Search This Blog

Friday, August 25, 2023

திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை செய்வது எப்படி ?எந்த கிழ...


திருவாலங்காடு  மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை  செய்வது எப்படி ? எந்த கிழமைகளில் பரிகார பூஜை செய்கிறார்கள் ? பரிகார பூஜை கட்டணம் எவ்வளவு ? பரிகார பூஜை செய்யும் நேரம் என்ன ?கோயில் மற்றும் அர்ச்சகர் தொலைபேசி எண் கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் ?


திருவாலங்காடு  மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை 

காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் வடாரண்யேஸ்வரர் கோவில். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது என்று சொல்லப்படும்..

ஊர்த்துவ தாண்டவம். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்கு த்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் இத்தலத்து நடராஜர் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்.

இக்கோயில் சனி பகவானின் மகன் மாந்தீஸ்வரர் இறைவனை நோக்கி தவம் புரிந்து தோஷத்தில் இருந்து விடுபட்டார் ஆதலால் இக்கோயிலில் மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம்.

திருவாலங்காடு  மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை கட்டணம் ரூ 1600 ஒரு நபர் மட்டுமே பரிகார செய்ய அனுமதிக்க படுவார்.

சனி கிழமைகளில் மட்டுமே பரிகார பூஜை செய்ய படுகிறது

திருவாலங்காடு  மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை  சீட்டு வழங்கும் நேரம்  

அதிகாலை  6 மணி

காலை 8 மணி

காலை 10 மணி

நண்பகல் 12 மணி

மாலை 3 மணி

திருவாலங்காடு  கோயில் நிர்வாக அலுவலக தோலை பேசி எண்  044-27872074

கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்                                                  99407 36579

கோயில் பொறுப்பாளர் தொலைபேசி எண்                                           98940 57457

மாந்தீஸ்வரர் பரிகார பூஜை வரலாறு

சனி பகவான் மைந்தரான மாந்தி ஒரு நாள் தர்பாரில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது அவர் மேல் ஒரு பல்லி ஒன்று விழுந்தது.

அதற்க்கு உரிய பலன் தீயாக இருந்ததால் , மிகவும் வருத்தம் அடைந்த மாந்தி தன் தந்தையான சனீஸ்வரரிடம் என்ன பரிஹாரம் செய்வது என்று வேண்டினார். சனி பகவான் மாந்தியை சிவபெருமானை நோக்கி தவம் செய்யும் மாறு அறிவறுத்தினார் . மாந்தி திருவாலங்காடு வந்து சேர்ந்து சிவபெருமானை நோக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) தவம் செய்ய ஆரம்பித்தார்.  சிவபெருமான் மாந்தியின் பக்தியை மெச்சி  அவருக்கு நேரில் காட்சி அளித்தார்.

நேரில் தோன்றிய சிவ பெருமானை வணங்கி தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கி அருளுமாறு வேண்டி கொண்டார். மாந்தி ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனை ஒரு மண்டலம் வழிபாடு செய்தார்.  மாந்தி வழிபட்ட சிவலிங்கம் இன்றும் திருவாலங்காடு கோயிலில் உள்ளது. இதற்க்கு மாந்திஸ்வரர் என்று பெயர். இந்த வழிபாட்டால் மாந்திக்கு ஏற்பட்ட தோஷம் கழிந்தது. '' 

இந்த கோயிலில் மாந்திஸ்வரர் பரிகார பூஜை செய்து வழிபட்டால் , எந்த தோஷம் ஜாதகருக்கு விலகும்?

1. அஷ்டம சனி (8ல் சனி) , அர்த்தாஷ்டம சனி (4ல் சனி) ஆகியவற்றால் தீய பலன்கள் விலகி நன்மையான பலன்கள் ஜாதகருக்கு நடைபெறும்.

2, ஜென்ம சனி தொல்லைகள் விலகும்

3. தீராத நோய் தீரும். ஜாதகத்தில் 1,2,4,5,7,8,12 போன்ற இடங்களில் சனி அமர்ந்து இருந்தால் தோஷம் ஆகும். இத்தலத்தில் பரிஹாரம் செய்தால் சனி தோஷம் விலகும்.

4.திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்

5. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபடும் பொழுது குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது.

6.கடன் தொல்லை நீங்கும் . மனதில் மகிழ்ச்சி உண்டாகும்

7. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

இங்கு கோசாலை உள்ளது. இங்கு அகத்தி கீரை , கோரைப்புல் விற்கிறார்கள் அவற்றை வாங்கி அங்குள்ள கோசாலையில் உள்ள மாடுகளுக்கு  பரிகார பூஜை கலந்து கொள்வதற்கு முன் தீவனமாக கொடுக்க  வேண்டும் .

சுவாமி சன்னதி பிரகாரத்தில் மாந்தி பகவானும் அவரால் பூஜிக்க பட்ட மாந்தீஸ்வர லிங்கமும் உள்ளது . இங்கேதான் பரிகார பூஜை நடை பெறுகிறது.



அர்ச்சகர் வந்து மாந்தி பூஜை பற்றி விரிவாக எடுத்து சொல்கிறார்.

முதலில் ஒரு கிண்ணத்தில் நவதானியம் , மற்றும் கோடரி சிலையும் , பல்லி சிலையையும் பரிகார பூஜை செய்பவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

ஒவ்ருவருடைய கோத்திரம் , நட்சத்திரம் , ராசி ஆகியவற்றை சொல்ல சொல்லி சங்கல்பம் செய்து வைக்கிறார்கள்.

பின்பு மாந்தி பகவானுக்கும் , மந்திஸ்வரருக்கும் ( லிங்கம்) அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் தீபாராதனை செய்கிறார்கள்.

பின்னர் பிரசாதம் தருகிறார்கள் ,

பின்னர் அனைவரும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரரையும் அம்பாளையும் வழிபட்டு பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்

உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடந்தேறும்

எப்படிப் போவது:

சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது

No comments:

Post a Comment