Search This Blog

Wednesday, July 26, 2023

மனைவியால் யோகம் பெரும் ஸ்டாலின் ஜாதகம் ஸ்டாலின் ஜாதகம் சொல்லும் ரகசியம்...


மனைவியால் யோகம் பெரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

சனி பகவான் ஒரு ஜாதகருக்கு எப்பொழுது மிகுந்த யோகத்தை கொடுப்பார் என்றால் இயற்கை சுபர்களான சுக்கிரன் மற்றும் குருவுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்வை செய்தால் , ஜாதகருக்கு சனி பகவானால் யோகம் ஏற்படும்.

இங்கே  கொடுக்க பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  ஜாதகத்தில், அவரது மனைவியை குறிக்கும்  7 வது வீட்டின் அதிபதியான சனி, இயற்கை சுபர்களான வியாழன் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவராலும் பார்க்கப்படுகிறார். சனி பகவானுக்கு சுக்கிரன் நண்பர் குரு சமம் ஆவார்.

அதன்படி,  தற்போதைய தமிழக முதல்வர் திரு.எம்.கே. ஸ்டாலின், அவரது மனைவியை குறிக்கும்  சனி தசாவின் போது  மனைவியின் யோகத்தால் முதல்வர் பதவியை பெற்றார். மேலும், அவர் தனது மனைவியுடன் ஐம்பது ஆண்டுகளாக மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெற்றுள்ளார்,



திரு ஸ்டாலின் சிம்ம ராசி சிம்ம லக்கினம் - சிம்ம ராசி , சிம்ம  லக்கினாதிபதியான சூரியன் 7ல் அமர்ந்து லக்கினத்தை பார்வையிடுவது  உயர்ந்த யோகம்.

சிம்ம லக்கினம் - சிம்ம ராசி ஜாதகர்கள் அரசியலில் உயர்ந்த பதவிக்கு வருகிறார்கள்.


No comments:

Post a Comment