பொன்னம்பலவனின்
ஆனந்த தாண்டவம்!
நடராஜர் சிலை வடிவத்தை
பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில்
வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப்
படித்திருப்போம்.
நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.
அந்தக் குறியீடுகளில்
சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒற்றைக் காலில்
நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.
ஆடுவது தாண்டவமானாலும்
சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.
இரண்டு காதுகளிலும்
வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும்
தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?
முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு
மத்தியில், நெருப்பாய்
எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.
பொன்னம்பலவனின் ஆனந்த
தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக
முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!
அவற்றில்:
சேஷநாகம்
|
கால
சுயற்சியையும்
|
கபாலம்
|
இவன் ருத்ரன்
என்பதையும்
|
கங்கை
|
அவன் வற்றா
அருளையும்
|
ஐந்தாம்நாள் பிறைச்சந்திரன்
|
அழிப்பது
மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே
கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.
|
பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார
மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின்
(ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது
வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை
குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர்
உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.
வலது காலின் கீழே
இருப்பது ‘அபஸ்மாரன்‘ எனும் அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக்
குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம்
வேண்டி.
தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும்
மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட
வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர
மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.
இந்தக் கரம் யானையின்
துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது
காலைப் பாரும் – அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென
கைகாட்டி சொல்கிறது.
பின் வலது கரம், பஞ்சாக்ஷர
மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை
(டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான்
ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.
அடுத்தாக, ஆடல் வல்லானினின்
முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று
அருளும் காட்சி, பஞ்சாக்ஷர
மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம்
தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன்
வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி
துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?
நடராஜனின் திருஉடலில்
நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த நாகம் – சாதரணமாய்
சுருண்டு இருக்கும், யோகத்தினால்
எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன்
இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே
கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!
பொன்னம்பலம் தன்னில்
நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில்
தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக்
காணலாம்.
அதன் மேலே ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன்
நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்த
பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!
அவனே ஆண்டவன். எல்லாப்
பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய்
இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும்
இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
– யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந்
தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
– பன்னிரெண்டாம்
திருமுறை மடியிற்போட்டு தூங்கப்
பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது.
[சூக்கும காரண உடலை கடந்த போது ஆத்மாவே இதயம்]
பிராணன் விழித்துக்
கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமாங்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய்
வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது.
சுழுத்தி : தூக்க
நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தில்
ஒன்றியிருக்கிறான்.
மனது சுதந்தரமின்றி பிராண
சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு
வர முடியவில்லை.
ஆனால் தானாகவே உலகத்தை
உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும், தள்ளிவிட்டு
இதயக்குகையில் இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும்
கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள்
ஏற்படுகிறது.
இதுதான் உண்மை ஞான அறிவு.
இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். எல்லா தத்துவங்களையும் எளிதாக
அறியலாம். மனம் எப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு
இருக்குமானால் பேரின்பம் உண்டாகும். இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம்
ஆகும்.
பிராணாயாமம் பற்றி
ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு
நாதவிந்து என்றும்
நடுவனையிலே இருந்தபோதமென்று
மீண்டும் புகன்றதெல்லாம் – ஓதரியவாசிக்கே சொன்ன
வகையல்லால் வேறன்றுநேசித்து நீ முனையில் நில்
நாசிவரும் வாசி
நடுவனையிலே மறித்துஊசித்துளை வழியே
உள்ளேற்றிப் பேசும்இடமறிந்து சென்றே எல்லாமும்
நீயதுவாய்த்திடமறிந்து கண்டு தெளி
கண்டதுண்டந் தானறிந்து
காரணராஞ்
சற்குருவைத்தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற்
துண்டமதிற்காலைமே லேற்றுங்
கருத்தனைக்
காட்டுவார்[வேல் முனையைக் கண்டுமே லேற்று]
வாசி என்பது பிரமரந்திரம்
நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர்.
ஊசி என்பது சுழுமுனைக்கு
பெயர்.
“ஊசி துளையில் பாம்பு அடைப்போம்” – என்றார். ஒரு பெரியோர்.
அதன்செயல் கீழ்முகமாகச்
செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல்.
இடக்கை வலக்கை இரண்டையும்
மாற்றித்துதிக்கையால்
உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்உறக்கத்தை நீக்கி
உணரவல்லார்
கட்குஇறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே
இடகலை, பிங்கலை
நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை
மாற்றி சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த
வல்லார்க்குத் தளர்ச்சி இராது. உறங்கும் காலத்தில்
விழித்திருந்து, பயில்வார்க்கு
இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும்.
சுழுமுனைத் தியானத்தை
அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார்கள்
No comments:
Post a Comment