Search This Blog

Wednesday, March 9, 2022

Virgo Rahu Transit 2022 -கன்னி ராசிக்கு - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2...

கன்னி ராசிக்கு ராகு - கேது பெயர்ச்சி  பலன்கள் 2022-23



கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் .

புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார்.

மேலும் நவகிரஹங்களிலே புதன் கிரகம் மட்டும்தான் கன்னி ராசியில் ஆட்சி , உச்சம் , மூலதிரிகோணம் என்ற மூன்று நிலைகளை அடைகிறது.

 

கன்னி ராசிக்காரகள் மனஉறுதி மிக்கவர்கள்.

மதி நுட்பம் நிறைந்தவர்கள்.

உயர் கல்வி , புத்தி சாதுர்யம் மிக்கவர்கள்

பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார்கள்.

பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவார்கள்.

 நீண்ட நாட்களுக்கு இவர்களால் ஒரு தொழிலாளியாக இருக்க பிடிக்காது.

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள்.

உலக விஷயங்களை தெரிந்து கொள்வதில் இவர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும்.

 பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள்.

குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள்.

சூழ்நிலைக்கு தகுந்தார் போல தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது. 

நயமாகப் பேசி பிறரை தன் வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்குப் தன வரவு தாராளமாக அமையும்கள். 

திருக்கணிதப் (12.04.2022) மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி (12.04.2022)

13.4.2022 அன்று குருப்பெயர்ச்சி மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி    யாகிறார்

ராகு சனி போல் கொடுப்பார் என்றும் , கேது செவ்வாய் போல் பலன் கொடுப்பர் என்று ஜோதிட சாஸ்திரம் கூருகிறது.

ராகு போக காரகர் . கேது ஞான காரகர்.

கன்னி ராசி நேயர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

2ல் கேது , 8 ல் ராகு இருந்தால் நாக தோஷம்

இரண்டாம் பாவத்தில் கேது இருந்தால்  இருந்தால் 8ஆம் பாவத்தில் ராகு இருக்கும்.

.இரண்டாம் இடம் வருமானத்தை சொல்லும் இடம்..

குடும்பத்தை சொல்லும் இடம்...

பேச்சு எப்படி இருக்கும் என சொல்லும் இடம்

...ராகு - ஜெனரஞ்சகர் என்றால்  கேது சாமியார் அதாவது ஒண்ணுமில்லாதவன் என அர்த்தம்..

இரண்டில் .கேது

இரண்டில் .கேது இருப்பின் பேசினாலே பகை....வருமானம் கேது இருப்பின் தடை..

8 ல் ராகு இருந்தால் குறுக்கு வழி வருமானம்

..8ஆம் இடம் என்பது அதிர்ஷ்டத்தை சொல்வது

 ....ஆயுளை சொல்வது ..

கணவன் /மனைவியின் பேச்சு தன்மை பற்றி சொல்வது..

8ம் இடம் மறைவு ஸ்தானம் என்று அழைக்க படுகிறது

அங்கு ராகு கேது இருந்தால் அந்த ஸ்தனங்கள் எல்லாம் கெடும்..இதனால்தான் நாகதோசம் என்றால் மக்கள் பயப்படக்காரணம்..!! பரிகாரமும் செய்கிறார்கள்..

2ல் கேது இருந்தால்:- பொருளாதார ஆசை இல்லாதவர், விருப்பங்கள் ஏதும் இல்லாதவர்

ராகுவின் 8ம் வீட்டில் பலன்கள் :   

கன்னி ராசிக்கு ராகு பகவான் 8ம் வீட்டில் கோச்சாரத்தில்

ராகு பகவான்  எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ஆகவே தொல்லைகள்  மறைந்து  மன நிம்மதி பெறக்கூடிய  நேரம் இது. இது நாள் வரை சங்கடங்களில் தவித்தவர்கள்   இனி நேர்பாதையில் சென்று நிம்மதியாக இருப்பீர்கள்.. எதிர்பாராத  உதவிகள் தக்க சமயத்தில்  கிடைக்கும்.  வேலையில் , தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 சுபநிகழ்ச்சிகள்

இது நாள் வரை தடை பட்ட  சுபநிகழ்ச்சிகள் இனி வரும் கால கட்டத்தில் நடக்கும் .  மருத்துவச் செலவுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின்  ஆரோக்கியம் மேம்படும். தந்தை -மகன் உறவு  மேம்படும்.. மூதாதையர்கள் வழிச் சொத்தில் இருந்த பிரச்சனைகள்  விலகும். .  எதிர்பாராத பயணங்களால் சிலவுகள் ஏற்படும்..

குடும்ப வாழ்க்கை

ராகு 8ல் உள்ளதால்  குடும்பத்தில் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருந்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.. சின்ன சின்ன கருத்துமோதல்களும் கணவன்-மனைவிக்குள்  ஏற்பட்டு அது பின்னர் விஸ்வரூபம்மாக மாற வாய்ப்பு உண்டு. ஆகையால் கவனம் தேவை;. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்பப் பிரச்னைகளை பகிர்வதை தவிர்க்கவும்..

வியாபாரத்தில்:

புதிய தொழில் முயற்சிகள் , வியபார விரிவாக்கம் ,  தவிர்க்கவும்.

நீங்கள் கொடுத்த கடன்களை  போராடித்தான் வசூலிக்க நேரிடும்.

ஸ்பெகுலேஷன், online  சூதாட்டம் ,கமிஷன், ஷேர், புரோக்கரேஜ்  எதிர்பாராத தன வரவு ஏற்படும். .

வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். .

வேலையாட்களின் ஒத்துழைப்பு முழுமையாக தருவார்கள்..

கூட்டுத்தொழிலில், பங்குதாரர்கள் உங்களுடன் ஒத்துழைப்பர்கள்.

உத்தியோகத்தில்:

மேலதிகாரியின்  ஆதரவு இனிமேல் உங்களுக்கு உண்டு.புதிய வேலை , வேலையில் முன்னேற்றம் , பதவி உயர்வு ,  சம்பள உயர்வு ஆகியவை உண்டு.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment