Search This Blog

Wednesday, November 8, 2023

$$$ சதுர்கால பைரவர் -சனி தோஷ பரிகார ஸ்தலம் மற்றும் பயத்தை போக்கும் சதுர...


$$$ சதுர்கால பைரவர் பற்றி அறிந்துகொள்ளலாம்


சனி தோஷ பரிகார ஸ்தலமாகவும் பயத்தை போக்கும் சதுர்கால பைரவர் கோயில்

ரிஷப ராசிக்காரர்களும், மற்றும் ரிஷ லக்னத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள மிகச் சிறந்த தலம்!

நான்கு வடிவங்களுடன் அருள்பாலிக்கும் சதுர்கால பைரவர் கோயில்

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிசைநல்லூர் எனும் சின்ன கிராமத்தில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சதுர்கால பைரவர் ஆலயம். இதை சிவயோகிநாதர் ஆலயம் என்றும் யோகநந்தீஸ்வரர்  ஆலயம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆலயம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிவயோகநாதர் என்றாலும்  நான்கு யுகங்களுக்கு அதிபதியாக அவரே நியமித்த தனது அவதாரமான பைரவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என சிவபெருமான் எண்ணியத்தினால் இங்கு பகவான் பைரவர் நான்கு யுகத்தின் தோற்றத்தில் சதுர்முக பைரவராக காட்சி தருகிறார்.  இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டப் பின் சதுர்கால (நான்கு யுக) பைரவர்களை வணங்கித் துதிக்காவிடில் பக்தர்களது கோரிக்கை நிறைவேறாது என்பது நம்பிக்கை ஆகும். இந்த ஆலய வரலாறு சுவையானது.


அனைவர் மனத்திலும் வெவ்வேறு அச்சம். வார்த்தைகல் என்றாலும் அடிப்படை பயம். இந்த பயத்தை அறவே போக்கி வெற்றிக்கு வழி அமைத்துத் தருபவர் ஸ்ரீபைரவர். 

இப்படி நினைத்ததையெல்லாம் கைகூட வைக்கும் பைரவர் சதுர்கால பைரவர் என்ற பெயருடன் 4 வடிவங்களுடன் அருள்பாலிக்கும் தலம் திருவிசலூர் எனும் திருவிசநல்லூர்.

கும்பகோணத்தில் அருகே உள்ளது இந்தத் தலம். சிவயோக நாதர் என்ற பெயருடன் சிவபெருமானும் செளந்தரநாயகி அம்பிகையும் அருள்பாலிக்கும் இந்த தலத்தில் சனீஸ்வரரின் உருவாக இருப்பவர் ஸ்ரீ பைரவர்.

அதனால் சனி தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது இந்த திருவிசநல்லூர். விசேஷமாக அழைக்கப்படுபவர் சதுர்கால பைரவர்தான். வரிசையாக நான்கு பைரவ மூர்த்திகளை இங்கு காணலாம். இந்த பெருமானுக்கு தான் அஷ்டமி தோறும் விசேஷமாக ஹோமங்களும், ஆராதனைகளும்.நடக்கிறது

சதுர்கால பைரவர் சன்னதி முன்பு நடைபெறும் வேள்வியை திரண்டெழுந்து தரிசிக்கிறார்கள் பக்தர்கள். பக்தர்கள் அளிக்கும் மலர்கள் உட்பட அனைத்தும் பைரவருக்காக சமர்ப்பணம் ஆகின்றன. இந்த பைரவரை வழிபடுவதால் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர்.

 ஞானகால பைரவர் அருகில் தெட்சிணாமூர்த்தியும்,

 சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும், 

உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். 

யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது.

இவர்களை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு.

·      இங்கு  பைரவர் திருவாச்சி கோலத்தில் காட்சி அளிப்பதால் , ஒருவரது பொருளாதாரம் , தொழில் விருத்தி ஆகும் .

·      பைரவரை தேய்பிறை அஷ்டமியில் தரிசித்தால் , உடல் நலகுறைவு ,குடும்ப கஷ்டம் , தீவினை , கண் திருஷ்டி அகலும்.

·      ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் , தொலைந்து போன செல்வம் , பொன் , பொருள் மீண்டும் கிடைக்கும்

தன் வீட்டு கிணற்றில் கங்கையை பெருகி வரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்ய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது, பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் கேட்க, கங்கையில் குளிக்க வேண்டும் என்றார்கள். இவர் இத்தல இறைவனை வேண்ட, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கைநீர் பெருக்கெடுத்தது.

இத்தலத்திலுள்ள சதுர்கால பைரவர் சந்நிதியும் மிக விசேஷமானது. யுகத்திற்கு ஒரு பைரவராக நான்கு பைரவர் காட்சி தருகிறார். வளர்பிறை, தேய்பிறை அஷ்டதி திதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்திலும் மிளகு தீபம் ஏற்றி சதுர்கால பைரவர் சந்நிதியில் வழிபடுவது மிகவும் நல்லது.

கிருத்திகை, ரோஷ்ணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களும், மற்றும் ரிஷக லக்னத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள மிகச் சிறந்த தலம் இதுவாகும்.

சுவாமி சந்நிதிக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதியும் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. இங்கே லட்சுமியை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளை, அவரின் ஜென்ம நட்சத்திரமான திருவோணத்தன்றும், சிரவணம், ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் விலகும், திருமணத் தடை விலகும், மேலும் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

சிறப்புக்கள் :

·      இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.

·      வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

 

·      சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இருக்கின்றன.

 

·      இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.

 

·      கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது.

 

·      இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர்.

 

·      தன் வீட்டு கிணற்றில் கங்கையை பெருகி வரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம்

பரிகாரமும் பலனும்

  • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வில்வம் மற்றும் அரளிப் பூக்களால் அர்ச்சித்தால் வருமை விலகும்.
  • வளர்பிறை அஷ்டமி நாளில் 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அர்ச்சித்து அந்த காசை பணப்பெட்டியில் வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும்.
  • ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி அர்ச்சித்து வழிபட்டால் விரைவில் நல்வாழ்வு அமையும். அந்த நம்பிக்கையுடன் பைரவரின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் வழியில் திருவிசநல்லூர் உள்ளது.


No comments:

Post a Comment