Search This Blog

Thursday, September 22, 2022

காவல்துறை, ராணுவம் அல்லது நிர்வாகம்/வருவாய்த் துறையில் பணிபுரிய வைக்கும் காஹல யோகம்


 

காவல்துறை, ராணுவம் அல்லது நிர்வாகம்/வருவாய்த் துறையில் பணிபுரிய வைக்கும் காஹல யோகம்



காஹல யோகம்

லக்னத்தின் அதிபதி நன்றாக அமைந்து, 4ம் வீட்டின் அதிபதியும், 9ம் வீட்டின் அதிபதியும் கேந்திரத் தில் (அதாவது ஒரு கோணத்தில்) இருந்தால், இந்த சேர்க்கை ‘காஹல யோகம்’ எனப்படும்.

நான்காம் அதிபதி அல்லது 10 ஆம் அதிபதியுடன் இணைந்து தனது சொந்த ராசியில் இருந்தாலோ ' காஹல யோகம்'. உருவாகிறது.

4 ஆம் அதிபதி தன சொந்த வீட்டில் ஆட்சி பெற்று காணப்பட்டாலோ , 4ம் அதிபதி 10 ஆம் வீட்டின் அதிபதியு டன் இணைந்தோ, உச்சம் பெற்றோ அல்லது 10ம் அதிபதியால் பார்க்க ப்பட்டலோ காஹல யோகம் உண்டாகும்.

காஹல யோகம் தரும் பலன்கள்

ஜாதகர் தைரியமானவராகவும், பிடிவாத குணம் கொண்டவராக வும், காவல்துறை, ராணுவம் அல்லது நிர்வாகம்/வருவாய்த் துறையில் பணிபுரிபவராகவும் இருப்பார்.

உங்கள் ஜாதகத்தில் காஹல யோகம் இருந்தால், அது ஜாதகரை தைரியசாலியாகவும் மற்றும் ஆக்ரோஷம் உள்ளவராக ஆக்குகிறது. மேலும் ஜாதகருக்கு செல்வம், வெற்றி, புகழ் மற்றும் அதிகாரத்தைப் தருகிறது.

இங்கே இணைக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 4ம் அதிபதி சனியும் 9ம் அதிபதியான புதனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமையப் பெற்றுள்ளார்கள் . லக்கினாதி பதியான சுக்கிரன் லக்கினத்தில் ஆட்சி பெற்று வலுவாக இருப்பதால் , காஹல யோகம் அமையப் பெற்று ள்ளது.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment