Search This Blog

Saturday, April 27, 2024

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 24-25 1 மே 2024 முதல் மே 13, 2025 வர...


கன்னி  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 24-25 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

4மற்றும் 7ம் அதிபதி

  கன்னி ராசிக்கு குரு பகவான் 4ம்  மற்றும்  7ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார்.  இதுவரை உங்கள் ராசிக்கு ,எட்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம்  வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். கன்னி ராசிக்கு  குரு பகவான் பாக்கிய    ஸ்தானமான 9ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள் 8ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வேலையில் அனுகூல மற்ற பலன்களை தந்து இருப்பர்.  இனிமேல்தான் உங்களுக்கு நல்ல காலம் .



பொது பலன்

குரு பகவான் கோச்சாரத்தில் 9ல் சஞ்சரிக்க இருப்பதால் , உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு  பஞ்சம் இருக்காது. தொழில் சிறப்பாக இருக்கும்.உங்கள் குடும்பத்தினருடன் புனித யாத்திரை தலங்களுக்குச் சென்று மகிழலாம்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சியடையும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் .ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவீர்கள். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம்.பணியிடத்தில் உங்களுக்கு நற்பெயர் இருக்கும்.  புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். 2024 ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக இருக்கும். இது வரை திருமண தடை இருந்தவர்களுக்கு தற்சமயம் திருமணம் நடந்தேறும்.

9ல் குரு இருப்பதால் ,உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த காலக் கட்டத்தில் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். அது லாபகரமாக அமையும்.உங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எல்லா செயலிலும் முழுமையான வெற்றியினை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் கூட்டாளிகளை நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆதாயங்களை  பெறமுடியும். ஒரு சிலருக்கு  சமுதாயத்தில் கௌரவ பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அமையும்.

குரு பார்வை 1,3,5

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ   அந்த இடம்  பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது  தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் குரு கன்னி ராசிக்கு  1வது வீடு, 3வது வீடு மற்றும் 5வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.



1ம் இடம்

குரு பகவான் ஜாதகத்தில் ஜன்ம ராசியை பார்க்கும் போது, அந்த ஜாதகர் தன் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். அவருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கன்னி ராசியில் உள்ள கேதுவை குரு பார்ப்பதால் குரு கேது பார்வை கோடீஸ்வர யோகம் என்ற அமைப்பை தருகிறது. இதனால் உங்களுக்கு இந்த கால கட்டத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகும் அமைப்பு ஏற்படும்.

குரு கேது பார்வை கேள யோகம் என்கிற கோடீஸ்வர யோகத்தை தரும்.இந்த யோகம்  கொண்டவர்கள் திடீரென செல்வச்செழிப்பு பெற்று அவர்கள் வாழும் பகுதியிலேயே மிக உயர்ந்த செல்வந்தராக வாழ்வார்கள். இந்த யோகமானது ஒருவரை திடீரென பெரும் செல்வந்தர் ஆக்கும்.

3 ம் இடம் :

தைரிய, இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள். தைரிய,.குரு பகவான் 3ம் இடத்தை பார்வை இடுவதால், மனோ தைரியம் , கீர்த்தி , புகழ் , இளையசகோதரருக்கு முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் மூலம் பண வரவு இருக்கும்



5ம் இடம் :

குரு பகவான் ஜாதகத்தில் 5ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும் போது ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வையால், உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருப்பின் இந்த ஒரு வருட காலத்தில் அவை தீரும். உங்கள் குழந்தைகளின் தொழில், வேலை, படிப்பு, திருமண வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்களில் மென்மையான  பலன்கள் கிடைக்கும்.

குரு அஸ்தங்கம்

மே 3  2024 முதல்  ஜூன் 32024 க்கு இடையில், குரு அஸ்தங்க நிலையில்  நிலையில் இருக்கும் போது, நீங்கள் எதனையும்  செய்யமுடியும் என அதீத கர்வத்துடன் இருத்தல்,அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுத்தல் ஆகியற்றை தவிர்க்கவம். நியாபகமறதி அதிகம் இருத்தல்,உடல் வலி, வாயு தொல்லைகளினால் அவதிப்படுதல் ஆகிய பலன்களும் ஏற்படலாம் .



குரு வக்கிரம் (பின்னோக்கி நகருதல்)

குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் வளர்ச்சி பாதிப்பு இருக்கும்.... பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு தடை, அனுகூலமற்ற  இடமாற்றம்   போன்ற அனுகூலமற்ற  பலன்கள்  ஏற்படலாம் . .  இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது.குரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும்.

மாணவர்கள்

குரு பகவான் 5ம் இடத்தை பார்வை இடுவதால் , மாணவர்கள் கல்வியில் ஆர்வமாய் இருப்பார்கள். ஒரு சில கன்னி ராசி நேயர்கள் கல்விக் கடன்களைப் ஈந்த காலகட்டத்தில்  பெறலாம் மற்றும் உங்கள் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் படிப்பில் சிறந்து விளங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகம்

கன்னி ராசி நேயர்களுக்கு தற்சமயம்  சனி 6ல் சஞ்சரிப்பதாலும் , குருபகவான் 9ல் இருப்பதும்  தொழில் அமோகமாக இருக்கும்.. குரு பகவான் பாக்கியஸ்தானமான  ஸ்தானமான 9ல் இருப்பதால், ஓடிப்போனவனுக்கு 9ல் குரு என்பதற்கு ஏற்ப  பண வரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

வியாபாரிகளுக்கு இத்தனை நாட்களாக வராத கடன்கள் வந்து சேரும். வேலை கிடைக்காத நபர்களுக்கு, ஊதிய உயர்வுடன் கூடிய பணி கிடைக்கும்.

பணியில்  இருப்பவர்கள் தற்போது உள்ள பணியை  தொடரலாம் அல்லது புதிய பணிக்கு  முயற்சி செய்யலாம். அதே போல தொழில் செய்பவர்களும், தங்களின் தொழிலை தற்சமயம் விரிவு படுத்தலாம்.புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அந்த முயற்சியில் தற்சமயம் ஈடுபடலாம். குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான் அஷ்டம ஸ்தானமான   8ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் அல்லது வேளையில் வளர்ச்சி பாதிக்கப்படும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் அல்லது கொண்ட கடலை மாலை அல்லது அர்ச்சனை செய்து வரவும்.

அரசியல்

 கன்னி  ராசி நேயர்களுக்கு தற்சமயம் 6ல் உள்ள ஆட்சி பெற்ற  சனி ஹர்ஷ  யோகத்தை தரும். இந்த யோகத்தால்  சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல நண்பர்கள் மற்றும் மனைவி அமைவார்கள். கீர்த்தி மற்றும் தனம் உண்டாகும்  9ல் குரு  இருப்பது உங்களுக்கு அரசியலில் செல்வம் , செல்வாக்கு ஏற்படுத்தும்.அரசியலில் இருப்பவர்களுக்கு  உங்களின் செயல், பேச்சில்  நல்ல முன்னேற்றம் காணப்படும்.. .எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் சுலபம். உங்கள் அரசியல் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்.

கலைத் துறை

கன்னி  ராசி நேயர்களுக்கு  சனி 6ல் ஆட்சி பெற்று காணப்படுவதும் ,  9ல் குரு  இருப்பதும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.. எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதாக இருக்கும்.. அதனால் உங்களின் திறமை வெளிப்பட்டுப் பெயர், புகழ் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள்.

கன்னி  ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

கன்னி ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  நன்றாக இருக்கிறது.

9ல் குரு , 7ல் ராகு , 1ல் கேது , 6ல் சனி ஆட்சி ஹர்ஷ  யோகம்

 அதாவது 2024-2025 இல்  பணவரவு சரளமாக இருக்கும். சிலவுகள் கட்டுக்குள் இருக்கும்.1ல் கேது இருப்பதும் 7ல் ராகு இருப்பதும்   நன்மையான பலன்கள் தராது..கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்படலாம். விட்டு கொடுத்து போனால் வெற்றி நிச்சயம்.

9ல் குரு இருப்பதால் சரளமான பணவரவு இருந்தாலும் சிலவுகள் அதிகரிக்கும்.. 7ல் ராகு இருப்பதால் கூட்டு தொழில் சிக்கலை தரும். .. தந்தை வழி சொத்துக்களில் வில்லங்கம் உண்டு.  சிறு உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ செலவுகள் இருக்கலாம். ராகு மற்றும் கேது பிரீத்தி செய்து கொள்ள வேண்டும்.

 9 இடம் குரு   தந்தை பாசம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் மன அமைதி கிடைக்கும்.

குரு 5 ம் பார்வை ராசியே பார்ப்பது சமூகத்தில் மதிப்பு இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும்.

7 ம் பார்வை 3 இடத்தை பார்வை செய்கிறார் புதிய முயற்சிகள் வேலைகள் சிறப்பாக இருக்கும் சகோதர ஒற்றுமை கிடைக்கும். சுறுசுறுப்புக்கு பஞ்சம் இருக்காது...

9 ம் பார்வை பூர்விக புண்ணிய ஸ்தானம் ஆன்மீக பயணம் தொடரும்  குடும்பம் பிரச்னை தீர்வு இருக்கும் இந்த குரு பெயர்ச்சி யில் நிறைய கோவில் செல்ல வாய்ப்பு உண்டு கன்னி ராசிக்கு.

கன்னி   ராசிக்கு குரு பகவான் 9ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1. குரு பகவான் ஜென்ம  ராசியை மற்றும் அங்குள்ள கேதுவை பார்ப்பதால் , கேள யோகத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். பங்கு சந்தை , சொத்துக்கள் மூலம் திடீர் தனவரவு ஏற்படும்.

2.குரு பகவான் ஜாதகத்தில் ஜன்ம ராசியை பார்க்கும் போது, அந்த ஜாதகர் தன் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். அவருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

3.தைரிய, இளைய சகோதரர் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கும் போது, உங்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். தைரியமாக நல்ல விஷயங்களை செய்வீர்கள்.

4.குரு பகவான் ஜாதகத்தில் 5ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும் போது ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

5.குரு பகவானின் ஐந்தாம் பார்வையால், உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சனைகள் இருப்பின் இந்த ஒரு வருட காலத்தில் அவை தீரும்

6.குழந்தைகளின் தொழில், வேலை, படிப்பு, திருமண வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்களில் மேன்மையான  பலன்கள் கிடைக்கும்.

7.குரு பகவான் 5ம் இடத்தை பார்வை இடுவதால் , மாணவர்கள் கல்வியில் ஆர்வமாய் இருப்பார்கள்.

8.போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

9.கன்னி ராசி நேயர்களுக்கு தற்சமயம்  சனி 6ல் சஞ்சரிப்பதாலும் , குருபகவான் 9ல் இருப்பதும்  தொழில் அமோகமாக இருக்கும்..

10.ஓடிப்போனவனுக்கு 9ல் குரு என்பதற்கு ஏற்ப  பண வரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

11.குருவின் வக்கிர கதியின் போது, அக்டோபர் 9, 2024 முதல் பிப்ரவரி 4, 2025 வரை,  குரு பகவான் அஷ்டம ஸ்தானமான   8ல் சஞ்சரிப்பதால் ,உங்கள் தொழில் அல்லது வேளையில் வளர்ச்சி பாதிக்கப்படும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் அல்லது கொண்ட கடலை மாலை அல்லது அர்ச்சனை செய்து வரவும்.

12.9ல் குரு  இருப்பது உங்களுக்கு அரசியலில் செல்வம் , செல்வாக்கு ஏற்படுத்தும்.அரசியலில் இருப்பவர்களுக்கு  உங்களின் செயல், பேச்சில்  நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பரிஹாரம்

கன்னி  ராசி நேயர்களுக்கு  8ல் ராகு , 1ல் கேது ,மற்றும் ராகு 7ல் இருப்பதால்  தீமையான  ஏற்படலாம்.. சனி கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

 

செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது   பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


No comments:

Post a Comment