விஜய் ஆண்டனி காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு 2 மகள்கள்
உள்ளனர். மூத்த மகள் லாரா சென்னையில் இருக்கும் பிரபல பள்ளியில் 12ம் வகுப்பு படித்து
வருகிறார். லாரா நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்
காரணமாக இப்படியொரு துயரமான முடிவை எடுத்திருக்கிறார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
ஆனால் அவர் எதற்க்காக தற்கொலை செய்து கொண்டார் என்று பெற்றோர்களுக்கு
தெரியவும் வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் பள்ளியில் மற்றும் வெளியில் தனக்கு நடக்கும்
மகிழ்ச்சியான விஷயங்கள் மற்றும் கசப்பான விஷயங்கள் அவர்களுக்கு பிடிக்காத நிகழ்வு எதனையும்
பகிர்ந்து கொள்வதில்லை.
பிள்ளைகள் அவர்கள் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு அவர்களே அதற்க்கு
விடை தேட முற்படுகிறார்கள். சில நேரம் அவர்களுக்கு அதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனில்
மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதனால் எதற்க்காக தற்கொலை செய்து கொண்டனர் என பெற்றோர்களே
அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
நம் பிள்ளைகளைகளிடம் நேரம் ஒதுக்கி அவ்வப்போது பேச வேண்டும். அவர்களுக்கு
இன்றைய நாள் எப்படி போனது அவர்கள் முகம் வாடி உள்ளதா என்று நம் கருத்தில் கொண்டு கவனிக்க
வேண்டும். நம் பிள்ளைகளுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த உலகத்தில் தீர்வு உண்டு
என்பதை நாம் அறிவுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும்
அவ்வப்போது. தோல்வியே எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள்
மீது அவர்கள் வயதுக்கு மீறி5ய பொறுப்பை திணிக்க கூடாது. நாம் வாழ்வதே பிள்ளைகளுக்காக
தான் அப்படி இருக்கும் போது அவர்களை கவனிப்பது மிகவும் அவசியம். பிள்ளைகள்
தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனில், நாம் எப்படிபட்ட நரக வாழ்வை குழந்தைகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறோம்
என நினைக்கத் தோணுது…சமூகத்தில் பெரும் தவறு இருக்கிறது..சம்திங் ராங்…அது என்ன?
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்…
பெற்றோர்களுக்கு,
தயவுசெய்து உங்கள் குழந்தைகளுடன் உரையாடுங்கள்…
அவர்களுக்கு தைரியம் கொடுங்கள், தோல்வி நிரந்திரமல்ல என சொல்லிக்கொடுங்கள்..
16 வயதே ஆன இந்த பெண் குழந்தைக்கு மனஅழுத்தம் அதிகமான காரணத்தினால்
நீண்ட நாட்கள் போராடி இன்று உயிரை மாய்துள்ளார்.
செல்வாக்கிற்கு குறையில்லா குடும்பம். விஜய் ஆன்டனி சமீபத்தில்
4 மணி நேர கான்சர்ட்க்கு வாங்கிய சம்பளம் மட்டும் 5 கோடி. அந்த குழந்தை ஆசையுடன் என்ன
கேட்டிருந்தாலும் வாங்கி தந்திருக்க முடியும்.
ஆனாலும், மன அழுத்தம் யாரையும் விட்டு வைக்கவில்லை. மனநலம் குறித்து
பல விழிப்புணர்வு கருத்துகளை விஜய் ஆன்டனி அவர்களே பதிவிட்டுள்ளார். துரதிர்ஷ்வசமாக
அவர் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. தற்கால பெற்றோர்கள், வருங்கால பெற்றோர்கள்,
யாராக இருந்தாலும், உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்கள் மனநிலையை புரிந்து
கொள்ளுங்கள், அவர்கள் மனநலம் எவ்வாறு உள்ளது என்பதை அடிக்கடி கண்காணியுங்கள்.
பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாம், குழந்தையை மறந்தால்,
நம் கை நிறைய பணம் இருக்கும்.
பணம் மட்டுமே இருக்கும்!
No comments:
Post a Comment