Search This Blog

Wednesday, October 12, 2022

ஜாதகத்தில் சந்திரன் வலுக் குறைந்து நீச்சம் பெற்று காண ப்பட்டால் என்ன மாதிரியான அவயோக பலன்களை தருவார் ?

 

ஜாதகத்தில் சந்திரன் வலுக் குறைந்து நீச்சம் பெற்று காண ப்பட்டால் என்ன மாதிரியான அவயோக பலன்களை தருவார் ?

1.அடிக்கடி மனக்குழப்பங்கள் ஏற்படும்..மனம் தடுமாறும். மன அமைதி இருக்காது

2. வெளிநாட்டுத் திட்டம் பிரயாணம் கைகூடாது. தள்ளிப்போகும். இங்கே கீழே தரப்பட்டுள்ள ஜாதகத்தில் சந்திரன் நீச்சம். ஆனால் நீச்ச பங்கம் பெறவில்லை. ஜாதகர் ஒரு மென் பொருள் குழுமத்தில் பனி புரிந்து வருகிறார். இவரை அந்த நிறுவனம் அமெரிக்கா சென்று அங்கே உள்ள அந்த நிறுவனத்தில் வேலை பாருங்கள் என்ற கூறுகிறது. ஆனால் ஜாதகர் அங்கு சென்று வேலை பார்க்க விரும்ப வில்லை. இது ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றதால் அவயோக பலன் .

3. ஒரே இடத்தில இருந்து தொழிலோ அல்லது வேலை பார்க்கும் நிலையை ஏற்படுத்தாது. அடிக்கடி இடமாற்றம் ஏற்படும்.

4. முன் ஜென்மங்களில் பெண் வகை தோஷங்கள் இருந்தால் ஜாதகத்தில் இந்த பிறவியில் சந்திரன் கெட்டுஇருக்கும்

5. அம்மா வழி உறவினர்கள் ஆதரவு இருக்காது . அம்மா வழி உறவுகளைத் துண்டிக்கும்.

6.தாய் மாமன் மைத்துனர் வழி உறவுகள் இவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

7.மாத்ரு வழித் தோசங்களைத் தந்து வாழ்க்கையில் நிம்மதியை கெடுக்கும்.

பரிஹாரம்

1. முத்து ராசி கல் மோதிரமாகவோ அல்லது முத்து மாலை அணியலாம்.

2.திருப்பூர் அருகே உள்ள உள்ள ஊதியர் பௌர்ணமி அன்று சென்று அங்குள்ள சந்திர காந்த மலையில் இரவு தங்கி வரலாம்.

3. பௌர்ணமி தோறும் மாலையில் ஸ்ரீ சத்தியநாராயண பூஜை செய்து வர நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கும்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'சுக் சுக்கிரன் புத ன் ராகு கேது லக்கினம் குரு சூரியன் சந்திரன் நீச்சமடைந்த ஜாதகம் 19-08-1980 சந்திரன் செவ்வாய் சனி'

No comments:

Post a Comment