Search This Blog

Wednesday, August 2, 2023

உயிர் காவு வாங்கும் மதிகெட்டான் சோலை,மதிகெட்டான் சோலை மர்மம் நிறைந்த காட...


மதி கெட்டான் காட்டில் நுழைந்தால் மரணம் நிச்சயம் –

உயிர் காவு வாங்கும் மதிகெட்டான் காடு உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கனல் மலைப்பகுதியில் அமைந்துள்ளது மதிகெட்டான் சோலை எனும் வனப்பகுதி இந்த பகுதியை கொடைக்கானலில் ஒரு மர்ம காடு என அழைக்கப்படுகின்றனர்

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதிக்கு அருகில் 12 கிலோமீட்டர் பரப்பளவில் மதிகெட்டான் சோலை என்ற இடம் உள்ளது.

இந்த பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

இதுவரை இந்த பகுதிக்குள் நுழைந்த 12 பேர் உயிருடன் திரும்பவில்லை.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

  • இந்த பகுதியில் ஒரு விசித்திரமான மூலிகைச்செடி ஒன்று இருக்குமாம்.
  • அந்த மூலிகைச்செடியை யாரவது மிதித்துவிட்டால் அவர்களின் மதி மழுங்கி எப்படி வெளியே செல்வது என்று கூடத் தெரியாமல் இந்தக்காட்டிற்குள்ளேயே சுற்றித் திரிவார்களாம்.
  • பின்னர் அங்கேயே மதி கெட்டு இறந்து விடுவார்களாம்.

சித்தர் போகர் உருவாக்கிய சிலை ஒன்று இந்தக் காட்டினுள் இருப்பதாகவும் அந்த சிலையைப் பாதுகாக்க சித்தர்களின் சித்து விளையாட்டுதான் காட்டினுள் அத்துமீறி நுழைபவர்களை இவ்வாறு பைத்தியக்கார மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் சமயத்தில் மரணத்தை சம்பவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.ஆனால் கொடைக்கானலில் இருக்கும் இந்த மதிகெட்டான் சோலைக்குள் உள்ளே சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.

அரசாங்கமே உள்ளே செல்ல தடை விதித்துள்ளது என்றால் கண்டிப்பாக எதோ ஒரு மர்மம் இந்த காட்டில் உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


No comments:

Post a Comment