மீன ராசிக்கு
ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சி பலன் 22-23
12- 4
-2022 அன்று நடை பெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி யால் மீன ராசிக்கு
குடும்ப , வாக்கு , தனம்,கல்வி , நேத்திரம் , ஸ்தானமான
2 இடத்திலும் ராகு, ஆயுள் , மாங்கல்ய ஸ்தானமான ஸ்தானமான 8 ம் இடத்தில சஞ்சரிக்க இருப்பதால் ,
மீன ராசி நேயர்களுக்கு ஏற்பட கூடிய யோக அவயோக
பலன்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.
13-4-2022
அன்று குரு பெயர்ச்சி நடை பெற இருக்கிறது. குரு பகவான் கோச்சார ரீதியாக கும்ப ராசி நேயர்களுக்கு ஜென்ம ராசியில் அமர இருப்பதால் ஆகியவற்றை குறிக்கும் 1ம் இடத்திற்கு வரஇருக்கிறார்.
கோச்சாரரீதியாக
மீன ராசிக்கு சனி பகவான் 11ம் இடத்தில சஞ்சரித்து கொண்டுஇருக்கிறார்.
27-12-2023 சனி பெயர்ச்சி நடைபெறும் . அப்பொழுது சனி பகவான் கோச்சார ரீதியாக jenma சனியாக 12ம் இடத்திற்கு வர இருக்கிறார். அப்போது , ஏழரை சனி ஆரம்பிக்க இருக்கிறது.
மீனம் பொது பலன்கள்
திடீர்
பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்ட ங்கள் தேடி வரும்.
அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம்
ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும்.
கண் தொடர்பான
பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும்.
வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.
குளிகை சர்ப்ப தோஷம் -
ராகு
2ம் இடத்திலும் கேது 8லும் இருப்பவர்கள் உடல் நல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும்
பாதிக்கப்படுவார்கள். அதோடு விபத்து, இழப்புகள் ஏற்படும் அமைப்பும், மன அமைதி அற்ற
நிலை இருக்கும்.
2ல் ராகு
ஒருவருடைய
ஜாதகத்தில் இரண்டாம் வீடு என்பது குடும்பம், , செல்வம், பேச்சு திறமை போன்றவற்றை குறிக்கிறது
2ம் இடத்தில் ராகு இருந்தால் ஒருவருக்கு பல நன்மைகள் ஏற்பட
வாய்ப்புண்டு.
நீங்கள்
உங்கள் வாழ்வில் அதிகப்படியான செல்வங்களை சேர்க்கும் ஒரு நிலை உண்டாகும்.
ஜோதிடத்தில்
கூறப்படும் மறைவு ஸ்தானங்களில் மிக கடுமையான ஸ்தானமாக கருதப்படுவது எட்டாம் பாவம் ஆகும்
எட்டாம்
பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது
8ம் இடம்
பெண்களுக்கு மாங்கல்யஸ்தானம் ஆகும்.
8ல் கேது
இருப்பதால் , உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .
தன்வந்திரி
வழிபாடு
ஆயுள் அதிகரிக்கவும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக
இருக்கவும் ஆரோக்கிய கடவுள் தன்வந்திரி பகவானை வழிபடுவோம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக
வாழ்வோம். வைத்தீஸ்வரன் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி ரிஷியின் ஜீவ சமாதி உள்ளது. இங்கு
வழிபாட்டால் தீராத நோய்கள் விலகி ஆரோக்கியம் சீரடையும்.
வைத்தீஸ்வரன்
கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார்.
இன்றும் அக்கோவிலை சுற்றி சித்தரின் ஆன்மா உலாவிக் கொண்டிருப்பதாக அங்குள்ள மக்கள்
நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
11ல் சனி
வாழ்வில்
எதிர்பாராத, திடீர் லாபங்கள் உண்டாகும்.
அசையா
சொத்துக்கள் வாங்குதல்,
பொருளாதார
ரீதியாக முன்னேற்றமான நிலை உண்டாகும்.
மூத்த
சகோதரர் தோஷம் உண்டு.
மீன ராசிக்கு ஜென்ம குரு
ஜென்ம
ராமர் வனத்திலே
ஜென்ம குரு
ராமர் வனவாசம்
குரு ஒரு
ராசிக்கு கஷ்டமான அமைப்பில் இருந்தாலும் அவரே ஏதோ ஒரு வகையில் ஈடு செய்து
விடுகிறார். இது வேறு கிரகங்களுக்கு கிடையாது.
சாமர யோகம்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி 1 - 4 - 7
- 10 ஆகிய கேந்திரங்களில் ஒன்றில் உச்சம்
பெற்றிருக்க அதை குரு பார்த்தால் சாமர யோகம்
ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சிறந்த
குலத்தில் பிறந்தவர் வேகமாக முன்னேறுவார்கள்.
ஆன்மிக ரீதியான வளர்ச்சிகளையும்
அடைவார்கள். அரசின் உயர்ந்த பதவி அவரைத்
தேடி வரும். சமூகத்தில் செல்வாக்கும் பாராட்டும்
பெறுவார்கள்
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment