ஏழாமிடத்து அதிபதி லக்னத்தில் இருந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கின்றது. சிலநேரங்களில் மணமகன் அல்லது மணமகள் அறிமுகமான குடும்பங்களில் இருந்து வருவதும் உண்டு.
மிதுனம் , கன்னி , தனுசு , மற்றும் மீனா ராசிகள் லக்னமாக இருந்து, ஏழுக்குடையவன் லக்னத்திலிருக் கும்போது, கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுள் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள்.
7ம் அதிபதி 2ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் இரண்டில் இருக்கும்போது செல்வம் மிகுந்த மணமகளோ அல்லது வேலை பார்க்கும் மணமகளோ கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. பாபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருக்கும்போது பிரிவு அல்லது மரணம் நேர்கின்றது.
7ம் அதிபதி 3ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது, பெண்களுக்குச் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. ஆண்களுக்கு ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது, தாமதமாகத்தான் மணவாழ்க்கை அமைகின்றது. ஆனால் சுக்கிரன் கேந்திரத்தில் இருக்குமானால் ஆண்களின் திருமணம் சீக்கிரம் நடக்கின்றது. ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது பிறந்த பெண்களில் சிலர், வேண்டாத கிசுகிசுக்களில் சிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
7ம் அதிபதி 4ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் நான்கில் இருக்கும்போது, சொந்தத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். இந்த ஜாதகர்கள் முந்தானை முடிச்சில் சிக்குபவர் களாக இருக்கின்றார்கள். செவ்வா ய் ஏழுக்குடையவனாக நான்கா மிடத்தில் இருக்கும்போது, தாரதோசம் அல்லது புத்திரதோசம் சம்பவிக்கின்றது.
7ம் அதிபதி 5ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் ஐந்தில் இருக்கும்போது, பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு திருமணம் நடக்கின்றது. ஸ்திர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ஏழாமிடத்ததிபதி ஐந்தில் இருந்தால் காதல்மணம் நடக்கின்றது.
7ம் அதிபதி 6ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் ஆறில் இருக்கும்போது ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிக்கல் வருகின்றது. மனைவி நோயால் அவதிப்படுவதும், அல்லது ஜாதகரே மலட்டுத்தன்மையால் புழுங்கி வாடுவதும் நடக்கின்றன.
ஆனால் ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரனைக் கவனிக்காமல், இந்தப் பலன்களைச் சொன்னால் அது தவறாக முடியும். பெண்களின் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஆறில் இருந்தால், மத்திம வயதில் கணவனை இழக்கின்றார்கள்.
7ம் அதிபதி 7ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது, மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரி அமைவதில்லை. ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது நிறைய திருமணங்கள் முறிந்து போகின்றன.
7ம் அதிபதி 8ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது இரண்டு தார யோகம் சம்பவிக்கின்றது.
7ம் அதிபதி 9ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் ஒன்பதில் இருக்கும்போது திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயர்கின்றது.
7ம் அதிபதி 10ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் பத்தில் இருக்கும்போது ஸ்திர லக்னங்கள் உதயமானால் மணவாழ்க்கையில் பிரச்னை வருகின்றது.
7ம் அதிபதி 11ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் பதினொன்றில் இருக்கும்போது ஆண்களின் ஒழுக்கம் சந்தேகத்துக்கு ரியதாகின்றது. சிலர் வயதில் மூத்த பெண்களைத் திருமணம் செய்கின்றனர்.
7ம் அதிபதி 12ல் இருந்தால் ?
ஏழுக்குடையவன் பன்னிரண்டில் இருக்கும்போது அல்லது பன்னிரண்டுக்குடையவன் ஏழில் இருக்கும்போது மரபை மீறிய திருமணங்கள் நடக்கின்றன.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment