Search This Blog

Showing posts with label naad ijothidam. Show all posts
Showing posts with label naad ijothidam. Show all posts

Friday, September 22, 2017

வர்கோத்தமம் என்றால் என்ன? What is meant by Vargothamam in Horoscope ?

வர்கோத்தமம் என்றால் என்ன?


வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பது ஆகும்   ! அதுபோல் லக்கினம் ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

வர்கோத்தம லக்கினம்


அவுரங்ஷீப் ஜாதகம்





சந்திரன் சனி


புதன்

ராகு


சூரியன்
சனி



லக்கினம் குரு

ராசி
கேது
லக்கினம் சந்திரன்

அம்சம்








ராகு
செவ்வாய்






சுக்கிரன்


சூரியன் புதன்


குரு



செவ்வாய்

கேது
சுக்கிரன்



மேல உள்ள உதாரண ஜாதகத்தில் கும்ப லக்கினம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில இருப்பதால் கும்ப லக்கினம் லக்கினம் வர்கோத்தமம் ஆக இருக்கிறது .

சுக்கிரன் வர்கோத்தமம்







சுக்கிரன்






சுக்கிரன்





ராசி



அம்சம்




























ரிஷபத்தில் சுக்கிரன் இருந்து அம்சத்திலும் சுக்கிரன் ரிஷபத்தில் அமையப்பெற்றால் , சுக்கிரன் வர்கோத்தமம் அடைந்து காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யத்ர யத்ர கிரஹ வர்கோத்தமம்
தத்ர தத்ர கிரஹ பரிபூரணம்

என்கிறது ஒரு சம்ஸகிறத சுலோகம். 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.


ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரஹங்கள் வர்கோத்தமம் அடைந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் தன்வந்தராகவும் , செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார் .
வர்கோத்தமம் பெறும் கிரகம் மிகவும் பலம் உள்ளதாகவும் இருக்கும். ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்!  
பொதுவாக , ஒரு ஜாதகத்தில் அசுபர்கள் வர்கோத்தமம் அடைந்தாலும் , அந்த ஜாதகருக்கு அந்த கிரகம் மிகவும் நன்மையான பலன்களையே  தரும்..
வர்கோத்தமம் பெற்ற கிரஹத்தின் தசை புக்தி காலங்களில் ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும்.

4ம் அதிபதி , 9ம் அதிபதி மற்றும் 10ம் அதிபதி வர்கோத்தமம் பெற்றால் நல்ல யோகமான பலன்களை ஜாதகருக்கு அது நிச்சயமாக வழூங்கும் என்பதில் ஐயமே இல்லை.
லக்னத்துக்கு சுபராக நட்பு ,ஆட்சி மற்றும உச்சம் பெற்று வர்கோத்தமம் பெற்றால் அது முழு வழுவை பெற்றது என்பது பொருள். இத்தகைய அமைப்பு ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும்.

லக்கினம் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
நீண்ட ஆயுள் , செல்வம் , செல்வாக்கு
சூரியன் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
ஜனாதிபதி , பிரதமர் , மந்திரி , கிராம சபை உறுப்பினர் , நகராட்சி உறுப்பினர் மற்றும் அரசியலில் பெரும் பதவி
சந்திரன் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
அதீத மனோவலிமை , கதை , கவிதை ஆற்றல் நல்ல கற்பனை சக்தி
செவ்வாய் வர்கோத்தமம்
சேனாதிபதி , காவல் துறையில் உயர் பதவி , மிகுந்த மனோ தைரியம் எடுத்த காரியத்தை தடைகளை மீறி நிறைவேற்றுதல்
புதன் வர்கோத்தமம்
பேச்சற்றல் , மதிநுட்பம் , ஆராய்ச்சி திறன் , உயர் கல்வி யோகம்
குரு வர்கோத்தமம்
தெய்வ அனுக்கிரஹம் , மனோ தைரியம் ஆன்மீக ஈடுபாடு
சுக்கிரன் வர்கோத்தமம்
கலைத்துறையில் ஈடுபாடு , கவர்ச்சியான உருவம் , நகை தொழில்
சனி வர்கோத்தமம்
தலைமை தாங்கும் திறன் , தொழிலதிபர் ,
ராகு வர்கோத்தமம்
ஜாதகர் துணிச்சல் மிக்கவர் அதிர்ஷ்டசாலி  தொழிலதிபர்
கேது வர்கோத்தமம்
இறைஅருள் பெற்றவர் , ஞானி பிரபல ஜோதிடர்

. ஏழாம் வீட்டு அதிபதி, ராசி வர்கோத்தமம் பெற்றுருந்தால் , அழகான கணவன் அல்லது மனைவி அமைவாள்.
ஜீவனாதிபதி வர்கோத்தமம் அடைந்துருந்தால் , உயர்ந்த பதவி அல்லது லாபகரமான தொழில் அமையும். .

Sunday, August 27, 2017

பதவியை பறிக்குமா வருகின்ற குருபெயர்ச்சி ? குருபெயர்ச்சியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டா ? Jupiter Transit from Virgo Raasi to Libra Raasi

பதவியை பறிக்குமா வருகின்ற குருபெயர்ச்சி ? குருபெயர்ச்சியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டா ?


குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி திங்கள் Sep 02, 2017 9:30 AM இந்திய நேரப்படி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறது. குரு பகவான் Oct 4, 2018 10:33 PM வரை துலாம் ராசியில் இருப்பார்.

 குரு பெயர்ச்சி அரசியல் தலைவர்களின் பதவியை பறிக்குமா ?

அதாவது , கோச்சாரரீதியாக குரு  பகவான் சந்திரனிற்கு 10ம் இடத்திற்கு வரும் பொழுது , ஜாதகம் வலுவின்றி காணப்பட்டாலும், அல்லது தசை புக்தி வலுவின்றி காணப்பட்டாலும், ஜாதகர் தன்னுடைய  பதவி இழக்கநேரிடுகிறது. பின்பு , குரு 11ம் இடத்திற்கு வருகின்ற பொழுது  ஜாதகர் உயர் பதவியை மீண்டும் அடைகிறார்.

மகர ராசிக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10ம் இடத்திற்கு வருவதால் , அவர்கள் தொழில் , உத்யோகம் , உயர்பதவி , அமைச்சர் பதவி போன்றவற்றிற்கு குந்தகம் வர வாய்ப்புஉள்ளது. அதுபோல் , விருச்சிக ராசிக்கு 12ம் இடத்திற்கு குரு பகவான்  வருவதால் அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வாலி பட்டமிழந்ததும்ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்

என்கிறது ஒரு ஜோதிட பாடல்.

எடப்பாடி அரசு நிலைக்குமா?

வருகிற செப்டம்பர் 2 , 2017 அன்று குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குரு பெயர்ச்சி நடைபெறும் பொழுது அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடும் . சில அரசியல் வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.  எடப்பாடி அரசு நிலைக்குமா? நம்பிக்கை வாக்கு எடுப்பில் வெற்றி பெறுமா  என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.



தி மு கவின் எடப்பாடியின் அரசை கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறுமா ? என்பதை நாம் விரைவில் பார்க்கத்தான் .போகிறோம். டி டி தினகரனின் அரசை கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறுமா ? என்பது குரு பெயர்ச்சிக்கு பிறகு கண்டிப்பாக தெரிந்து விடும்.

குரு பெயர்ச்சியின் பொழுது பலருக்கு அமைச்சர் பதவிகள் தேடி  வரும். பலருடைய அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும். பல ஐ ஏ எஸ்  / ஐ பி எஸ்  அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்படுவார்கள் . ஒரு சிலர் பதவி பறிக்கப்படும் பரிதாப நிலை ஏற்படும். நீண்ட காலம் திருமணம் தடையை சந்தித்தவர்கள் திருமணம் செய்ய நேரிடும் . ஒரு சிலர் வெளிநாட்டில் சென்று வேலை அல்லது தொழில் செய்ய நேரிடும்.

மாணவர்களுக்கு கோச்சாரத்தில் குரு பகவான் வலுப்பெற்று காணப்பட்டால் , உயர் கல்வி வாய்ப்புகள் அமையும்.

குரு பெயர்ச்சியின் பொழுது பதவி இழந்த அரசியல் தலைவர்கள்




முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
பதவி வகித்த காலம் 1966 to 1977 பிறகு 1980 முதல்  1984 வரை
1975 அலகாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்புப்படி பதவி விலகி பின்னர் அரசாயலமைப்பு சட்டத்தை திருத்தி பிரதமர் ஆனார். பின்னர் எமெர்ஜென்சியை அறிவித்து 1977ல் பிரதம பத்வியை இழந்தார். பின்னர் குரு கோச்சாரத்தில் சுப நிலைக்கு வந்தபொழுது மீண்டும் 1980ல் பிரதமர் ஆனார்.



