Search This Blog

Friday, April 12, 2024

#சந்நியாசி ஆகும் அமைப்புள்ள ஜாதகர் யார் ?# #கௌதம புத்தர் , பரமாச்சியார்...


#சந்நியாசி ஆகும் அமைப்புள்ள ஜாதகர் யார் ?#

#கௌதம புத்தர் , பரமாச்சியார் ஜாதகம் என்ன சொல்கிறது ?#

ஜாதகத்தில் சந்நியாசி யோகம்

சந்நியாசி யோகம் என்பது ஒரு ஜாதகத்தில் சில குறிப்பிட்ட கிரக அமைப்புகள் காணப்படும்போது, அந்த ஜாதகர் துறவு வாழ்க்கையை ஏற்கக்கூடும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது பிரவ்ராஜ்ய யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சந்நியாசி யோகம் உள்ள ஜாதகர்கள், உலக இன்பங்களில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மீக தேடலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?

பத்தாம் ஸ்தானம் கர்ம ஸ்தானம், காரிய ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், பத்தாம் ஸ்தானம் ஒவ்வொருத்தரும் விரும்பி பார்க்கும் கேட்கும் ஸ்தானமாகும் ஏன்னென்றால் இந்த பிறவியில் எந்த செயல் செய்து பிழைக்க போகிறார் அதாவது எந்த தொழிலை செய்ய போகிறார், எப்படி  செய்ய போகிறார் போன்றவற்றை காட்டும் ஸ்தானம் இருப்பார்கள்.

உண்மையமான சன்யாசி

சூரியன் சனிசெவ் வாயும் தொடரவே இரண்டின் கோளன் காரிய ஐந்தின் நாதன் தன்னொடும் கலந்து நின்றால் வீரியம் தன்னை நீக்கி வெறுத்துச்சந் நியாசி யாவான் ! சீரிய திரியாம் கைம்பெண் தன்னையும் தீண்டான் என்னே !

(இ-ள்) சூரியன் சனி செவ்வாய் ஆகிய மூவரும் இணைந்திருக்க இவர்களோடு இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் சேர்ந்திருந்தால் ஜாதகர் சிற்றின்பப் போகத்தை வெறுத்தொதுக்கிச் சன்யாசி ஆவர்கள். ஒரு விதவைப் பெண்ணைக்கூட தவறான எண்ணத்தோடு தொடமாட்டான்

(கடகம் & தனுசு லக்கினத்திற்கு சூரியன் + செவ்வாய் + சனி இவர்களின் சேர்கை சன்யாசி வாழ்வைத்தரும்.)

புத்தரின் ஜாதகத்தில் உள்ளது.

புலிப்பாணி

கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க

கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்

ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்

அப்பனே தபசியடா யோகிஞானி

கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்

குவலயதில் புனிதனடா ஞானியோகி

வீளப்பா விண்ணுலகத் தேவரோடு

விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே

 -விளக்க உரை- இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.              

No comments:

Post a Comment