துலாம்:
துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார்
திருக்கணிதப் (12.04.2022) மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி (12.04.2022)
7
கேது/ராகு
சுக்கிரனை
ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் துலாம் ராசியில் கேதுவும் 7
ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகு துலா
ராசிக்கு 7-ஆம் வீட்டிலும், கேது 1-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் நீங்கள் அணைத்து
விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த
வேண்டும்..7ம் இடத்தில ராகு இருப்பதால், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட
கூடிய காலம் என்பதால் அனுசரித்து போவது நன்மை தரும்.. மற்றவர்களிடசற்று தள்ளியே இருப்பது
நன்மை தரும்.
துலா ராசியில் கேது சஞ்சரிக்க இருப்பதால் புகழ்,கௌரவம், கீர்த்தி
ஆகியவற்றை ஏற்படுத்தும்.. வேலையில்
பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தற்பொழுது சாதகமான சூழ்நிலை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு
வேலை கிடைக்கும் உத்யோகத்தில் பதவி உயர்வு
வரும்.வருமானம் பெருகும் .உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகள்
மேற்படிப்புக்கு சிலவு செய்யும் நிலை உண்டாகும். .
ராசியில்
கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். 7ம் இடம் களத்திரம் மற்றும் கூட்டு தொழில் ஆகியவற்றை குறிக்கும். நண்பர்கள் 7ம் இடத்தில ராகு அமர்வதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள்
நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில்
ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம்.
ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். aதே சமயத்தில் கேது வந்து ராசியில் அமர இருக்கிறார். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.
துலா ராசிக்கு அர்த்தாஷ்டம சனி
சனி பகவான்
துலா ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம்
செய்வது அர்த்தாஷ்டம சனி ஆகும்.
உடல்நல
பாதிப்புகளை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளால் சேமிப்புகளை விரயம் செய்யக்கூடிய நிலையை
ஏற்படுத்த வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும்
வம்பு, தகராறு, கலகம் போன்றவை அடுத்தவர்களால்
ஏற்படும்.. ஆகவே கவனமாக இருக்கவும்.
புதிய
தொழில் முயற்சிகள் சரியாக அமையாமல் முயற்சிகளை கைவிடும் நிலைக்கு கொண்டு செல்ல நேரிடும்.
ஆகையால் இந்த கால கட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவ்வும்.
வாகனங்களால்
விபத்துகளை ஏற்படுத்தி உடல் நலம் பாதிப்பு ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.
நெருங்கிய
உறவுகளால் மனக்கசப்பு ஏற்படும்.. மாணவர்களுக்கு கல்வியில் தடை, மந்த தன்மையை ஏற்படுத்தும்.
4ல் உள்ள
சனி பழைய வீடுகளை புதுப்பித்து அங்கு குடியேற்றம் செய்ய வைக்கும். 4ம் இடம் தாயை குறிப்பதால் தாயின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த
வாய்ப்புண்டு. வீடு மனைகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கிரங்களின்
பார்வை, லக்ன அசுபர் மற்றும் சுபர் என்ற நிலைக்கு ஏற்ப தன் செயல்பாடுகளை
குரு, ராசியில் 6ல் இருக்க போவதால்
சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்,
குரு ஆறினில் இருப்பதால் உடல் நலம் பாதிக்கபடும் .எதிரிகளின் பலமும் சற்று கூடும் . கோபத்தை கட்டுபடுதவிடில் அவப்பெயர் உண்டாகும் .உடல் நலத்தில் கவனம் தேவை . சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும் குரு 6ல் இருந்த பொழுதுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
குரு, ராசியில் இருந்து 6ல் இருக்க போவதால் , கணவன் / மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது. அனுசரித்து செல்லவும்., 6ம் இடம் ருண ஸ்தானம். உடல் நலம் பாதிப்பு ஏற்படக்கூடிய
வாய்ப்புகள் உள்ளது. மருத்தவ சிலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வம்பு வழுக்குகள்
ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும்.
10 ம் இடத்தை குரு பார்ப்பதால்
10-ம்
இடத்தை, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும்.
பெற்றோரின் உடல்நிலை சீராகும்
குரு
10ம் இடத்தைப் பார்ப்பதால் உங்களின் வியாபாரம், தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல பெயரும், பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். இருப்பினும் அதற்கான
வீண் செலவுகள் செய்ய வேண்டி வரும்.
தொழில்
வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழில் வளர்ச்சியடையும். புதிய தொழில் முயற்சிகள் உண்டாகும்.அரசு
மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கௌவமான பதவி பெறம் யோகம், பாங் வேலை, வருமான வரி துறையில்
வேலை, நீதித்துறைகளில் வேலை, பதவி யர்வு,
குரு 12ம் இடத்தைப் பார்வை
12-ம்
இடத்தில், சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம்
ஏற்படும்; தெய்வ தரிசனமும் கிடைக்கும்.
மகான்களின்
அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாடு
சம்பந்த பட்ட வேலை வாய்ப்பு, பொருள் வரவு, நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள் போன்ற
நல்ல பலன்கள் நடைபெறும்.
வீண் விரையங்கள்
குறையும் சுப செலவுகள் செய்ய போதுமான அளவு பணவரவு கிடைக்கும்.புனித யாத்திரை செல்லும்
நிலை உருவாகும்.
குரு ராசிக்கு 2 ம் இடத்தை பார்வை
குரு ராசிக்கு
2 ம் இடத்தை பார்க்கப் போவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும் சொன்ன சொல்லை காப்பாற்றிவிடலாம்.
குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை சந்தோஷம் இருக்கும் தனம் பொன் பொருள் சேர்க்கை, வங்கி
சேமிப்பு அதிகரித்தல், அசையா சொத்துகள் வா
கோலியனூர்
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயத்தில்
சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம்
பெறலாம்.
கோலியனூர் செல்வது எப்படி? 1000 முதல் 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில், விழுப்புரத்திலிருந்து
பாண்டிச்சேரி செல்லும் வழியில் 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நிறைய பேருந்து
வசதிகள் உள்ளன. அருகில் விழுப்புரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது
புதுக்கோட்டை - எட்டியத்தளி
ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம்
அகத்திய
மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால்
பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு
இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான்
பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி
வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை
சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத்
திகழ்கிறது.
எட்டியத்தளி எப்படி செல்வது?
8000 வருட பழமையான கோயிலான இது புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி.
ஆலங்குடி குரு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக
பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஆபத்சகாயேஸ்வரர்
கோயில் உள்ளது
ஒவ்வொரு
ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த கோயிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழ மைகளில்
மட்டும் தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.
Situated
near to Kumbakonam.
திருவாரூரிலிருந்து
மன்னார்குடி செல்லும் வழியில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தென்குடித் திட்டை குரு
இந்த கோவிலில்
குருவுக்கு தனிச் சன்னதி கொடுக்கப்பட்டுள்ளது.
வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான்.
எங்கே இருக்கிறது
தஞ்சாவூர்
மாவட்டத்தில் அமைந்துள்ள தென்குடித் திட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
தஞ்சாவூரிலிருந்து பண்ருட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 36 வழியாக சென்றால் 5 கிமீ
தூரத்தில் மணக்கரும்பை - திருகருகாவூர் சாலை குறுக்கிடும். அதிலிருந்து வலது புறமாக
மாநில நெடுஞ்சாலை எண் 720ல் பயணித்தால், மொத்தம் 10 கிமீ தூரத்தில் இந்த கோவிலை அடையலாம்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள்
ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
No comments:
Post a Comment