Search This Blog

Sunday, November 5, 2023

பூ விழுங்கும் விநாயகர்- சிலைக்குள் செல்லும் பூ! இந்த பூ விழுங்கி விநாயக...


உண்மையிலேயே அதிசயம் தான்.. சிலைக்குள் செல்லும் பூ! இந்த பூ விழுங்கி விநாயகர் பற்றி தெரியுமா?




இந்த கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் திருச்சிற்றம்லத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் மதுரை சவுண்ட கோப்பா கேசவர்மன், ராஜகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்ரவர்த்தி, ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீர பாண்டியன், சுந்த் பாண்டியன ஆகிய மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளதாக அந்த கோயிலில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இங்கு அம்மன் சன்னதிக்கு வலது புறம் #பூ_விழுங்கும்_விநாயகர்# என்னும் பெயருடைய விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தங்கள் காரியங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டு பூ விழுங்கும் விநாயகரின் இரு செவிகளிலும் உள்ள துவாரங்களில் பூக்களை செருகி வைப்பார்கள். அவர்கள் நினைத்து வைத்த காரியம் நிறைவேறும் என்றால் செவி துவரங்களில் செருகிய பூக்கள் உள்ளே சென்றுவிடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.



ஒருவேளை பூ தாமதமாக சென்றால் காரியமும் தாமதப்படும். ஆனால் காரியங்கள் நிறைவேறாது என்றால் செகளில் வைக்கப்பட்ட பூ அப்படியே இருக்கும். பக்தர்கள் அனுபவத்தால் இந்த உண்மையை அறிந்ததாக சொல்கின்றனர். 

இது இன்றும் நடந்து வருகிறது.விநாயகரின் இடது பக்கம் உள்ள காதில் உள்ள பூ உள்ளே செல்வதை பொறுமையாக பாருங்கள்


No comments:

Post a Comment