Search This Blog

Tuesday, December 14, 2021

ஜாதகத்தில் கரணமும் அதனால் ஏற்படும் யோகமும் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஏன் கரண் பொருத்தமும் பார்க்க வேண்டும் ?

ஜாதகத்தில் கரணமும் அதனால் ஏற்படும் யோகமும்

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஏன் கரண் பொருத்தமும் பார்க்க வேண்டும் ?

கரணம் என்றால் என்ன ?

கரணம் என்பது திதியில் பாதி. ஒரு கரணம் என்பது ஆறு டிகிரி கொண்டது. மொத்தம் 11 கரணங்கள். ஒருவர் எந்த கரணத்தில் பிறந்தவர் என்பதை வைத்து அவரது குணத்தை அறிந்து கொள்ளலாம். காலையில் ஒரு கரணமும், மாலையில் ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு.

11 வகையான கரணங்கள்

வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள்.மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் ஸ்திர கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் சர கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும்.

நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசியங்கள் இருக்கும்

கரணமும் அதன் மிருகமும் அதன் குணங்களும்

பவ

சிங்கம்

பவம் கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் போன்றவர்கள். இவர்கள் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி கொண்டவர்.

 

லட்சுமி நரசிம்மர்

பாலவ

புலி

பாலவம் கரணத்தில் பிறந்தவர்கள் புலி போன்றவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவர்.

ஐயப்பன்

கௌலவ

பன்றி,

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள். நல்ல ஆச்சாரமுடையவர், பெற்றவர்கள் மீது மதிப்பு மரியாதை கொண்டிருப்பார்கள். நிலபுலன்களைச் சம்பாதிப்பார்கள், சொத்துக்களும் வண்டி வாகன வசதியும் கொண்டிருப்பார்கள்.

பூவராக பெருமாள்

தைதூலை

கழுதை

தைதூலை கரணத்தில் பிறந்தவர்கள் தருமம் செய்ய மாட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுவார்கள்.

சேஷ்டா  தேவி

கரசை

யானை

கரசை கரணத்தில் பிறந்தவர்கள் அரசாங்கத்தின் மூலம் பணவரவு கிடைக்கும். எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவர்கள்.அனைவருக்கும் உதவக்கூடிய தரும சிந்தனை உள்ளவர்கள்.

விநாயகர்

வணிசை

எருது

வணிசை கரணத்தில் பிறந்தவர்கள் கற்பனையான வார்த்தைகளை பேசுவார்கள். இந்த உலகத்தோடு ஒத்து வாழமாட்டார்கள்.

நந்தீஸ்வரர்

பத்தரை

சேவல்

பத்திரையில் பிறந்தவர்கள் சஞ்சல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

திருச்செந்தூர் முருகன்

சகுனி

காகம்,

சகுனியில் பிறந்தவர்கள் காகம் போன்றவர்கள் நல்ல அறிவு உள்ளவர்கள், அழகானவர்கள் தைரியசாலிகள் மிகுந்த செல்வம் உடையவர்கள்.

சனீஸ்வரன்

சதுஷ்பாதம்

நாய்,

நாய் குணம் கொண்ட சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் பெண் பிரியர்கள். வறுமை உடையவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டார்கள்.

ருத்திரன் , பைரவர்

நாகவம்

பாம்பு,

நாகவத்தில் பிறந்தவர்கள் துன்பத்தை வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர் சுவையான உணவு உண்பவர்கள்

நாகராஜர் 

கிம்ஸ்துக்னம்

புழு

கிம்ஸ்துகினத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள். சகோதரர்கள் மீது பாசம் கொண்டவர்கள்.

தன்வந்திரி

 

திருமண பொருத்தத்தின் பொழுது ஏன் கரண பொருத்தமும் பார்க்க வேண்டும் ?

திருமணத்திற்கு ஜோடி சேர்க்கும் போது பத்துப்பொருத்தம், ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல கரணம் பொருத்தமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். கரணங்களுக்கும் தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு திருமணம் முறிந்து போவதற்கும் எப்படி காரணம் என்று யோசிக்கிறீர்களா?பொருத்தம் ரொம்ப முக்கியம்

தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும் , கரண பொருத்தமும்

இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள். தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே அதிகமாக பிரதிபலிப்பார்கள். நாய் குணம் கொண்டவர்களுடன் கோழி குணமோ, காகம் குணமோ கொண்டவர்களை ஜோடி சேர்த்தால் உறவு இனிக்காது தம்பதியரிடையே இதுதான் பிரிவுக்கு காரணமாகிறது.

கலவியும் கரணமும்

 ஒரு கோழி குணம் கொண்ட பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கும் காகத்தின் அதாவது சகுனி கரணத்தில் பிறந்த ஆண்களுக்கு உறவில் ஈடுபடும் நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும். அதே நேரம் ஒரு பன்றியின் குணம் கொண்ட கௌலவம் கரணத்தில் பிறந்தவரோ அல்லது நாயின் குணம் கொண்ட சதுஷ்பாதம் கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும். எனவேதான் பொருத்தமான கரணம் பார்த்து ஜோடி சேர்ப்பது நல்லது. இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.

கரண நாதனை எப்படி வலுப்படுத்துவது ?

·        தசாநாதனை வழிபாடு செய்வது போல் , கரண நாதனையும் வழிபாடு செய்து வந்தால் வாழ்வு யோகமாக அமையும்.
·        ஜெனன கர்ண நேரத்தில் கர்ணநாதரின் கோயிலில் வழிபாடு செய்தல்
 
·        கர்ண மிருகத்தை அல்லது பறவையை பயன் படுத்துதல் அல்லது அதனை துன்புறுத்தாமசால் இருத்தல்
 
·        கர்ண நாதனுக்கு உரிய உயிர் காரகத்தை அருகில் வைத்து இருத்தல் - அதாவது செவ்வாய் என்றால் உடன்  பிறந்த சகோதரர் / சகோதிரிகளிடம் பாசமாய் இருப்பது.
 
·        உங்கள் லக்கினத்திற்கு எந்த பாவத்தில் உங்கள் கர்ண நாதன் உள்ளாரோ  அந்த பாவத்தின்  கெடுபலன் குறையும்.
பவ காரணத்திற்கு உரிய செவ்வாய் ஆறில் அமைந்தால் கடன் , வழுக்கு , வம்பு  இருக்காது. 6ல் உள்ள செவ்வாய் பார்வை படும் இடங்கள் ஆன 9,12, 2ம் இடங்கள் சுபத்தன்மை பெரும்.


ஜாதகத்தில் செவ்வாய் சாரம் பெற்ற அனைத்து கிரஹங்களும் சுபத்தன்மை பெரும்.

.

கரணத்தால் உயர்ந்த நடிகர்கள்

நடிகர் MGR 

பவ கரணம்  பவ கரணத்தின் மிருகம் சிங்கம்  MGR ஒரு சிங்கத்தை தத்து எடுத்து வளர்த்தார் . அதன் பிறகுதான் சினிமாவில் வெற்றி அடைந்து பின்னர் முதல் அமைச்சர் ஆனார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன்

பாலவ கரணம் அதன் மிருகம் புலி  புலியை தத்து எடுத்தார் அதன் பிறகுதான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் அவரை தேடி வர ஆரம்பித்தன

நடிகர் விஜய் சேதுபதி

இவருடைய கரணம் பவம். பவ கரணத்தின் மிருகம். விஜய் சேதுபதி ஒரு சிங்கத்தை தத்து எடுத்த பின்னர் தான் சினிமாவில் பிரபலமானார்

நடிகர் யோகி பாபு

கௌலவ கரணம் இதன் மிருகம் பன்றி  வராகி அம்மனுக்கு கோயில் கட்டினார். ஆறே மாதத்தில் அவர் நடித்த படம் மண்டேலா ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்ய பட்டது

 

 

 

ஆகவே, ஜாதகத்தில் கரணத்திற்கு இத்தனை

 முக்கியத்துவம் உள்ளது. இதனால்தானோ , 

கரணம் தப்பினால் மரணம் என்று கூறினார்கலோ ?

உங்கள் ஜாதகத்தின் பலன்களை விரிவாக பார்ப்பதற்கு

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295-


No comments:

Post a Comment