2022 ஆம்
ஆண்டில் இரண்டு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் உட்பட 4 கிரகணங்கள் ஏற்படவுள்ளது.
அதில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை 30ஏப்ரல் மாதத்தில் 2022
ஏற்படவுள்ளது.
பஞ்சாங்கத்தின்
படி சுபகிருது சித்திரை 17,
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை 04:07 வரை நீடிக்கிறது.
இந்திய நேரப்படி, இந்த கிரகணம் சனி கிழமை மதியம் 12.15 மணிக்கு தொடங்கி சனி கிழமை மாலை 04.07 மணி வரை இருக்கும். இந்த
கிரகணம் மேஷ ராசியின் பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. சந்திரன்
சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய
கிரணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் தெரியுமா?
2022 ஆம்
ஆண்டில் நிகழும் சூரிய கிரகணம் தென் மற்றும் மேற்கு-தெற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல்,
அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் தெரியும்.
2022 ஆம்
ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழும் முதல் சூரிய கிரகணம் மற்றும் இந்தியாவில் சூதக்
காலம் எதுவும் இல்லை.
ஏப்ரல் 30 ஆம் தேதி 2022 கிரஹ நிலை
சனிக்கிழமை ஏற்படும் கிரகணத்தால், இம்முறை சனி அமாவாசை கூட்டு உருவாகிறது, இந்த முறை சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழவுள்ளது
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்று
மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு
மேஷ ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேஷ ராசிக்காரர்கள்
எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். விபத்துகளுக்கு
ஆளாக நேரிடும், எனவே கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மிகவும்
எச்சரிக்கையாக இருங்கள்
பரிஹாரம்
மேஷ ராசிக்காரர்கள்
கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.
கடகம் :
சந்திரன் கடக ராசியின் அதிபதி ஆவார்.. கிரகணத்தின் போது சந்திரன்
சூரியன் மற்றும் ராகுவுடன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்..
இதனால் மனதில் அனாவஸ்யமான பயம் வரக்கூடும்.
விரய செலவுகள் அதிகரிக்கும். கிரகணத்தின் போது
கடக ராசிக்காரர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
.
பரிஹாரம்
கிரகணத்தின்
போது காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் கிரகண தோஷம் நீங்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் பேச்சில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.,
வீண் வம்பு சண்டைகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.
கவனக்குறைவால் வேலையில் கேட்ட பெயர் வாங்க நேரிடும்.. நிதான அணுகு முறை மிகவும் அவசியம்..
தனுசு
: எதிரிகள்
தொல்லைகளை சமாளிக்க வெந்திருக்கும்.. எந்தவொரு ரகசிய தகவலையும் மனதில் வைத்து கொள்ள
வேண்டும்.. உயரதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது.. , கிரகணத்தின் போது பயணங்கள் மேற்கொள்வதை
தவிர்க்கவும்
பரிஹாரம்
கிரஹணம் தொடுங்குவதற்கு முன் உங்கள் வீட்டில்
உள்ள , அரிசி, சமையல் சாமான்கள் மேல் தர்ப்பை புல்லை போட்டு
வைக்கவும். இவை கிரகண தோஷம் ஏற்படாதவாறு தடுக்கும். கிரஹணம் முடிந்த பின்
தர்ப்பையை அகற்றிவிடவும்.
கர்ப்பிணிப்
பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் கூடாது.
கிரகணம் முடிந்ததும், கிரகண தோஷம் நீங்க,
உங்கள் இல்லத்தை சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள் போட்ட தண்ணீரால் வீட்டை கழுவி விட
வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும்.
கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்யவேண்டும்.
கிரகணம் முடிந்ததும் உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். சூரிய கிரகணத்தின்போது
கேதுவுக்குப் பிரியமான தானங்களை அளிப்பது விசேஷம். கோதுமை, கொள் அல்லது உளுந்து, தேங்காய்,
பழம் ஆகியவற்றைத் தானம் செய்வது நல்லது.
உங்கள் இல்லம் அருகே புனித நதி அல்லது குளம் இருந்தால் அங்கே குளிக்கவும்.
கிரகணம் முடிந்ததும், உங்கள் இல்லத்தில்
வைக்க பட்டுள்ள தெய்வ சிலைகளுக்கு கங்கை நீரை
தெளித்து புனிதப்படுத்த வேண்டும்.
கிரகண நேரத்தில் சமைத்த உணவை வீட்டில் வைத்திருந்தால்,
அதை விலங்குகளுக்கு உணவாக அளிக்கலாம்.
சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு 12 மணி நேரத்துக்கு முனபு உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும்.
7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு அந்த விதியில்லை.
கிரகண காலத்துக்கு முன் சமைத்த உணவுகளை
கிரகணத்துக்குப் பின் உண்ண வேண்டாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
அருகிலுள்ள
கோயிலுக்குச் சென்று, குருக்களுக்கு உரிக்காத மட்டைத் தேங்காய் ஒன்றைக் கொடுத்து உங்களின் நட்சத்திரம்
மற்றும் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு வந்தால் போதும்.
பரிஹாரம்
தேவையா ?
நாம் இருக்கும் இடத்திலிருந்து சூரிய கிரகணத்தைப்
பார்க்க முடிந்தால் அப்போது பரிகாரம் அவசியம். ஆனால் இந்த சூரிய கிரஹணம் அமெரிக்கா
மற்ற நாடுகளில் நிகழ்வதால் , பரிஹாரம் தேவை இல்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
மேலும் இந்த கிரகணம் அமெரிக்கா வில் இரவு நேரத்தில் நிகழ்வதால் மற்றும் இந்தியாவில்
அந்த நேரம் பகல் என்பதால் பரிகாரம் செய்ய வேண்டும்
என்ற ஒரு கருதும் நிலாவுகிறது.
கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?
சூரிய கிரகணத்தை
நேரடியாக காணக்கூடாது.சமையல் செய்யக்கூடாது.முக்கியமாக சாப்பிடக்கூடாது.தண்ணீர்அருந்தக்கூடாது.நகம்
கிள்ளக்கூடாது.
தர்ப்பணம்
கிரகண காலத்தில்
தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்வதன்
மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். பிறப்பு, இறப்புத் தீட்டு இருப்பவர்களும்
கிரகணத்தின்போது தர்ப்பணங்கள் செய்யலாம்
மந்திர ஜபம்
கிரகண நேரத்தில்
இறைவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் காலத்தில் ஒரு முறை செய்யும் மந்திர
ஜபம் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம்.
கர்ப்பிணிப் பெண்கள் தனிமையில் அமர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பது கருவில்
இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும்.
கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் கூர்மையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது, கத்தரி கொண்டு துணிகளை வெட்டக்கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை `கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment