Search This Blog

Wednesday, August 9, 2017

உச்சம் பெற்ற கிரஹங்கள் எந்த மாதிரியான யோகங்களை ஜாதகருக்கு தருவார்? Exalted Planets in Horoscopes give what type of Yogas?

உச்சம் பெற்ற கிரஹங்கள் எந்த மாதிரியான யோகங்களை ஜாதகருக்கு தருவார்?


ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரஹங்கள் யோகம் தருமா ? நிச்சயம் தரும் . கூகுளின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை வருட சம்பளம் என்ன தெரியுமா ரூபாய் 1450 கோடி ஆகும். அதாவது ஒரு நாளைக்கு அவரின் சம்பளம் சுமார் ரூபாய் 3 கோடி ஆகும். ஆகவே , ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள கோடீஸ்வர யோகம் என்பது உண்மைதான் என்று நிரூபணம் ஆகிறது.
சூரியன்
Lord Sooriyan

சூரியன்
அரசாங்கத்தில் உயர் பதவி , தொழில் அதிபர் , மந்திரி , ஜனாதிபதி , பிரதமர் , பஞ்சாயத்து தலைர்வர் , மன்ற உறுப்பினர் , நாட்டாண்மை , பொது தொண்டு ஆற்றுவதில் பெயர் புகழ் வாட்டசாட்டமான உடல் அமைப்பு, நோயற்ற வாழ்வு , நீண்ட ஆயுள்.

சந்திரன்
Lord Chandiran


சந்திரன்
நல்ல கற்பனா சக்தி, கதை கவிதை போன்றவற்றில் நிபுணத்துவம் , அனைவரிடமும் ஒத்து போகுதல்.வாசிகரத்தன்மை , ஜோதிடத்தில் புலமை, உயர் கல்வி. கல்வியால் திரண்ட செல்வம்.
செவ்வாய்
Lord Mars

செவ்வாய்
படை தளபதி , மனதைரியம் , துணிச்சலான காரியங்களை மேற்கொள்ளுதல், தைரியமாக முடிவுகளை மேற்கொள்ளுதல் , பேச்ச்சாற்றால், நிலபுலன்கள் சேர்க்கை , வாகன யோகம், அரசாங்க ஆலோசகர்.

புதன்
Lord Bhuthan

புதன்
சகல கலைகளிலும்  வித்தகர் , ஆராய்ச்சியாளர் கல்வி சங்கீதம் இசை போன்றவற்றிலும் நிபுணத்துவம்ஜோதிடம், கணக்கு, கணிதம் கம்ப்யூட்டர் துறைகளில் ஈடுபாடுஉயர் பதவி வகித்து வாழும் பேறு பெற்றவர். கதை கவிதை போன்றவற்றில் நிபுணத்துவம் , பிரபல வழக்குரைஞர்.
குரு
LORD GURU

குரு
சொத்து சுகமும், வண்டி, வாகனமும் , திரண்ட செல்வ சேர்க்கை டையவர்கள், கல்வி வித்தை அறிவு ஞானம் மிக்கவர்கள், தான தருமம் செய்வதில் விருப்பம் உடையவர்கள், தெய்வ அருள்உடையவர்கள்

சுக்கிரன்
LORD VENUS

சுக்கிரன்
உயர் கல்வி. கல்வியால் திரண்ட செல்வம், சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள், சினிமா சங்கீதம் துறைகளில் பெரும் புகழும் அடைபவர்கள், தங்களை அழுகு படுத்தி பார்ப்பவர்கள்.
சனி
LORD SATURN

சனி
நீண்ட ஆயுள், திடகாத்திரமான உடல் நலம், .கிராம நகர  அதிகாரியாகவும்  , தொழிலாளர்  தலைவர்களாகவும் , உழைத்து முன்னேறுவர், செலவை குறைத்து  சேமிப்பு அதிகம் சேர்பவர்களாகவும் இருப்பர்.

3 comments:

  1. பிறந்த தேதி 22/02/1980
    நேரம் பகல் 3.50
    சிததார்தி வருடம் மாசி மாதம் 10 ம் நாள்
    பலன்கள் சொல்லுங்கள் ஐயா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பிறந்த தேதி 19/04/1983 நேரம் பகல் 2.30

    ReplyDelete