திரிலோச்சண யோகம்
Search This Blog
Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts
Friday, March 24, 2023
Friday, December 1, 2017
ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்க How to mitigate the doshas in Jataka
ஜாதகத்தில்
உள்ள தோஷங்கள் நீங்க
நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம்
ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது.
நம் ஜாதகத்தில் இருக்கும்
தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே.
நாம் தினமும்
குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும்
என்று கூறப்படுகிறது. வாருங்கள்
இது குறித்து பார்ப்போம்.
சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க:
சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும்
நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின்
வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள்
அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம்.
சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு
முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால்
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க:
செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் தடைபடுகிறது,
திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சனைகள் வருகிறது என்று பலர்
கவலைப்படுவதுண்டு.
இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் என்னவென்றால்,
வில்வ கொட்டையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடி
செய்து,
குளிக்கும் நீரில் கலந்து அதில் ஒரு நான்கைந்து குவளைகள்
குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் செவ்வாய்
தோஷம் விலகும்.
புதனால் ஏற்படும் தோஷம் நீங்க:
புதன் தோஷம் நீங்க கங்கை நீரோ அல்லது கடல் நீரோ தேவை.
சிறிதளவு மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து பின் அதை சிறிதளவு கடல்
நீரிலோ அல்லது கங்கை நீரிலோ கலந்து பின் அனைத்தையும் நாம் குளிக்கும் நீரில் கலக்க
வேண்டும். பின் இந்த நீரில் குளிப்பதன் மூலம் புதனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
குரு பகவான் தோஷம் நீங்க
கருப்பு ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில்
நன்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவருவதன் மூலம்
வியாழனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சுக்கிர பகவான் தோஷம் நீங்க,
சுக்கிர தோஷம் நீங்க, பச்சை ஏலக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு
கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர
வேண்டும்.
சனி பகவான் தோஷம் நீங்க
சனி தோஷம் நீங்க, கருப்பு எள் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு
கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
ராகு பகவான் தோஷம் நீங்க
ராகு தோஷம் நீங்க, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மகிஷாக்ஷியை
சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும்
நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
கேது பகவான் தோஷம் நீங்க
கேது தோஷம் நீங்க, அருகம்புல்லை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை நீரில் நான்கு
கொதிக்கவைத்து பின் அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்துவர வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)