Search This Blog

Sunday, April 28, 2024

துலா ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 -25- 1 மே 2024முதல் மே 13, 2025 ...



துலா  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 24-25 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

3 மற்றும் 6ம் அதிபதி

துலா   ராசிக்கு குரு பகவான் 3ம்  மற்றும்  6ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார்.  இதுவரை உங்கள் ராசிக்கு 7ம்  வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு  8ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். துலா ராசிக்கு  குரு பகவான் அஷ்டம  ஸ்தானமான 8ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள் 7ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி , வேலையில் முன்னேற்றம் போன்ற அனுகூலமான  பலன்களை தந்து இருப்பர். மேலும் திருமணம் ஆகாத துலாம் ராசி நேயர்களுக்கு கடந்த 1 வருட காலத்தில் திருமணம் நடந்து இருக்கும்.

துலா  ராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12,2,4ம் இடத்தை பார்வை இடுவார்.



பொது பலன்

குரு பகவான் கோச்சாரத்தில் 8ல் சஞ்சரிக்க இருப்பதால் , இந்த ஒரு வருட காலத்தில் சில சவால்களை துலா ராசி நேயர்கள் சந்திக்க நேரும். கவனமாக செயல்படுவதன மூலம் இந்த சவால்களை நீங்கள் சமாளிக்கலாம்.சில  தடைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும். ஆனால் கடின உழைப்பு மற்றும் மனா உறுதியுடன், நீங்கள்  இதனை கடந்து வருவீர்கள். குரு பகவான் தான ஸ்தானமான 2ம் இடத்தை பார்வையிடுவதால்  , பண வரவு சரளமாக இருக்கும். தொழில் நல்ல வளர்ச்சி காணும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை தாமதப்பட்ட உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இந்த1 வருட காலத்திற்குள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும்.



காவல்துறை, அரசு அல்லது இராணுவம்  துறைகளில்  பணிபுரிபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது.வெளிநாட்டில் வேலை வாய்ப்பு விரும்புபவர்களுக்கு இந்த கால கட்டத்தில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க  உங்கள் துணையிடம் அன்பையும் அக்கறையையும்  இந்த கால கட்டத்தில் நீங்கள் காட்ட வேண்டும்.எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு ஏற்படும்.. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.கடன் வாங்குவதை தவிர்த்து சிக்கனமாக இருக்க வேண்டும். சொத்துக்கள் வாங்கி விற்பதன்  மூலம் வருமானம் வரலாம். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் மனம் அமைதி பெரும். பரம்பரை சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும் .

குரு பார்வை 12,2,4

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்த இடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ   அந்த இடம்  பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது  தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் குரு துலா ராசிக்கு  12வது வீடு, 2வது வீடு மற்றும் 4வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.



12ம் இடம்

விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை படும் போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

2 ம் இடம் :

குரு பகவான் குடும்பம், தன ஸ்தானத்தை பார்க்கும் போது பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

4 ம் இடம் :

.சுகம் , தாயார் ஸ்தானத்தில் குரு பார்க்கும் போது, நீங்கள் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், வாகன பிராப்தி உண்டாகும். பொன் , பொருள் , ஆபரண சேர்க்கை உண்டாகும். தாயாரின் உடல் நிலை நன்கு இருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும்.

குரு அஸ்தங்கம்

மே 3  2024 முதல்  ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில்  நிலையில் இருக்கும் போது, நீங்கள் எதனையும்  செய்யமுடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்,அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல் ஆகியற்றை தவிர்க்கவம். நியாபகமறதி அதிகம் இருத்தல்,உடல் வலி, வாயு

தொல்லைகளினால் அவதிப்படுதல் ஆகிய பலன்களும் ஏற்படலாம் .

 


குரு வக்கிரம் (பின்னோக்கி நகருதல்)

குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான்  7ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் வளர்ச்சி  நன்றாக இருக்கும்.பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.அனுகூலமான   இடமாற்றம்  கிடைக்கும்.  இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது நாள் வரை திருமணம் தடை பெற்றவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெறும்.கூட்டு தொழில் நன்மை தரும். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும்.

மாணவர்கள்

குரு பகவான் 4ம் இடத்தை கல்வி ஸ்தானத்தை  பார்வை இடுவதால் , மாணவர்கள் கல்வியில் ஆர்வமாய் இருப்பார்கள். மாணவர்களிடத்தில் ஆர்வமும் உத்வேகமும் இருக்கும். நல்ல பல்கலை கழகங்களில் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். ஒரு சில துலா  ராசி நேயர்கள் கல்விக் கடன்களைப் இந்த காலகட்டத்தில்  பெறலாம் மற்றும் உங்கள் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் படிப்பில் சிறந்து விளங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றியைக காணலாம்.

தொழில் மற்றும் உத்தியோகம்

துலா ராசி நேயர்களுக்கு தற்சமயம் குரு 8ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழிலில் , பணியில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குரு பகவான் 2 மற்றும் 4 ம் இடத்தை பார்ப்பதால் ,தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குரு பகவான் விரய ஸ்தானமான 12ம் இடத்தை பார்ப்பதால் , விரய சிலவுகள் கட்டுக்குள் இருக்கும்.சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.. ஸ்பெகுலேஷன் துறைகளின், பங்கு சந்தை  மூலம் உபரி வருமானம் உண்டாகும். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள்.மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள்.

போட்டிகளை சாதூர்யமாக சமாளிப்பீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்மையான பலன்கள் கிடைக்கும்.. வியாபார கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். தொழிலில் நீங்கள் நினைத்த அளவிற்கு லாபம் வராவிட்டாலும், முதலுக்கு மோசம் வராது.வியாபாரிகளுக்கு இத்தனை நாட்களாக வராத கடன்கள் வந்து சேரும். வேலை கிடைக்காத நபர்களுக்கு, ஊதிய உயர்வுடன் கூடிய பணி கிடைக்கும்.

அரசியல்

 துலா   ராசி நேயர்களுக்கு தற்சமயம் 5ல் உள்ள ஆட்சி பெற்ற  சனியால்  சஷத்ர யோகம்.ஏற்படுகிறது.இதனால் புகழ் , பொருள் சேர்க்கை , நல்ல மனைவி , உயர் கல்வி , நல்ல குழந்தை ஆன்மிக ஈடுபாடு  ஆகிய யோகமான பலன்கள் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு  உங்களின் செயல், பேச்சில்  நல்ல முன்னேற்றம் காணப்படும்.. .எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் சுலபம். உங்கள் அரசியல் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்.

கலைத் துறை

துலா  ராசி நேயர்களுக்கு  சனி 5ல் ஆட்சி பெற்று காணப்படுவதும் ,  6ல் ராகு   இருப்பதும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.. எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதாக இருக்கும்.. அதனால் உங்களின் திறமை வெளிப்பட்டுப் பெயர், புகழ் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள்.

துலா   ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

துலா  ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  நன்றாக இருக்கிறது.

8ல் குரு , 6ல் ராகு , 12ல் கேது , 5ல் சனி ஆட்சி சஷத்ர யோகம்

 

கோச்சாரத்தில் 6ல் ராகு

ராகு ஆறாம் இடத்திற்க்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி வரும். உங்களின் எதிராளி அடங்கி போவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விழாக்கள் கொண்டாடங்களில் ஈடுபடுவீர்கள்.

குரு 8ல் கோச்சாரத்தில் இருப்பது

இம்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம்படி ஆனதும் என்கிறது ஜோதிட பாடல்.  அட்டம குருவில் தொட்டது தொலங்காது என்று கூறுவார்கள்.

குரு 8ல் இருந்தால் மனகவலை, நோயினால் பாதிப்பு , சிறு விபத்துகள் , , காரியத்தில் இடையூறு ஏற்படும்.

சனி 5ல் இருப்பது

 சனி 5ல் இருக்கும் பொழுது  குழந்தைகளை பற்றிய கவலை , குடும்பத்தில் அமைதியின்மை , பொருள் சேதம் உண்டாகும்.

கேது 12ல் கோச்சாரத்தில் இருப்பது

உங்களுக்கு தெய்வ அருள் துணை நிற்கும். கனவில் உங்கள் குல தெய்வம் தோன்றி உங்களை பாதுகாக்கும். ஆன்மீக சுற்றுலாக்கள் , காசி , ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை செல்வீர்கள். நாளை என்ன நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்து இன்றே அதற்கேற்ப நடந்து கொள்வீர்கள்.

கன்னி   ராசிக்கு குரு பகவான் 9ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

 1.புதிய முயற்சிகளில் தடை அல்லது தாமதம் ஏற்படும்.

2. வேலையில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும்.

3. விரும்பாத இடத்திற்கு இடமாற்றம் அமையும்.

4. உடல் மற்றும் மன நலத்தில் கவனம் தேவை

4. குழந்தைகளை பற்றிய கவலை மனதை வாட்டும்.

5. தேவைக்கேற்ப வருமானம் அமையும். குரு இரண்டாம் வீட்டை பார்வை இடுவதால்

6. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்

7. பொன் , பொருள் , ஆபரண சேர்க்கை , வீடு , மனை வாங்கும் யோகம் குரு 4ம் இடத்தை பார்வை இடுவதால் அமையும்.

8.ஆன்மீக சுற்றுலாக்கள் , காசி , ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை செல்வீர்கள்

9.. நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி வரும். 5ல் சனி ஆட்சி சஷத்ர யோகம்

10.உங்களின் எதிராளி அடங்கி போவார்கள்.

11.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

12.போட்டிகளை சாதூர்யமாக சமாளிப்பீர்கள்.

13.உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

14.வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்மையான பலன்கள் கிடைக்கும்.

பரிஹாரம்

துலா ராசி நேயர்களுக்கு குரு 8ல் சஞ்சரிக்க  இருப்பதால்  தீமையான பலன்கள்   ஏற்படலாம்.. வியாழக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம், கொண்டக்கடலை சாற்றி அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது   பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

துலா ராசி நேயர்களுக்கு சனி  5ல் சஞ்சரிக்க  இருப்பதால் சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


No comments:

Post a Comment