Search This Blog

Wednesday, August 16, 2023

ஜாதகத்தில் சனி பகவான் பார்வை நன்மையா ? தீமையா ? சனி பார்வை கலைஞர் கருண...




சனி ஆட்சி உச்சம் பெற்றாலும் அதனுடைய பார்வை 3, 7, 10 வீடுகளுக்கு நல்லது செய்யாதா?

சனி பார்வை எந்த இடத்தில் இருந்தாலும் நல்லது செய்யதா?

சனி பார்வை நன்மை செய்யுமா? செய்யாதா?

குரு பார்வை, குரு சேர்க்கை பெற்ற சனியின் பார்வை எங்கு இருப்பினும் அதிக கெடுதல் தராது.



1.  சனி நட்பு, ஆட்சி மற்றும் உச்சம் என்னும் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது சனி கிரகத்தின் பார்வை திறன் நன்றாகவே இருக்கும்.

2.  ஆனால் சுபர் பார்வை அல்லது சுபர் சேர்க்கை பெறாத மற்றும் சூரியன், செவ்வாய், ராகு  மற்றும் கேது  போன்ற இயற்கை பாவ கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பார்க்கும் பாவகங்களின் வலுவை குறைத்து கெடு பலன்களை அதிகரிக்கவே செய்யும்.

3.  இறுதியாக குரு பார்வை, சுபர்களான சுக்கிரன் புதன் சேர்க்கை பெற்ற சனி கிரகத்தின் பார்வை எந்த ஒரு பாவாகத்திற்கும் அதிக கெடுதலை நிச்சயம் அளிக்காது. இதுவே எந்த ஒரு சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெறாத சனியின் பார்வை அது சனி லக்கின அதிபதி என்னும் அமைப்பை பெற்று இருந்தாலும் பார்க்கும் பாவகங்களை கெடுத்து பலன் தரும்.

4.  மேலும் உபஜெய ஸ்தானத்தில் (3,6,10 மற்றும் 11 ஆம் வீட்டிலும்), நட்பு வீடுகளில் இருக்கும் பொழுதும், லக்கின சுபராக இருக்கும் பொழுதும் சனியின் பார்வை படும் இடங்களின் பலன்கள் மந்த நிலையில் செயல் படும் என்பதை தவிர கெடு பலன்களை நிச்சயம் அளிக்காது.



5.  துலா லக்கணத்திற்கு சனி அதி யோககாரகர் ஆவார் . துலா லக்கினக்காரர்களுக்கு சனியின் 3,7,10 பார்வை யோகத்தை தரும்

6.  ரிஷப லக்கணத்திற்கு சனி அதி யோககாரகர் ஆவார். ஆனால் அவர் பாதகாதிபதி ஆவார். ஆகையால் நன்மை தீமை பலன்களை  இரண்டும் கலந்து தருவார்.


No comments:

Post a Comment