வாஜ்பாய்
மே 1966ல் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக பாராளுமன்ற தேர்தல்தளில் வெற்றிபெற்றதென் விளைவாக திரு வாஜ்பாய் அவர்கள் இந்தியா நாட்டின் பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால் பிஜேபிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாததால் 13 நாட்களிலே பிரதமர் பதவியை இழக்கநேரிட்டது.

1998-1999 வாஜ்பாய் அவர்கள் 13 மாதங்களுக்கு பிரதமர் ஆக அலங்கரித்தார்.
17 ஏப்ரல் 1999 அன்று வாஜ்பாய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 1 ஓட்டு குறைவால் தோல்வியடைந்தார்.

1999 முதல் 2004 வருடம் வரை மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் வாஜ்பாய்.
2004 வருடம் தி  மு க தன்னுடைய ஆதரவை விலகிக்கொண்டதால் வாஜ்பாய் அரசு ராஜினாமா செய்ய நேரிட்டது.



குரு  பெயர்ச்சிக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்போ  செல்வி ஜெயலலிதா பலமுறைகள் தன்னுடைய அமைச்சரவையில்  இருந்து அமைச்சர்களை நீக்கி உள்ளார். பலருடைய கட்சி பதவிகளை பறித்து இருக்கிறார்.


செல்வி ஜெயலலிதா 
குரு பெயர்ச்சியின் பொழுது (ஆகஸ்ட் 2016) சமயம் ஜெயலலிதா தன்னுடைய பால் வளத்துறை அமைச்சரான எஸ் பி ஷண்முகநாதனை அமைச்சர் பதவிலிருந்தும் கட்சி கட்சி பதவிலுருந்தும் நீக்கினார்.
குருபலம் பெற்றிருந்த ராஜேந்திர பாலாஜி பால் வளத்துறை அமைச்சர் பதவி யோகம் பெற்றார்.

செப்டம்பர் 1995 குரு பெயர்ச்சியின் பொழுது ஜெயலலிதா ஆர் எம் வீரப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.  .
ஆர் எம் வீரப்பன் ரஜினிகாந்துடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவருடைய மந்திரி பதவி பறிக்கப்பட்டது
டிசம்பர் 9 2013ல்   பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு  பிறகு
ஜெயலலிதா அப்போதைய    விளையாட்டு மற்றும் இளைஞர் நல்வாழ்வு  துறை அமைச்சரான கே வி ராமலிங்கத்தின் பதவியை பறித்தார். 

ஜூன் 7, 2013 குரு பெயர்ச்சிக்கு சற்று முன்
ஜெயலலிதா அப்போதைய தொழிலாளர்  துறை அமைச்சர் எஸ் டி செல்லபாண்டியன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எ முகதமுஜுதீன் பதவியை பறித்தார்

ஜூலை 15, 2015 அன்று , குரு பெயர்ச்சிக்கு சற்று முன்
ஜெயலலிதா அப்போதைய போக்குவரத்து  துறை  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  கட்சி பதவி மற்றும் மந்திரி பதிவியையும்   பறித்தார்.
எஸ் பி சண்முகநாதன் மற்றும் எஸ்  அப்துல் ரஹீம் ஆகிய இருவருக்கும் மந்திரி பதவி யோகம் ஜெயலலிதாவால் கொடுக்க பட்டது.

குரு பகவான் தற்போதைய பெயர்ச்சி மேஷ, மிதுனம், கன்னி கன்னி, தனுசு, கடக ராசி மற்றும் கும்பம் ராசி மக்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். 

மீனம் ராசி, சிம்ம ராசி ,மகர ராசி, துலா ராசி , விருச்சிக ராஷி மற்றும் ரிஷப ராசி மக்கள் அடுத்த ஒரு ஆண்டு ஒரு மிகவும் சவாலான நேரம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.


நான் எழுதிய 12  ராசிகளின் விரிவான குருபெயர்ச்சியின் பலன்கள்  2 செப்டம்பர் 2017 வெளியிட உள்ளேன் .