Search This Blog

Saturday, July 8, 2017

திருமண ரேகை என்றால் என்ன ? Line of Marriage and Love Marriage in Palmistry

காதலில் வெற்றி காண்பிர்களா

கையில் உள்ள உங்கள் திருமண ரேகை என்ன சொல்கிறது ?


திருமண ரேகை என்றால் என்ன ?

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, ஒருவருடைய  இதய ரேகைக்கும் ,சுண்டு விரலுக்கும் இடையே உள்ள ரேகைகள் தான் திருமண ரேகை.

Marriage line in Palmistry


காதல் திருமணம் நடக்குமா?

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, ஒருவருடைய கையில் விதி  நன்றாக அமைந்து , அந்த விதி ரேகையை சந்திர மேட்டிலிருந்து வரும் ரேகை ஒன்று விதி ரேகையை  தொட்டு நின்று , திருமண ரேகை நன்கு அமையுமானால் அந்த நபர் கண்டிப்பாக காதல் திருமணம் செய்வார். 

ஒருவருக்கு எப்போது திருமணம் நடைபெறும் ?

Marriage line in Palmistry


கீழயுள்ள படத்தில் காட்டியபடி, ஒருவருடைய  திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 வயதிலும், நடுவில் இருவில் இருந்தால் 25-30 வயதிற்குள்ளும், சுண்டுவிரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடைபெறுமாம்.

நீளமான மற்றும் குட்டையான திருமண ரேகைகள் கையில் அமைந்து இருப்பின்

Marriage line in Palmistry

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, ஒரு திருமண ரேகை நீளமாகவும், ஒரு திருமண ரேகை குட்டையாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், அதில் நீளமான திருமண ரேகை திருமணத்தையும், குட்டையான திருமண ரேகை காதல் முறிவையும் குறிக்கும்.

குறுக்கு ரேகைகளால் துண்டு பட்டிருந்தால்

branches in the marriage line in palmistry

மகிஸ்ச்சியான திருமண வாழ்வு ஏற்பட தடை ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்தவர்கள் விவாகரத்து செய்ய நேரிடும்.

ஒருவர் கையில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண ரேகைகள்

இத்தகைய அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை குறிக்காது. இத்தகைய கை உள்ளவர்கள் அழகானவர்களை கண்டால் ஜொல்லு விடுவார்கள். பலரை ஒருதலை காதல் செய்து தோல்வி காண்பார்கள்.

திருமண ரேகையில் கிளைகள்
forks at the end of the marriage line

திருமண ரேகையின் முடிவில் பல கிளைகள் இருந்தால், அது அந்த நபரின் வாழ்க்கை துணை ஆரோக்கிய பிரச்சனையால் அடிக்கடி பாதிப்புக்கு  உள்ளவார் என்பதை  குறிக்கும்..
திருமண ரேகையில் தீவுகள்
திருமண ரேகைக்கிடையே தீவுகள் இருந்தால், அது திருமணத்திற்கு பின் சிறு பிரச்சனையால் இருவரும் சிறிது காலம் தற்காலிகமாக பிரிந்து இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும்.
Marriage line in the palmistry

திருமண ரேகை கையில் இல்லாமல் இருந்தால்

திருமண ரேகைகள் இல்லாமலோ அல்லது அந்த ரேகை மேல் நோக்கி வளைந்து சுண்டுவிரலை தொடுமாறு இருந்தாலோ, வாழ்நாள் முழுவதும் சந்நியாசியாக அல்லது துறவியாக வாழ நேரிடும் .

திருமண ரேகை இருதய ரேகையை தொட்டு நின்றால்

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, திருமண ரேகை இருதய ரேகையை தொட்டு நின்றால், அது காதல் திருமணத்தை குறிக்கும். ஆனால் காதல் வாழ்க்கை  நீண்ட நாட்கள் நீடிக்காது.. காதலியின் உடல்நலம் பாதிக்க கூடும்;
Marriage line in the palmistry


இரு திருமண  ரேகைகள் கையில் காணப்பட்டால்

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, திருமண ரேகை இருதய ரேகையை தொட்டு நின்றால், அது காதல் திருமணத்தை குறிக்கும். காதல் திருமணம் தோல்வியில் முடியும் . இரண்டாம் திருமணம் நிலைத்து நிற்கும்.

Marriage line in the palmistry

திருமண  ரேகை ஆரம்பத்தில் இரு துண்டுகளாக காணப்பட்டால்

கீழயுள்ள படத்தில் காட்டியபடி, திருமண ரேகை ஆரம்பத்தில் இரு துண்டுகளாக காணப்பட்டால், திருமணம் அவ்வளுவு எளிதில்  நடைபெறாது. அப்படியே நடைபெற்றாலும் சில காலங்கள் குடும்ப வாழ்வில் மகிஸ்ச்சி இருக்காது.
Marriage line in the palmistry


காதல் தோல்வியால் தற்கொலை

திருமண ரேகை இரண்டு துண்டுகளாக காணப்பட்டு அதில் ஒரு துண்டு இருதய ரேகையும் , புத்தி ரேகையும் கடந்து நின்றால் , அப்படிப்பட்ட நபர் காதலில் தோல்வியை சந்திப்பர்.அந்த ரேகை ஆயுள் ரேகையும் கடந்து சென்றால் அப்படிப்பட்ட நபர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்.
Marriage line in the palmistry


திருமண வாழ்வில் குழப்பங்கள்


திருமண ரேகை இரண்டு துண்டுகளாக காணப்பட்டு அதில் ஒரு துண்டு இருதய ரேகையை தொட்டு நின்றால் அது திருமண வாழ்வில் பிரச்சனைகளை குறிக்கும்.

Marriage line in the palmistry

1 comment:

  1. I have a big cross in my jupiter mount. I want to know what that means...

    ReplyDelete