, 2024

மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களின் ஜாதகம் ஒரு அலசல் Dr Ramadoss Horoscope...


மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களின் ஜாதகம் ஒரு அலசல்

மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் தனுசு லக்கினம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்துள்ளார்.

இவர் ஜாதகத்தில் பல யோகங்கள் காணப்படுகின்றன .

செவ்வாய் உச்சம்

5 மற்றும் 12ம் அதிபதி 2ம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று காணப்படுகிறார்.

செவ்வாய் ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்றால் அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்  சொல்வது என்னவென்றால் செவ்வாய் உச்சம் பெற்றவர் மன உறுதி, தைரியம் மிக்கவராக இருப்பர். முன் கோபி. சகோதரர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பர். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் ஈடுபாடும் இருக்கும். வீடு, நிலம் போன்ற சொத்து இருக்கும். சண்டை போடுவதில் வல்லவராக இருப்பர். கடவுள் பக்தி உள்ளவர் என்றும் குறிப்பிடுகின்றது.

செவ்வாய் உச்சம் பெற்றதால் இவர் மருத்துவர் ஆக இருக்கின்றார்.

அரசியலை குறிக்கும் கிரகமான செவ்வாய் உச்சம்  பெற்றதால் இவர் தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துஉள்ளார்.

ஹம்ச யோகம்

4ம் அதிபதி குரு  4ல் ஆட்சி பெற்று காணப்படுவது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தை தருகிறது. ஹம்ச யோகம் இருப்பதால் நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மக்களிடம் மதிப்பு இருக்கும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார்.

பரிவர்த்தனை யோகம்

மருத்துவர் ஐயா ஜாதகத்தில்   2 மற்றும் 3 அதிபதியான சனி 5 ல் நீச்சம் பெற்றாலும் நீசன் நின்ற ராசியாதிபதியான செவ்வாய் சனி வீட்டில் உச்சம் பெறுவதும் சனி பகவான் செவ்வாய் வீட்டில் இருப்பதும் பரிவர்த்தனை யோகத்தை தருகிறது.

"தானென்ற கோள்களது மாறி நிற்க்க

தரணிதனில் பேர் விளங்குத் தனமுள்ளோன்"

கிரகங்கள் இடம் மாறிப் பரிவர்த்தனையாக நிறக் அந்த ஜாதகருக்கு இப்பூமியில் பேரும் புகழும் பொருளும் கிடைக்கும் என்று ஜோதிட பாடல் கூறுகிறது.

2ம் அதிபதி சனி மற்றும் 5ம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது சுப பரிவர்த்தனை யோகம் என்று கூறலாம். இதனால்தான் இவர் தமிழக அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்ந்து வருகிறார்.

நீச்ச பங்க ராஜ யோகம்

செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவதாலும் , நீசன் நின்ற ராசி நாதனான செவ்வாய் மகரத்தில்  உச்சம் அடைவதால் நீச்ச பங்க ராஜ யோகத்தை இவருக்கு தந்தது.

அதுபோல் 8ம் அதிபதியான சந்திரன் 12ல் நீச்சம் அடைந்தாலும் ,நீச்சன் நின்ற ராசிஅதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவதால் நீச்ச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்தியது.

ஆகையால் , இவருக்கு செவ்வாய் ,சனி , சந்திரன் தசை புக்தி அந்திரங்களில் யோக பலன்களை இவருக்கு வாரி வழங்குவார்கள்.

சிவ ராஜ்ய யோகம்

8ம் இடத்தில் அமர்ந்த சூரியனை குரு பார்ப்பதால் சிவராஜ்ய யோகம் ஏற்படுகிறது. யோகம் என்னவென்றால், குருவும், சூரியனும் பார்த்துக் கொள்ளும் அல்லது சூரியன் குரு இணைந்து அமைப்பாகும்.இந்த அமைப்புதான் ஒருவரை  மற்றவர் மீது அதிகாரம் செய்ய வைக்கும். இவர் பேசும் வார்த்தைகள் 'கட்டளை வாக்கிய'மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர் காத்திருப்பார்கள்.அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார். சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும்

குரு சந்திர யோகம்

சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 - ம் வீட்டில்  குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும்.  இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள். மருத்துவ ஐயா அவர்களும் 40 வயதுக்கு மேல்தான் தமிழக அரசியலில் நுழைந்தார் 

கோச்சார பலன்கள்

குரு பகவான் கோச்சாரத்தில் விருச்சிக ராசிக்கு  7ல் சஞ்சரிக்க இருப்பதால் , இந்த ஒரு வருட காலத்தில்  யோகமான பலன்களை மருத்துவ ஐயா சந்திக்க இருக்கிறார்கள்.

குரு விருச்சிக  ராசிக்கு  11வது வீடு, 1வது வீடு மற்றும் 3வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.

குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்,  பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள் மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

குரு பகவான் ஜன்ம ராசியை  விருச்சிகத்தை பார்ப்பதால் , உங்கள்  வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.  ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோச்சாரத்தில்  சனி 4ல் ஆட்சி பெற்று காணப்படுவதும் ,  11ல் கேது   இருப்பதும் , 11ல் உள்ள கேதுவை குரு பார்ப்பது கேள யோகத்தை ஏற்படுத்தும்.புதிய வாய்ப்புகள் ஐயாவை  தேடி வரும்.  அதனால்  பெயர், புகழ் செல்வாக்கு உயரும்.

ஆயினும் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் காரிய தடை , உடல் நிலை பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.


No comments:

Post a Comment