Search This Blog

Showing posts with label Jathaga pariharam. Show all posts
Showing posts with label Jathaga pariharam. Show all posts

Wednesday, August 9, 2017

உச்சம் பெற்ற கிரஹங்கள் எந்த மாதிரியான யோகங்களை ஜாதகருக்கு தருவார்? Exalted Planets in Horoscopes give what type of Yogas?

உச்சம் பெற்ற கிரஹங்கள் எந்த மாதிரியான யோகங்களை ஜாதகருக்கு தருவார்?


ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரஹங்கள் யோகம் தருமா ? நிச்சயம் தரும் . கூகுளின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை வருட சம்பளம் என்ன தெரியுமா ?  ரூபாய் 1450 கோடி ஆகும். அதாவது ஒரு நாளைக்கு அவரின் சம்பளம் சுமார் ரூபாய் 3 கோடி ஆகும். ஆகவே , ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள கோடீஸ்வர யோகம் என்பது உண்மைதான் என்று நிரூபணம் ஆகிறது.
சூரியன்
Lord Sooriyan

சூரியன்
அரசாங்கத்தில் உயர் பதவி , தொழில் அதிபர் , மந்திரி , ஜனாதிபதி , பிரதமர் , பஞ்சாயத்து தலைர்வர் , மன்ற உறுப்பினர் , நாட்டாண்மை , பொது தொண்டு ஆற்றுவதில் பெயர் புகழ் வாட்டசாட்டமான உடல் அமைப்பு, நோயற்ற வாழ்வு , நீண்ட ஆயுள்.

சந்திரன்
Lord Chandiran


சந்திரன்
நல்ல கற்பனா சக்தி, கதை கவிதை போன்றவற்றில் நிபுணத்துவம் , அனைவரிடமும் ஒத்து போகுதல்.வாசிகரத்தன்மை , ஜோதிடத்தில் புலமை, உயர் கல்வி. கல்வியால் திரண்ட செல்வம்.
செவ்வாய்
Lord Mars

செவ்வாய்
படை தளபதி , மனதைரியம் , துணிச்சலான காரியங்களை மேற்கொள்ளுதல், தைரியமாக முடிவுகளை மேற்கொள்ளுதல் , பேச்ச்சாற்றால், நிலபுலன்கள் சேர்க்கை , வாகன யோகம், அரசாங்க ஆலோசகர்.

புதன்
Lord Bhuthan

புதன்
சகல கலைகளிலும்  வித்தகர் , ஆராய்ச்சியாளர் ,  கல்வி சங்கீதம் இசை போன்றவற்றிலும் நிபுணத்துவம்,  ஜோதிடம், கணக்கு, கணிதம் கம்ப்யூட்டர் துறைகளில் ஈடுபாடு,  உயர் பதவி வகித்து வாழும் பேறு பெற்றவர். கதை கவிதை போன்றவற்றில் நிபுணத்துவம் , பிரபல வழக்குரைஞர்.
குரு
LORD GURU

குரு
சொத்து சுகமும், வண்டி, வாகனமும் , திரண்ட செல்வ சேர்க்கை டையவர்கள், கல்வி வித்தை அறிவு ஞானம் மிக்கவர்கள், தான தருமம் செய்வதில் விருப்பம் உடையவர்கள், தெய்வ அருள்உடையவர்கள்

சுக்கிரன்
LORD VENUS

சுக்கிரன்
உயர் கல்வி. கல்வியால் திரண்ட செல்வம், சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள், சினிமா சங்கீதம் துறைகளில் பெரும் புகழும் அடைபவர்கள், தங்களை அழுகு படுத்தி பார்ப்பவர்கள்.
சனி
LORD SATURN

சனி
நீண்ட ஆயுள், திடகாத்திரமான உடல் நலம், .கிராம நகர  அதிகாரியாகவும்  , தொழிலாளர்  தலைவர்களாகவும் , உழைத்து முன்னேறுவர், செலவை குறைத்து  சேமிப்பு அதிகம் சேர்பவர்களாகவும் இருப்பர்.

Monday, June 26, 2017

ஜாதகம் இல்லையா ? கைரேகை மூலம் உங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளலாமா? Prediction through Palmistry for those who do not have Horoscope ?

ஜாதகம் இல்லையா ? கைரேகை மூலம் உங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளலாமா?

Palmistry  various lines and mounts

கை ரேகை சாஸ்திரம் முதன் முதலில் பல ஆயிர வருடங்குளுக்கு முன்பு முனிவர்களாலும் சித்தர்களாலும் இயற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சீரோ என்ற ஆங்கிலேயர் தஞ்சாவூர் வந்து சில ஆண்டுகள் தங்கி சரோபோஜி நூலகத்தில் இருக்கின்ற ஓலை சுவடிகளை அரைச்சி செய்து பின்பு கைரேகையை பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதினார்.
அதன்பின்பே , கைரேகை சாஸ்திரம் உலக அளவில் பிரபலம் அடைந்தது. இதை சீரோ தன்னுடைய கை ரேகை சாஸ்திரம் நூலில் முன்னுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
various lines and mounts in Palmistry


ஒருவருக்கு பிறந்த ஜாதகம் இல்லை என்றால் அவருடைய எதிர்காலத்தை அ வருடைய கைரேகை வைத்து எளிதாக கணிக்க முடியும்.


உங்கள் பிறந்த ஜாதகம் இல்லையா ?  உங்கள் கை ரேகையை வைத்து உங்கள் எதிர்காலத்தை எப்படி தெரிந்து கொள்ளுவது?
If you don’t have your birth chart, how to find out your future through Palmistry?
Please click the following link:


கை ரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தை மற்றும் குணாதிசியங்களை பற்றி எப்படி அறிவது?

Life line in Palmistry
ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை
ஒருவருக்கு நீண்ட ஆயுளா?   அல்லது அற்ப ஆயுளா ?  ஒருவரின்ஆயுளையும், அவரின் உடல் ஆரோக்கியத்தையும் பற்றி அறியலாம்

புத்தி ரேகை
Head  line in Palmistry

புத்தி ரேகை
ஒருவருக்கு உயர் கல்வி உண்டா ? புத்திசாலியா? அறிவாற்றலையும் பற்றியும்,. , புத்தியால் கிடைக்கும் வெற்றியையும் பற்றி அறியலாம்


இருதய ரேகை‍‍
Heart Line in Palmistry

இருதய ரேகை‍‍
ஜாதகரின் அன்பு வயப்படும் தன்மை, காதல் , உணர்ச்சிவசபடும் தன்மை , கூட்டு தொழில் வெற்றி பெறுபவரா? நிறைய நண்பர்கள் உண்டா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

விதி ரேகை
Fate Line in Palmistry

விதி ரேகை

ஒருவருக்கு செல்வ சேர்க்கை உண்டா? அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

காதல் ரேகை

காதல் ரேகை
ஜாதகரின் காதலில் வெற்றி பெறுவாரா?. காதலில் தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும்.

செவ்வாய் ரேகை
Mars Line in Palmistry

செவ்வாய் ரேகை
ஆயுள் ரேகைக்கு இணையாக காணப்படும்.  இந்த ரேகை வலுப்பெற்று காணப்பட்டால் நில புலன்கள் , வீடு , மனை நிறைய அமையும். ஜாதகரை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும்


ஞான ரேகை அல்லது குரு வளையம்
Ring of Solomon in Palmistry

ஞான ரேகை அல்லது குரு வளையம்
எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஞானம் ,ஆபத்துகளில் இருந்து தப்பிக்கும் சாமர்த்தியம், தெய்வ அனுக்கிரஹம் , சித்தராக ஆகும் வாய்ப்பு

சூரிய ரேகை

சூரிய ரேகை
 ஜாதகர் அதிர்ஷ்ட காரக இருப்பர் வெற்றிகள் இவரை தேடி வரும் கோடீஸ்வராக இருப்பர்

நட்சத்திரங்கள், வெட்டுகள், முக்கோணங்கள், சதுரங்கள், திரிசூலங்கள், மற்றும் வளையங்கள் ஆகியவைவற்றிற்கு  தனி தனி பலன்கள் கூறப்பட்டுள்ளன

குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால்

படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம்.

அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரிகிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.
கையில் X வடிவில் குறி இருந்தால்
X sign  in Palmistry

  • ·        பெரிய தலைவர்களாக இருப்பார்கள்

    எந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிப்பார்கள்.

  • · மிகவும் வலிமை பொருந்திய குணம் கொண்டவர்கள். இவர்களிடம் துரோகம் செய்வதும், பொய் கூறி தப்பிப்பதும்  முடியாத காரியம்.

  • · இவர்கள் மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் வலிமையாக இருப்பார்கள்.

  • · இவர்கள் தீர்க்கதரிசன குணங்கள்கொண்டவர்காளாகவும் தெளிவான பார்வை கொண்டவர்கள் ஆகவும் இருப்பார்கள்.

ரஷ்ய அதிபர் புடின்
Russian President Viladimir Putin

இரண்டு உள்ளங்கை ரேகைகளிலும் இந்த X குறி உள்ளவர்கள் தனித்தன்மை வாய்ந்து இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆபிரகாம் லிங்கனுக்கும் இருக்கிறது / இருந்தது.

மாவீரன் அலெக்சாண்டர்
Alexander the Great

மாவீரன் அலெக்சாண்டர் மிகப்பெரிய அரசராக விளங்குவார் என்று அவரது இரண்டு கைகளில் இருந்த X குறியை வைத்து அவர் பிறந்தபொழுது ராஜ ஜோதிடர்கள் கூறி இருந்தார்களாம்.

கோடீஸ்வர யோகம்’ தரும் சனி வளையம்
Ring of Saturn in Palmistry

நடுவிரல் என்றும், சனி விரல் என்றும் அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு ‘சனி வளையம்’ என்று பெயர்.

ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்ல, அதே சமயம் விதி ரேகை என்னும் ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை ‘கோடீஸ்வர யோகம்’ என்கிறது கைரேகை சாஸ்திரம்.

இந்த அமைப்பு எல்லோர் கையிலும் அமைய வாய்ப்பில்லை. அபூர்வமாக ஒரு சிலருக்கே இந்த யோகம் அமைகிறது. இவ்விதம் ரேகை அமைந்தவர்கள் கோடீஸ்வரராக மாறுவது நிச்சயம்.

குரு வலயம் அல்லது சாலமன் வலயம்
Ring of Solomon in Palmistry

இந்த வலயம் ஜாதகரின் குரு மேட்டில் காணப்படும். இந்த வலயம் அமைந்தால் , ஜாதகர் தெய்வ அனுக்கிரஹம் பெற்றவர் .வாக்கு பலிதம் ஏற்படும் .நன் நடத்தை உடையவர். மந்திரி பதவி சட்டசபை பாராளுமன்ற மற்றும் கிராம நிர்வாக தலைவர்களாகவும் இருப்பார்கள். அரசியலில் , பெரும் நிறுவனங்களில் தலைவராகவும் இருப்பார்கள். மதகுரு, , யோகாசனம், ஜோதிடத்தில் பெயர் பெற்று விளங்குவார்கள்.

கையில் காணப்படும் நட்சத்திர குறிகள்

சூரிய மேட்டில் நட்சத்திரம்
star on Sun Line Palmistry

சூரிய மேட்டில் நட்சத்திரம் இருந்தால் நல்லது . பெயர் புகழ் பதவிகள் தேடி வரும். சூரிய மேட்டில் நட்சத்திரம் இருந்தால் நல்லது . பெயர் புகழ் பதவிகள் தேடி வரும். லாட்டரி , சூதாட்டம் , பரிசு குலுக்கல்கள் , போன்றவற்றின் மூலம் பண வரவு ஏற்படும். கலை துறையில் மூலம் பெயர் புகழ் தன வரவு ஏற்படும். உயர் பதவிகள்  வீட்டு வாசலில் வந்து காத்து கிடக்கும்.

நடு கையில் உள்ள நட்சத்திர குறி
star on centre of the hand  Palmistry

நடு கையில் உள்ள நட்சித்திர குறி நல்ல பலன்களை தராது. ஜாதகர் யார் பேச்சையும் கேக்க மாட்டார். அவசரமான தவறான முடிவுகளை எடுப்பவர். தவறான முடிவுகளை எடுத்து பாதிப்பு அடையக்கூடும்.

ஹிருதய ரேகையில் உள்ள நட்சித்திரம் குறி
star on Heart Line  Palmistry

இந்த நட்சித்திர குறி நல்ல பலன்களை தராது. உடல் நலக்கேடு , விபத்துகள் ஆகியவற்றால் பாதிப்புகள் ஏற்படும். காதல் தோல்வி , கூட்டு தொழிலில் கூட்டாளிகளால் பிரச்னை போன்றவற்றை தரும்.

புக்தி ரேகையில் உள்ள நட்சத்திர குறி
Star on the Mind Line Palmistry

விபத்துகளால் காயம் , நோய்களால் பாதிப்பு , வேலையில் சங்கடங்கள் , தலையில் காயம் , தலை வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். நட்சத்திர குறி புக்தி ரேகை மீது இல்லாமல் , புக்தி ரேகையை ஒட்டி இருந்தால் , ஜாதகர் மிகுந்த புத்திசாலியாக இருப்பார். தைரியமான முடிவுகளை எடுப்பார் தன்னுடைய புக்தியை மூலதனமாக வைத்து முன்னேறுவர்.

விதி ரேகையின் மேல் உள்ள நட்சித்திர குறி
Star on the Fate Line Palmistry

ஜாதகர் தன்னுடைய சிறுவயதில் பெற்றோரை இழக்க நேரிடும். சுய முயற்சியால் முன்னேறியிருப்பார். விதி ரேகையை ஒட்டி நட்சித்திர குறி காணப்பட்டால் செய்யும் தொழிலில் / வேலையில் பெரும் சாதனைகள் செய்வார். நிர்வாகத்திறமை நிறைந்து காணப்படும்.

ஆயுள் ரேகையில் மேல் உள்ள நட்சித்திர குறி
Star on the Life Line Palmistry

ஜாதகர் தன்னுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.


Free Mass Ping