Search This Blog

Showing posts with label பரிஹாரம். Show all posts
Showing posts with label பரிஹாரம். Show all posts

Friday, April 29, 2022

30 ஏப்ரல் 2022 அன்று ஏற்படும் சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யலாம் ? ...


30 ஏப்ரல் 2022 அன்று ஏற்படும்   சூரிய கிரணம்
பரிஹாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம் , கடகம் , விருச்சிகம் , தனுசு 
சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யலாம் ? என்ன செய்ய கூடாது ?

2022 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் உட்பட 4 கிரகணங்கள் ஏற்படவுள்ளது. அதில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்  நாளை 30ஏப்ரல்  மாதத்தில் 2022 ஏற்படவுள்ளது.

பஞ்சாங்கத்தின் படி சுபகிருது  சித்திரை 17, ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கிறது.

இந்திய நேரப்படி, இந்த கிரகணம் சனி கிழமை மதியம் 12.15 மணிக்கு தொடங்கி சனி கிழமை மாலை 04.07 மணி வரை இருக்கும். இந்த கிரகணம் மேஷ ராசியின் பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

 சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.

இந்தியாவில் தெரியுமா?

 

2022 ஆம் ஆண்டில் நிகழும் சூரிய கிரகணம் தென் மற்றும் மேற்கு-தெற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் தெரியும்.

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழும் முதல் சூரிய கிரகணம் மற்றும் இந்தியாவில் சூதக் காலம் எதுவும் இல்லை.

ஏப்ரல் 30 ஆம் தேதி 2022  கிரஹ நிலை

சனிக்கிழமை ஏற்படும் கிரகணத்தால், இம்முறை சனி அமாவாசை கூட்டு உருவாகிறது,
இந்த முறை சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழவுள்ளது

ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்று


மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு

 

மேஷ ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். விபத்துகளுக்கு ஆளாக நேரிடும், எனவே கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்

பரிஹாரம்

மேஷ ராசிக்காரர்கள் கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.

கடகம் :

 சந்திரன் கடக ராசியின் அதிபதி ஆவார்.. கிரகணத்தின் போது சந்திரன் சூரியன் மற்றும்  ராகுவுடன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.. இதனால் மனதில் அனாவஸ்யமான பயம்  வரக்கூடும். விரய  செலவுகள் அதிகரிக்கும். கிரகணத்தின் போது கடக  ராசிக்காரர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

.

பரிஹாரம்

கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் கிரகண தோஷம் நீங்கும்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள்  தங்கள் பேச்சில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.,

 வீண் வம்பு சண்டைகளில் சிக்காமல் இருக்க வேண்டும். கவனக்குறைவால் வேலையில் கேட்ட பெயர் வாங்க நேரிடும்.. நிதான அணுகு முறை மிகவும் அவசியம்..

தனுசு : எதிரிகள் தொல்லைகளை சமாளிக்க வெந்திருக்கும்.. எந்தவொரு ரகசிய தகவலையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.. உயரதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது.. , கிரகணத்தின் போது பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும்

பரிஹாரம்

 

கிரஹணம் தொடுங்குவதற்கு முன் உங்கள் வீட்டில் உள்ள ,  அரிசி, சமையல் சாமான்கள் மேல் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவும். இவை கிரகண தோஷம் ஏற்படாதவாறு தடுக்கும். கிரஹணம் முடிந்த பின் தர்ப்பையை அகற்றிவிடவும்.

கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் கூடாது.

கிரகணம் முடிந்ததும், கிரகண தோஷம் நீங்க, உங்கள் இல்லத்தை  சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள் போட்ட தண்ணீரால் வீட்டை கழுவி விட வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும்.

 

கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்யவேண்டும்.

 

கிரகணம் முடிந்ததும் உங்களால் முடிந்த   தானம் செய்யுங்கள். சூரிய கிரகணத்தின்போது கேதுவுக்குப் பிரியமான தானங்களை அளிப்பது விசேஷம். கோதுமை, கொள் அல்லது உளுந்து, தேங்காய், பழம் ஆகியவற்றைத் தானம் செய்வது நல்லது.

உங்கள் இல்லம் அருகே  புனித நதி அல்லது குளம் இருந்தால் அங்கே  குளிக்கவும்.

