Search This Blog

Monday, September 18, 2023

பாபா வங்கா கணிப்புகள்2023 ல் உலகில் என்ன என்ன நடக்கும் ? பாபா வாங்காவின்...





பாபா வங்கா 2023 பற்றி கணிப்புகள் 

2023 ல் உலகில் என்ன என்ன நடக்கும் ? 
பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் 

வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்தவர். இவர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி  அப்போது அவரது இரு கண்களிலும் அதிகப்படியான மண் தாக்கி பார்வை தெரியாத நிலைக்கு ஆளாகியிருந்தார். இவரை ’நாஸ்ட்ரடாம்ஸ்’ என்றும் அழைத்தனர். ஏனெனில் இவர் எதிர்காலத்தை பற்றி கணித்ததில் 85 சதவீதம் சரியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக

செர்னோபில் அணு உலை விபத்து,

 பிரிட்டன் இளவரசி டயானா மரணம்,

 சோவியத் யூனியன் கலைப்பு,

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல்,

புதிதாக கருப்பின அதிபர் ,

 2004 தாய்லாந்து சுனாமி

 இந்திரா காந்தி படுகொலை

யை முன்னேற சொன்னவர் உள்ளிட்டவை அடங்கும்

1996ஆம் ஆண்டு தனது 84வது வயதில் காலமானார்

2021ல் இந்த உலகம் கடும் நெருக்கடி ஒன்றை சந்திக்கும் எனக் கணித்திருந்தார். அதன்படி, கொரோனா வைரஸ் தாக்குதல் பாடாய்படுத்தி விட்டது. 

 

2023

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படும். அப்படி நடந்தால் காலநிலை மாறுபாடு மிக மோசமான நிலையை எட்டிவிடும்.

இயற்கையான முறையில் குழந்தை பெற்று கொள்வது மாறி ஆய்வகங்களில் குழந்தை பெறும் நிலை உண்டாகும். வாடகை தாய் முறை முடிவுக்கு வந்துவிடும். இவர்களே வருங்கால குடிமக்களாக இருப்பர்.

பிறக்கும் குழந்தைகளின் குணநலன்கள், தோல் நிறம் உட்பட பல விஷயங்களை பெற்றோர்கள் தேர்வு செய்ய முடியும்.

வேற்று கிரஹ வாசிகள் பூமியை 2023ல் தாக்கும் அபாயம் உள்ளது என்று பாபா வாங்கா கணித்துள்ளார் வேற்றுக் கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறதாம். இதனால், லட்சக்கணக்கானவர்கள் பலியாக நேரிடலாம் என்று கணித்து வைத்திருக்கிறார்.

2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்று கணித்துள்ளார். இதனால் புவி ஈர்ப்பு விசை மாறி வேறு சில பாதிப்புகளும் ஏற்படும்.. அடுத்து இந்தாண்டு ஒரு முக்கிய நாடு பயோவீபன் சோதனைகளை நடத்தும் என்றும் இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார்.

2023ல் ஆசியாவில் உள்ள ஒரு அணு மின் உலையில் வெடிவிபத்து ஏற்பட்டு அதனால் ஏற்படும் நச்சு புகை மண்டலம் பல நாடுகளுக்கு பரவி அதனால் பல லட்சக்கணக்காண உயிர்கள் பலியாகவும் என்று கணித்துஉள்ளர்.அணுமின் நிலையம் வெடிப்பு காரணமாக ஆசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறார்.

உயிரியல் ஆயுதங்கள்  
Biological weapons ரஷ்யா மற்றும் வடகொரியா உக்ரைனுக்கு எதிராக பயன் படுத்த கூடும் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

சூரிய புயல்

சூரியன் மீது இருந்து வரும் மின்காந்த ஆற்றல் பூமியைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அவை பூமியில் உள்ள மின் கட்டமைப்பு மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கும்..

2023ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அது உலகெங்கும் மிகப் பெரிய மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம்.. நமது தகவல் தொடர்பு முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.. போக்குவரத்து அமைப்புகளை முடங்கும்.. இதன் காரணமாக சமூக குழப்பங்களும் நிதி நெருக்கடிகளும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் ஏற்படும் பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் ஆபத்தும் உள்ளது

5079
5079ஆம் ஆண்டு வரை இவர் கணிப்புகளைச் செய்துள்ளார். அப்போது உலகம் அழியும் என்பதாலேயே அத்துடன் இவர் கணிப்புகளை நிறுத்தியதாக இவரது பாலோயர்கள் கூறுகின்றனர்.





No comments:

Post a Comment