Search This Blog

Tuesday, December 14, 2021

நல்ல காரியங்களை தாரா பலன் அறிந்து செயற்பாட்டால் வெற்றி நிச்சயம் --ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295

       தாரா பலன் என்றால் என்ன?

நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் தாரா அல்லது தாரை என்று பெயர். எனவே நட்சத்திர வடிவங்களை தாரை  வடிவங்கள் என்று அழைக்கலாம்.

தாரா, தாரை போன்றவைகள் நட்சத்திரங்களின் குறி ஈடாகவே ஜோதிட வேதம் சொல்கிறது . ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் இருக்கும் 12 ராசிகளில் எந்த  நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

ஒரு ஜாதகரின்  வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற நிகழ்வுகள்  துவங்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதுஎன்பதை பார்க்க வேண்டும் அந்த நட்சத்திரமாவது  அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை முன் கூட்டியேஅறிவது  தான்  தாரா பலன் என்று அழைக்க படுகிறது.

   தாரா பலன் எப்படிகணக்கிடப்படுகிறது ?

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில்இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும்மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

                ஜென்ம தாரை

உங்கள் பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் ஒன்பது  நட்சத்திரங்கள் ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. ஜென்ம தாரை மண்டலம் தற்போது நாம் எடுத்திருக்கும் பிறவிக்கான வழிபாடுகள் பற்றி அழகாகவே சொல்லிவைத்திருக்கின்றன.

               அனு ஜென்ம தாரை

அதற்கு அடுத்து வரும் ஒன்பது நட்சத்திரங்கள்அனு ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இவை சஞ்சித கர்மா என்று அழைக்கப்படுகிறது

                  திரி ஜென்ம தாரை

சேகரிக்கப்படும் கர்ம வினைகளால் ஏற்படும் அசுப நிகழ்வுகளை எவ்வாறு தெய்வ வழிபாடுகள் மூலம் கையாளலாம் என்பதைக் கூறுகிறது. மீதம் இருக்கும் ஒன்பது நட்சத்திரங்கள் திரி ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இவை உங்கள் முற்பிறவி கர்ம வினைகளால் ஏற்படும் அசுப நிகழ்வுகளை எவ்வாறு தெய்வ வழிபாடுகள் மூலம் கையாளலாம் என்பதை விவரிக்கிறது.

                       தாரை வகைகள்
ஜென்ம/அனு ஜென்ம/திரி ஜென்ம தாரை மண்டலத்தில் இருக்கும் ஒன்பது நட்சத்திரங்கள் கீழ்க்கண்ட ஒன்பது வகைகளாக பிரிக்கப்படுகிறது.

ஜென்ம தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 1, 10, 19 நட்சத்திரங்கள்

சம்பத்து தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 2, 11, 20 நட்சத்திரங்கள்

விபத்து தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 3, 12, 21 நட்சத்திரங்கள்

சேம தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் 4, 13, 22 நட்சத்திரங்கள்

பிரதியக்கு தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 5, 14, 23 நட்சத்திரங்கள்

சாதக தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 6, 15, 24 நட்சத்திரங்கள்

வதை தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் 7, 16, 25 நட்சத்திரங்கள்

மித்ர தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 8, 17, 26 நட்சத்திரங்கள்

பரம மித்ர தாரை

பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக் கொண்டே வரும் 9, 18, 27 நட்சத்திரங்கள்


சுபம் தரும் தாரைகள்

ஜென்ம தாரை (50 % சுபம்)

சம்பத்து தாரை

க்ஷேம தாரை

சாதக தாரை

மித்ர தாரை

பரம மித்ர தாரை


அசுபம் தரும் தாரைகள்

விபத்து தாரை

பிரதாயக்கு தாரை

வதை தாரை

 தாரையின் பலாபலன்கள் 

ஜென்ம தாரை 

மனக்குழப்பம் தொழில்
துவங்க நல்லது இல்லை

2

சம்பத் தாரை 

தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

3

விபத் தாரை 

தவிர்க்க வேண்டிய
நாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது

4

ஷேம தாரை 

நன்மை தரக்கூடியது என்று அறியவும்

5

பிரத்யக் தாரை 

வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும்

6

சாதக தாரை 

புதிய முயற்சி, செயல்களுக்கு
சாதகமானது...எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

7

வதை தாரை 

கடுமையான தீமை தரக்கூடியது,..வாக்கு தர்க்கங்கள்
தவிர்க்கவும்

8

மைத்ர தாரை 

புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது
எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

9

பரம மைத்ர தாரை

அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்

 

தாரா பலன் எப்படி கணக்கிடப்படவேண்டும் ?

உதாரணம் : ஜென்ம நட்சத்திரம்அஸ்வினி  என்று
  வைத்து  கொள்ளுங்கள் அன்றைய
நட்சத்திரம் பூரம்
 என்றிருந்தால்  அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை சொல்லவேண்டும் 

ஆகவே, நீங்கள் உங்கள் தாரா பலத்தை அறிந்து

 செயல் பட்டால் வெற்றி நிச்சயம்


உங்கள் ஜாதகத்தின் பலன்களை விரிவாக பார்ப்பதற்கு 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295- 


No comments:

Post a Comment