 

கிரகணம் முடிந்ததும், உங்கள் இல்லத்தில் வைக்க பட்டுள்ள   தெய்வ சிலைகளுக்கு கங்கை நீரை தெளித்து புனிதப்படுத்த வேண்டும்.

கிரகண நேரத்தில் சமைத்த உணவை வீட்டில் வைத்திருந்தால், அதை விலங்குகளுக்கு உணவாக அளிக்கலாம்.

சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு  12 மணி நேரத்துக்கு முனபு உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும்.

 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்கு மேற்பட்ட  பெரியவர்களுக்கு அந்த விதியில்லை.

கிரகண காலத்துக்கு முன் சமைத்த உணவுகளை கிரகணத்துக்குப் பின் உண்ண வேண்டாம் என்கின்றன சாஸ்திரங்கள்.

அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருக்களுக்கு உரிக்காத மட்டைத் தேங்காய் ஒன்றைக் கொடுத்து உங்களின் நட்சத்திரம் மற்றும் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு வந்தால் போதும். 

 

பரிஹாரம் தேவையா ?

நாம் இருக்கும் இடத்திலிருந்து சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தால் அப்போது பரிகாரம் அவசியம். ஆனால் இந்த சூரிய கிரஹணம் அமெரிக்கா மற்ற நாடுகளில் நிகழ்வதால் , பரிஹாரம் தேவை இல்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

 

மேலும் இந்த கிரகணம் அமெரிக்கா வில்  இரவு நேரத்தில் நிகழ்வதால் மற்றும் இந்தியாவில் அந்த நேரம் பகல் என்பதால்  பரிகாரம் செய்ய வேண்டும் என்ற ஒரு கருதும் நிலாவுகிறது.

கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது.சமையல் செய்யக்கூடாது.முக்கியமாக சாப்பிடக்கூடாது.தண்ணீர்அருந்தக்கூடாது.நகம் கிள்ளக்கூடாது.

தர்ப்பணம்

கிரகண காலத்தில் தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். பிறப்பு, இறப்புத் தீட்டு இருப்பவர்களும் கிரகணத்தின்போது தர்ப்பணங்கள் செய்யலாம்

மந்திர ஜபம்

கிரகண நேரத்தில் இறைவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் காலத்தில் ஒரு முறை செய்யும் மந்திர ஜபம் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். 

கர்ப்பிணிப் பெண்கள் தனிமையில் அமர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும்.

கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் கூர்மையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது, கத்தரி கொண்டு துணிகளை வெட்டக்கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை `கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295





Thursday, March 17, 2022

விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 -2023- Rahu Kethu Tran...



விருச்சிக ராசி  ராகு கேது பெயர்ச்சி  பலன்கள் 2022 -2023

ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு கேது 12-4-2022 to 30-10-2023

விருச்சிக ராசியின் குணாதிசயங்கள்

விருச்சிக ராசி நேயர்கள் என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் இறுதியில் வெற்றி பெறுவார்கள்.

பண வசதியைப் பொறுத்தவரை தேவையான அளவுக்கு இருக்கும்.

ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 

இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள்.

தேள் போன்ற குணம் கொண்டவர்கள் என்பதால், குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். 

 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு

விருச்சிக ராசி நேயர்கள் முன் கோபக்காரர்கள். அவசரத்தில் வார்த்தையை கொட்டி விடுவார்கள் , பிறகு வருத்த படுவார்கள்.

மனைவி / கணவனால் யோகம் பெரும் ராசி நேயர்கள் இவர்கள்.

ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11,ஆகிய இடங்களில் அமரும் போது நல்ல பலனை தரக்கூடியவை.

ராகு கேதுவுக்கு  7 பார்வை விஷேசமானது.

 இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ,சிம்மம் ,கன்னி ,விருச்சிகம் , தனுசு , கும்பம் , மீனம் ராசிகளுக்கு நல்ல யோகத்தை தரும்.

ரிஷபம், மிதுனம் , கடகம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

இது நாள் வரை , விருச்சிக ராசி நேயர்கள் அனுபவிக்காத துன்பமே இல்லை என்றே சொல்லலாம். ஏழரை சனி , ஜென்ம ராசியில் கேது , களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில ராகு , மற்றும் 4ம் இடத்தில் இருந்ததால் , பல்வேறு சோதனைகள் , துன்பங்கள் ,துயரங்கள்  எல்லாம் விருச்சிக ராசி நேயர்கள் அனுபவித்து வந்தனர்.

