பிரம்ம ஹத்தி
தோஷம் என்றால் என்ன ?
''பிரம்மஹத்தி
தோஷம் என்பது, கொடுமையான பாவங்களைச் செய்வதால்
ஏற்படுவதாக புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ளது.. பெற்ற தாய்க்கு உணவளிக்காமல்
முதியோர் இல்லத்தில் சேர்ப்பது அல்லது உதாசனபடுத்துவது , பசு வதை செய்வது , குருவுக்கு
துரோகம் செய்வது ,, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும்.
முக்கியமாக செய்நன்றி மறப்பதால்தான் இந்த தோஷம் ஏற்படுகிறது.
பெற்றவர்களை அனாதைகளாய் விடுவது
இந்த தோஷம் அமைந்தால் , ஜாதகர் என்ன கடுமையாக உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்திக்க நேரிடுகிறது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய சம்பளம் கிடைக்காது. சம்பளம் கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் வேலையில் கிடைக்காது. இந்த நிலை வாழ்வு நாள் முழுமையாக நீடிக்கும். தொழிலில் உரிய லாபம் கிடைக்காது. திறமை இருந்தும் சமூகத்தில் நல்ல நிலையை அடைய முடியாமல் தட்டு தடுமாறுவார்கள்.. அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.
பிரம்ம ஹத்தி இருப்பதை எப்படி ஜாதக
மூலமாக அறியலாம் ?
சுக ஸ்தானம் என்று அளிக்கக்கூடிய லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்தாலும்
துஷ்டாணம் என்று சொல்ல கூடிய 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கலான குரு , சுக்கிரன் , புதன் இருந்தாலும்,
திரிகோணம் ஸ்தானமான 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
குரு சனி
சேர்க்கை
ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9
- ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில்
இருக்கவேண்டும்) தோஷமாகும்.
குரு ராகு
கேது சேர்க்கை
குரு ராகு
கேது சேர்க்கை பெற்று ஜாதகத்தில் எங்கிருந்தாலும் அது பிரம்ம ஹத்தி தோஷம் தான்.
.குரு ராகு
1.இல் இருந்தால்
நாகரீக திருடன்.
2.இல் இருந்தால்
பெரும் பணம் ஐஸ்வர்யம் உண்டாகும் .ஆனால் வாழ்க்கை துணை பாதிப்படைவார்.
3.இல் இருந்தால்
சுக போகத்தில் மிதப்பார்.பயணம் உண்டு.அதீத கோபம் காரணமாக. கொலை செய்யும் வாய்ப்பு உண்டு.
4.இல் இருந்தால்
வாழ்க்கை முடிவு எதிர்பாராமல் உண்டாகும்.
5.இல் இருந்தால்
பெற்ற குழந்தைகளால் துன்பம் உண்டு.
6.இல் இருந்தால்
வலிப்பு உண்டாகும்.தேகம் நடுங்கும்.
7.இல் இருந்தால்
விவஸ்தை இல்லாமல் எல்லோருடனும் புணர்ச்சி செய்வான்.
8.இல் இருந்தால்
திருமணத்திற்கு பின் வாழ்க்கை துனைவரால் சொத்து கிடைக்கும்.ஜாதகர் அதிக இச்சை உடையவர்.
9.இல் இருந்தால்
சமரச சன்மார்க்க பேசுவான்...ஆனால் உண்மையில் அயோக்கியன்...நித்யானந்தா போல
10இல் குரு ராகு சேர்க்கை பெற்றால்..பட்டம் பதவி
உண்டு...தன் பதவியை தவறாக பயன் படுத்துவது உண்டு.
11.இல் இருந்தால் ஒருநாள் பண்டிதனாக இருப்பான்...ஒரு
நாலாவது..பிச்சை எடுப்பான்..
12.இல் இருந்தால் குல தெய்வம் துணைத் நிற்கும்.
பிரம்ம ஹத்தி
தோஷம் உதாரணம்
பைரவர் -
பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர்
- மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
இராமர் -
இராவணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தேசம் ஏற்பட்டது.
வீரசேனன்,
வரகுணபாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமி கோயிலில் பிரம்ம ஹத்தி தோஷம் கழிப்பது எப்படி ?
1.கிழக்கு
வாசல் வழியாக ஆலயத்தில் நுழைய வேண்டும். கோயில்
குலமான காருண்ய தீர்த்தத்தில் நீராட வேண்டும் அல்லது சிறிது தண்ணீரை தலையில் தெளித்து
கொள்ளவேண்டும்.
2. பிறகு
ஆதின சீட்டு கொடுக்கும் இடத்தில் ரூ 650 செலுத்தி
பிரம்ம தோஷ பரிகார ரசீதை பெற்று கொள்ளவேண்டும்.
3. பிறகு
அருகில் உள்ள படித்துறை விநாயகரை வழிபட்டு , அவர் சன்னதியை மூன்று முறை வந்து , பின்னர்
அருகில் இருக்கும் அதிகார நந்தியை மூன்று முறை வளம் வர வேண்டும்.
4. அதன் பின்னர்
பெரிய பிரகாரத்தை (அஸ்வமேத பிரகாரம்) ஒரு முறை வலம் வரவேண்டும்.
5. பின்னர்
அருகில் இருக்கும் கோசாலையில் உள்ள பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும்.
அங்கு நடக்கும் கோபூஜையில் கலந்து கொண்டு பின்னர் பரிஹாரம் செய்யும் இடத்திற்கு வரவேண்டும்.
6. பின்பு
கோயில் அர்ச்சகரால் பிரம்ம ஹத்தி தோஷம் செய்ய படும். அர்ச்சகருக்கு காணிக்கை கொடுக்க
வேண்டும்.
7. பின்னல்
அருகில் உள்ள பிரம்ம ஹத்தி சிலை அருகே உப்பு பரிஹாரம் செய்யவேண்டும். சிறிதளவு உப்பை
உள்ளங் கையில் வைத்து கொண்டு தலைக்கு மேல்
வலப்புறமாக மூன்று முறையும், இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி பின்பு காணிக்கையுடன்
அந்த உப்பை கீழே போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வரவேண்டும்.
8. பின்னர்
கோயிலின் உள்ள செல்ல வேண்டும். அங்கு வலப்புறமாக 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன . அங்கு
உங்களுடைய ஜென்ம நட்சத்திர லிங்கத்திற்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடவேண்டும்.
9. பின்னர்
ஸ்ரீ சுந்தரமஹாலிங்கேஸ்வரர் சன்னதியில் அர்ச்சனை செய்து கொள்ளவேண்டும் .
10. பின்னர்
அம்பாளுக்கும் , ஸ்ரீ மூகாம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
11. பின்னர்
மேற்கு , அல்லது தெற்கு அல்லது வடக்கு வாசல் வழியாக கோயிலை விட்டு வெளி வரவேண்டும்.
12, அதன்
பிறகு மற்ற கோயில்களுக்கு செல்லலாம் . பிறகு
, உங்கள் வீட்டுக்கு வரவேண்டும். ஆனால் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டாம்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment