ஜோதிடத்தில் வழக்குகளால்
அவதியுறும் ஜாதக அமைப்பு
மனமுறிவு, வழக்கு, விவாகரத்து மோசடி புகாரில் வழக்கு அடிதடி சண்டை
சொத்து
தகராறு பாக பிரிவினை வழுக்கு ஜீவனாம்சம் வழுக்கு கார் விபத்து வழுக்கு , ஊழல் வழக்கு , தேர்தலில்
வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு பண மோசடி
வழக்கு
ஜாதகத்தில் 6ம் பாவத்தை வைத்து நோய், வம்பு வழக்கு, சிறை கடன் பற்றி சொல்ல
முடியும்
ஆறாம் அதிபதியின் நிலை/ ஆறில் நிற்கும் கிரகத்தின் நிலை/ ஆறாம் இடத்தை
பார்க்கும் கிரகங்களின் நிலை/ஆறாம் அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களின் நிலை/வர்க்கச்சக்கரத்தில்
சஷ்டியாம்சத்தின் நிலை/அஷ்டவர்க்க பரலில் ஆறாமிடத்தில் உள்ள பரல்களின் எண்ணிக்கை என
இவை அனைத்தையும் ஆய்வு செய்துதான் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் வழக்கு கடன்/ நோய் /எதிரிகள்
எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்க முடியும்
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் குறைந்து அதைவிட 6ஆம் அதிபதி பலம்
பெறக்கூடாது.பலம் பெற்றால் மேற்சொன்ன நிகழ்வுகள் ஜாதகரின் வாழ்க்கையில் கண்டிப்பாக
இருக்கும்.
முக்கியமாக சுப கிரகங்கள் ஆறாமிடத்தில் இருக்கக்கூடாது. இருந்தாலும்
ஆட்சி உச்சம் பெற்று பலம் பெறக்கூடாது.அப்படி இருந்தால் நிச்சயமாக கடனோ நோயோ இருக்கும்.எதிரிகள்
அடங்கிப் போக மாட்டார்கள். வலுத்துவிடுவார்கள்.ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பதுதான்
நல்லது. பாவக்கிரகங்கள் இருந்தால் கடன் பிரச்சனைகள் இருக்காது.கடன் பிரச்சினைகள் இருந்தாலும்
அதை சமாளிக்கும் தன்மை ஜாதகரிடம் இருக்கும்.நோய்கள் ஏற்பட்டாலும் குணமாகும். எதிரிகள்
அடங்கிப் போவார்கள்.ஆறாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் அந்த சுப கிரகத்திற்கு
பாவ கிரகங்களின் சேர்க்கையோ தொடர்போ இருக்க வேண்டும்.அல்லது அந்த சுப கிரகம் பாவ கிரகத்தின்
நட்சத்திர சாரத்தில் நிற்கவேண்டும்.மேற்சொன்ன அமைப்பில் இருந்தால் விதிவிலக்கு உண்டு.
ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் பலம் பெற்று இருக்கலாம்.ஆறாமிடத்தில்
சனி /செவ்வாய் /சூரியன் /ராகு கேதுக்கள் போன்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருக்கலாம்.ஆட்சி
பெறுவதைவிட ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் உச்சம் பெற்று இருப்பது நல்லது.கடன் /நோய்
/எதிரிகள் /வம்பு/ வழக்கு பிரச்சனைகளை சாமர்த்தியமாகவும் சமயோசிதமாகவும் சமாளித்து
கடந்து வருவார்கள்.
லக்னாதிபதியோடு ஆறாம் அதிபதி தொடர்பு பெறக்கூடாது. லக்னாதிபதி ஆறில் அமர்வது /ஆறாம் அதிபதி லக்கனத்தில் அமர்வது/ 1-6 பரிவர்த்தனை பெறுவது/ சாரப்பரிவர்த்தனை பெறுவது/சஷ்டியாம்சத்தில் 6ஆம் அதிபதி பலம் பெறுவது/ஆறாம் அதிபதி நட்சத்திர சாரத்தில் லக்னபாகை/ லக்னாதிபதி/ சந்திரன் நிற்பது என மேற்சொன்ன நிலைகளில் சுய ஜாதகத்தில் இருந்தால் கடன் நோய் எதிரிகள் வம்பு வழக்கு பிரச்சனைகள் இருக்கும்.
6 ஆம் வீடு:- சட்ட தகராறுகள், வழக்குகள் போன்றவற்றை கையாள்கிறது
8 ஆம் வீடு:- நீண்ட கால தடைகள், குறுகிய தீர்வு, திடீர் சிரமங்கள்,
பண விவகாரங்கள், ஜீவனாம்சம் தொடர்பான விஷயங்கள்.
சனி ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீட்டில் அமைந்திருந்தால், சொந்த
வாழ்க்கையில் சில ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபடலாம்.
12ஆம் வீடு:- சட்டம்/நீதித்துறையில் இருந்து தண்டனை, உதாரணமாக- உங்கள் 6ஆம் அதிபதி,
8ஆம் அதிபதி அல்லது 12ஆம் அதிபதி வலுவிழந்து 12ஆம் வீட்டில் அமைந்திருந்தால், நீதித்துறை
தண்டனை மற்றும் சில சமயங்களில் சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
சனி
சட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே தவறான புரிதல் ஏற்படுகிறது.
நீதிமன்ற முடிவு எடுக்கும் நடைமுறையில் கால தாமதம் ஏற்படுவதற்கும் சனியே காரணம்.
ராகு
ராகுவின் இருப்பு திருமணம், கல்வி, தொழில் அல்லது வணிக சிக்கல்கள்
தொடர்பான சட்ட விஷயங்களின் சிக்கலை அதிகரிக்கிறது.
கேது
உங்கள் ஜாதகத்தில் கேது அசுபமான நிலையில் அமர்ந்திருந்தால், பணம்
அல்லது நிதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இது பண தகராறுகள் மற்றும் நிதி தகராறுகள்
தொடர்பான சட்ட விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.
செவ்வாய்
செவ்வாய் கிரகத்தின் தாக்கம் மோசமாக இருந்தால், நீதிமன்ற வழக்குகளின்
தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும், செவ்வாய் 8 அல்லது 12 ஆம் வீட்டில்
இருந்தால், அது சரியான க
நீதிமன்ற வழக்குகளில் இருந்து
விடுதலை
சட்ட விஷயங்களில் வெற்றி
கிடைக்கும்
11வது வீடு ஆதாய வீடு. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவதில் இது
முக்கிய பங்கு வகிக்கிறது. 11 ஆம் வீட்டில் கிரகங்களின் வலுவான நிலை இந்த விஷயங்களில்
சொந்தக்காரர்களின் வெற்றியைக் குறிக்கிறது.
வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் தொடக்கத்திலேயே
வலது வலதுபுறமாக அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
வழக்கறித்தீஸ்வரர் லிங்க திருவருட்கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய
லிங்க ரூபமாகக் காட்சியுடன் அருள் பாலித்து வருகின்றார்
சத், அசத் என்பதற்கான அர்த்தத்தை முழுமையாக அறிய முடியாமல் தேவர்களும்,
முனிவர்களும் குழம்பியுள்ளனர். அந்த பொருளுக்கு உண்மையான விளக்கத்தை அறிந்து தெளிவு
பெறத் தேவர்களும், முனிவர்களும் காஞ்சிபுரம் அடைந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக்
கூறப்படுகிறது.
தேவர்கள் முனிவர்கள் இடையே ஏற்பட்ட இந்த சந்தேகத்தைச் சிவபெருமானே
நேரில் வந்து விளக்கியதால் இந்த கோயிலுக்கு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் என்ற பெயர்
பெற்றது.
நீதிமன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள்
இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி வருகிறார்கள்.
வழக்குகளுக்காகவே பிரபலமான கோவில். சசிகலா, சிம்பு போன்றவர்கள் வணங்கித்
தங்கள் வழக்குகளிலிருந்து விடுபட்டதால், இக்கோவில் பலரிடையே பிரபலமானது.
- வழக்குகளிலிருந்து
விடுபடுவதற்காகவே இக்கோவிலுக்குப் பலர் வருகை புரிகிறார்கள்.
- 16 திங்கள்
கிழமைகள் நெய்
தீபம் ஏற்றிச் சிவனை வழிபட்டால் தீராத வழக்குகளும் தீரும் என்பது நம்பிக்கை.
- எனவே,
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை விஷேசம் என்பதால், கூட்டமாக இருக்கும்.
இக்கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான
வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில்
உள்ளது.
இதனால் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு
நடத்தி செல்வர்
இக்கோயிலில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவலிங்கம் பதினாறு பட்டை கொண்ட
லிங்க பானத்தை கொண்டுள்ளது.
இதன் தென்பகுதியில் பராசர ஈஸ்வர் என்ற லிங்க திருமேனி உள்ளது. இந்த
லிங்கம் பராசர முனிவரால் வணங்கப்பட்டதாகும்.
தமிழகத்தின் பிரபலங்கள் யாராவது ஒருவராவது தினந்தோறும் எதாவது ஒரு
பிரபல கோவிலின் பிரகாரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி அரசியல்வாதிகளால் பிரபலமடைந்துள்ளது
தமிழகத்தில் சில கோவில்கள்
அக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள்
எதிர்தரப்பினரை இக் கோவிலுக்கு அழைத்துவந்து சத்தியம் செய்ய சொல்வார்கள். காரணம் பொய்
சத்தியம் செய்தால் அவர்களது குடும்பம் அழிந்துவிடும் என்பது இக்கோவிலின் மீதான பெரும்
நம்பிக்கை. காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி
இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள் என்பது கோவிலின்
தல வரலாறு. அதனால்தான் அரசியல்வாதிகளால் நிரம்பி வழிகிறது இக்கோவில்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான கனிமொழி திகார்
சிறையிலடைக்கப்பட்டார். அப்போது இக்கோவில் பற்றி கேள்விப்பட்ட
ராஐாத்தியம்மாள் தனது ஆதரவாளர்களை அனுப்பி இக்கோவிலில் பூஜை நடத்தினார். கனிமொழி சார்பாக
தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து சிறப்பு
வழிபாடு நடத்தினார். அடுத்த சில வாரங்களில் கனிமொழிக்கு ஐாமீன் கிடைத்தது.
இது பூஜையின் பலனால்தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாக தகவல் பரவியது
- நெ.541,
காந்தி சாலை,
- -
631501.
- தொலைபேசி
எண் : 044=27222253
- மின்னஞ்சல் : vazhakaritheeswarar[at]gmail[dot]com
No comments:
Post a Comment