Search This Blog

Tuesday, March 12, 2024

கிரஹங்கள் நிஷ் பலன் என்ன பலன் ? ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் நிஷ் பலம் ...


கிரஹ நிஷ் பலம்

கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்து விடக்கூடாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன. அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.



கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள்

(1) வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்
(2) திசையினில் வலிமை (அ) திக் பலம்
(3) காலத்தில் வலிமை (அ) கால பலம்
(4) நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்
(5) இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்
(6) பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

ஸ்தான பலம் – கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை

(1)உச்சம்
(2)மூலத் திரிகோணம்
(3) ஆட்சி
(4)நட்பு
(5)பகை
(6)கேந்திரம்
(7)திரிகோணம்
(8)பணபரம்
(9)ஆபோக்லிமம்

                              திக் பலம்

புதன்,குரு -கிழக்கிலும் -(அ) லக்னத்திலும்

சனி -மேற்கில் -(அ)7 ல்,

சந்திரன்,சுக்கிரன் -வடக்கிலும் -(அ) 4 லும், திக் பலம் உள்ளவர்கள் .

சூரியன்,செவ்வாய்,தெற்கிலும் -(அ)10 லும் திக் பலம் அடைவார்கள்



நிஷ் பலம்

நிஷ் பலம் என்பது கிரஹங்கள் வலுவிழந்த நிலையை குறிக்கும். ஒரு கிரகம் நீச்சம் அடைந்தால்  என்ன பலன் தருமோ அதே பலனை நிஷ் பலம்  பெற்ற கிரகம் தரும்.

குருவும் புதனும் நிஷ் பலம்

லக்கினத்தில் குரு பகவானும் புத பகவானும் திக் பலம் பெறுவார்கள். லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில குருவும் புதனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை)அடைவார்கள்.

புதன் நிஷ் பலம்

 நிஷ்பலம் அடைந்த கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்தால் நிஷ் பலம் நீங்கி நன்மையான பலன்களையே தருவார்கள். உதாரணமாக மீன லக்கினத்திற்கு புதன் பகவான் 7ம் இடமான கன்னியில் அமையப்பெற்றால் நிஷ் பலம் அடைவார்.ஆனாலும் புதன் கன்னியில் ஆட்சி , உச்சம் , திரிகோணம் அடைவதால் புதன் வலுப்பெற்று பஞ்சமகா புருஷ யோகமான பத்திர யோகத்தை தருவார்.

சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம்

லக்கினத்தில் இருந்து 4ம் இடத்தில் சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில் இருந்து 10 இடத்தில் அமைந்தால் சுக்கிரனும் சந்திரனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள். உதாரணத்திற்கு , கடக லக்கின ஜாதகருக்கு சுக்கிரனும் , சந்திரனும்  10ம் இடத்தில் அமைந்தால் நிஷ் பலம்  (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சந்திரன்  பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் நிஷ்  பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில்  சந்திரன் மிகவும் பிரகாசமாக  இருக்க மாட்டார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு  சந்திரன்  அதிகம் பிரகாசமாக . அப்பொழுது சந்திரன்  4ம் இடத்தில்  திக் பலம் அடைந்து காணப்படுவார். 



சனி நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில் சனி திக் பலம் அடைவார்.  லக்கினத்தில் சனி அமர்ந்தால் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்.

சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 10ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில்  இருந்து 4ம் இடத்தில அமர்ந்தால்  சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சூரியன் பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் திக் பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில் சூரியன் மிகவும் பிரகாசமாக இருப்பார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு சூரியனின் தாக்கம் அதிகம் இருக்காது. அப்பொழுது சூரியன் 4ம் இடத்தில் நிஷ்பலம் அடைகின்றார் .

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார் என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுக்கிரன் நீச்சம்

மிதுன லக்கினத்திற்கு 4ம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் அடைவார் . ஆயினும் சுக்கிரன் 4ம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு திக் பலம் பெறுவதால் யோகமான பலன்களை தருவார். அதாவது சுக்கிரன் நீச்சம் பங்கம் அடைந்து ராஜயோகத்தை  தருவார். மிதுன லக்கின 4ல் அமர்ந்த சுக்கிரன் சொத்து, வாகன யோகம் , மனைவி ,பெண் சுகம் , தாயாருக்கு மேன்மை போன்ற யோகப்பலன்களையே சுக்கிர பகவான் தருவார் என்பதை நாம் உணர வேண்டும். 

இதே சுக்கிர பகவான் மிதுன லக்கினத்திற்கு 10ம் இடத்தில் அதாவது மீனத்தில் உச்சம் பெற்று  அமர்ந்தால் , அவர் நிஷ்பலம் அடைவதால் யோகப்பலன்களை குறைத்து  கொடுப்பர்.



செல்வி ஜெயலலிதா ஜாதகம்.

உதாரணமாக செல்வி ஜெயலலிதா ஜாதகம். மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.. சிறை செல்ல நேரிட்டது. நிஷ்பலம் அடைந்த சுக்கிரன் யோகத்தை கொடுத்து பின்னர் சுக்கிர பகவானே அதனை கெடுத்தார் என்பதை நாம் உணர  வேண்டும்.

உதாரணமாக துலா லக்கின ஜாதகத்தில் 2 மற்றும் 7க்கு உடைய செவ்வாய் 10 இடத்தில நீச்சம் பெற்று அமைந்தால் அவருக்கு நல்ல குடும்பம் அமையாது , உயர் கல்வி அமையாது , திருமண வாழ்கை சிறப்புற்று இருக்காது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் செவ்வாய் 10ம் இடத்தில் திக்பலம்  பெற்றதால் யோகமான வாழ்வே அமையும் . நல்ல வேலை  அல்லது தொழில் , அரசு வேலை , அதிகாரமிக்க வேலை , காவல் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் நிலையை 10ல் திக்பலம் பெற்ற செவ்வாய் ( நீச்சம் அடைந்த செவ்வாய்) தருவார்.



இதே செவ்வாய் துலா லக்கின ஜாதகத்தில் 4 ல் உச்சம் பெற்று காணப்பட்டால் அவர் 4 ம் இடத்தில் நிஷ்பலம் பெரும் நிலையை அடைவதால் யோகப்பலன்களை ஜாதகருக்கு குறைத்து கொடுப்பார்.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார்.

மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .


No comments:

Post a Comment