இப்பொழுது , விருச்சிக ராசிக்கு  கோச்சரா ரீதியாக 12ல் கேது , 6ல் ராகு, 5ல் குரு , 3ல் சனி ஏப்ரல் மாதத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , மிக அற்புதான பலன்கள் விருச்சிக ராசி நேயர்களுக்கு நடை பெற இருக்கிறது. அநேக விருச்சிக ராசி நேயர்கள் பல கோடிகளை குவிக்க போகும் பொன்னான நேரம் இது.

மனதில்  தெம்பும் தைரியமும் வந்து சேரும் . இது நாள் தடை பெட்ரா  பணப்புழக்கம்  தற்சமயம் தாராள பணவரவு  ஏற்பாடாயிருக்கிறது.  ராகு கேது பெயர்ச்சி 2022 -23  விருச்சிக ராசி நேயர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை, பண வரவை  தரப்போகிறது.

இனி பிரச்சினைகள் தீரப்போகிறது.

திருமணம் கை கூடி வரும்.

நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும்.

உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும்.

 சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும்



12ல் கேது என்ன பலன்களை தருவார்

ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள், போன்றவற்றைக் கேதுதான் தருவார்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ 8, 12 இடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற வைப்பா

கோச்சாரத்தில் 12ல் உள்ள கேது பகவான் தரும் பலன்கள்

ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு உண்டாகும். மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள். அலைபாயும் மனதை உடையவர்கள். மன அமைதியின்றி இருக்கக்கூடியவர்கள். வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயமின்மை ஏற்படும். அனைத்து மக்களுடனும் பழகக்கூடியவர்கள்.

ராகுவின் நட்சத்திரம்

திருவாதிரை , ஸ்வாதி , சதயம் ஆகியவை ராகுவின் நட்சத்திரங்கள். சிவபெருமானுடைய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. நரசிம்மர் ஜென்ம நட்சத்திரம் ஸ்வாதி , வருணன் நட்சத்திரம் சதயம். ராகுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆரோக்யமாக இருப்பார்கள். பலசாலிகள்

கோச்சாரத்தில் விருச்சிக ராசிக்கு 6ல் ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் வீடு என்பது, கடன், வியாதி, உணவு பழக்கவழக்கம் வேலை  தாய்மாமனை குறிப்பது ஆறாம் வீடு. கோச்சாரத்தில்  ராகு 3, 6 மற்றும் 11 இந்த இடத்தில் இருந்தால் நன்மையை


தருவார்.

உங்கள்  எதிரிகள்  கை ஓங்கும். ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு நீங்கள் வெற்றியடைவீர்கள். .  நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பின்புதான், அடுத்த வேலைக்கு செல்வீர்கள்.

ஆறில் ராகு கோச்சாரதில் இருப்பதால் , பலவிதமான உடல் உபாதைகள் தொல்லை தரக்கூடும். வாயு தொல்லையால் கை கால் பிடிப்பு, தசை வலிகள் உண்டாகும்.இந்த ஜாதகருக்கு யோக தசை நடப்பில் இருந்தால் கெடுதல் குறையும். குறுக்கு வழியில் பணம் தேடி வரும். . தசை கெட்டு இருந்தால் ஜாதகர் படும் வேதனையை அளவிட முடியாது.

 சொந்த தொழில் மிகுந்த லாபத்தை கொடுக்கும் . உங்கள் தொழில்  பெரிய முன்னேற்றத்தை அடையும். மனைவியால் அதிகமான ஆதாயம் உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்கள் நண்பர்களினால் அதிக நன்மையே அடைவீர்கள்

6ல் ராகுவினால் ஏற்படும் பிரச்சனைகள்

பெண்களால் பிரச்சனைகளில் மாட்டி கொள்ளும் நிலை ஏற்படும். மனநல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு செரிமான பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். சிலருக்கு கடன் தொல்லை இருக்கும். எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். அதிலிருந்து தப்பிப்பதற்கான மார்க்கம் உங்களுக்கு தெரிந்து விடும்.உங்கள் ஜாதகத்தில் 6ல் உள்ள ராகு அனைத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

 


3ல் சனி

27-12-2023 சனி பெயர்ச்சி நடைபெறும்  .

ராசிக்கு 3, ஆம் வீடு சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார்.


குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்


செய்யும் தொழில் வளர்ச்சியடையும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

 திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.
9-ம் இடத்தை
9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருமணம் கைகூடிவரும்.

தெய்வ அனுகூலம் கிட்டும். இதுவரை தடைபட்ட காரியங்கள் கைகூடும். வெற்றி தேடி வரும். வெளியூர் பயணம் அனுகூலம் ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள்.



குரு 11ம் இடத்தை பார்ப்பதால்

 எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.

பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடுதல், புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்

எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி , தைரியம் , திடீர் பண வரவு உண்டாகும்.

 வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.

குரு ராசியை பார்ப்பதால்

உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

 பண வரவு அதிகரிக்கும். 

பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்

வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.

5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.

குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.

 பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும்.

கவுரவ பதவிகள் தேடி வரும்.

பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம்

ராகு 6லும் கேது 12ல் இருக்கப் பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படலாம். இதனால் அமைதியற்ற நிலை இருக்கும். பல இடையூறுகள் ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். 6ம் இடத்தில் ஏதேனும் ஒரு கோள் இருப்பின் அதைப் பொறுத்து அவருக்கு உடல் நலம் மேம்படுவதும், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடும் அமைப்பு இருக்கும்.

பரிஹாரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது.

 நாகர்கோவில் நாகராஜா கோவில் சர்ப்ப தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஆவணி ஞாயிறு நாளில் இங்கு சென்று வழிபடலாம்.

வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் ராகு கேது ஒரே உருவத்தில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்திரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295 


Sunday, May 23, 2021

கண் திருஷ்டி என்றால் என்ன ?அதனை நீக்க என்ன பரிஹாரம் செய்யவேண்டும் ?

 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

கண் திருஷ்டி என்றால் என்ன ?அதனை நீக்க என்ன பரிஹாரம் செய்யவேண்டும் ?



ஒருவர் எதிர்பார்த்தது மற்றவர் களுக்குக் கிடைக்கும்போதோ, அல்லது ஒருவருக்கு ஏதேனும் நல்லது நடக்கும்போதோ... அதனால் மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை என்றெல்லாம் உண்டாகும். இதுவே பொருமல். இதனால் ஏற்படுவதே கண் திருஷ்டி. இந்த தீய எண்ணம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. இதனால்தான் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொல்லி வைத்தார்கள்.

கண் திருஷ்டியால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகங்கள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம், பொருள் இழப்பு என ஏதேனும் ஒன்று வரிசையாக வந்துகொண்டே இருக்கும்.

கணவன் மனைவி உறவு விரிசல் - கெட்ட கனவுகள்



தம்பதி இடையே காரணமே இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் சுபநிகழ்ச்சிகள், ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு, இஷ்டமானதே சமைத்திருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது முதலானவை என சிக்கல்பிக்கல்களும் குழப்பத் தவிப்புகளும் இருந்துகொண்டே இருக்கும்.

மீன் தொட்டி வாஸ்து பரிஹாரம்

வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்றும் கருப்பு, சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை அதில் வளர்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.வீட்டில் வாசலுக்கு எதிராக, கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம். இல்லத்தில், மெல்லிய வாத்திய இசையை அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம்.



கற்றாழை, சப்பாத்திக் கள்ளி

வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா முதலானவற்றை வளர்க்கலாம்.

ஆகாச கருடன்

ஆகாசச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி, வீட்டு வாசலின் மேற்பகுதியில் தொங்க விடலாம்.



கல் உப்பு தண்ணீர் குளியல்

வாரத்துக்கு ஒருமுறையேனும் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாகக் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் முதலானவை நீங்கும்.அவரவர் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ இப்படியாகக் குளிக்கலாம்!



எலுமிச்சைபழம் திருஷ்டி பரிஹாரம்

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்குவதற்கு எலுமிச்சைபழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். வாரந் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இப்படிச் செய்வது நலம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசுங்கள்.



அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி -சாம்பிராணி தூபம்

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி முதலான நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை மற்றும் அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டி வேண்டிக்கொண்டால், திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் என்பது உறுதி..