அகத்தியர் மாமுனிவர்
முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர்என்றும் அகத்தியமுனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது
அகத்தியர்தான்.தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த
வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும்
இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம்
இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம்
இது!
பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள்
காணக் கிடைக்கின்றன.
வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப்
படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப்
படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர்.மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில்
உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக
விளக்கியுள்ளார்.
அத்துடன்
இவர் எழுதிய பிற நூல்கள்
1
|
அகத்தியர் ஐந்து
சாத்திரம்,
|
2
|
அகத்தியர் கிரியை நூல்
|
3
|
அகத்தியர் அட்டமாசித்து
|
4
|
அகத்தியர்
வைத்தியரத்னசுருக்கம்
|
5
|
அகத்தியர் வாகட வெண்பா
|
6
|
அகத்தியர் வைத்திய கௌமி
|
7
|
வைத்திய ரத்னாகரம்
|
8
|
வைத்தியக் கண்ணாடி
|
9
|
வைத்தியம் 4600
|
10
|
வைத்தியம் 1500
|
11
|
செந்தூரன் 300
|
12
|
மணி 400
|
13
|
வைத்திய சிந்தாமணி
|
14
|
கரிசில்பச்யம்
|
15
|
நாடி சாஸ்திரப் பசானி
|
16
|
பஸ்மம்200
|
17
|
வைத்திய நூல்கள்
பெருந்திரட்டு
|
18
|
சிவசாலம்
|
19
|
சக்திசாலம்
|
20
|
சண்முக சாலம்
|
21
|
ஆறேழுத்து அந்தாதி
|
22
|
கர்மவியாபகம்
|
23
|
விதி நூன் மூவகை காண்டம்
|
24
|
அகத்தியர் பூஜா விதி
|
25
|
அகத்தியர் சூத்திரம் 30
|
26
|
அகத்தியர் ஞானம்
|
இத்துடன் "அகத்தியம்" என்னும்
ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர்
எழுதியதாக சொல்லப் படுகிறது. அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்த புரத்தில்
சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.
அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும்
பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய
முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து
அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்;
வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப்
பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர்.
இவரைக் கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் முனி, குட முனி என்று பல பெயர்களால் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியரின் பன்னிரு
மாணாக்கருள் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியர் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர்
இவருடைய மாணவர்களில் ஒருவர் என்றும் கூறுவார்கள்.
அகத்தியரிடம் இருந்தே ஒரு சித்தர் மரபு
தொடங்கியது எனலாம். அகத்தியர் மருத்துவம்,
ஞானம்,
நாடி
சாஸ்திரம், சோதிடம்,
யோகம்,
மந்திரம் போன்ற பல துறைகளில் பல நூல்களைப் படைத்துள்ளார்
என்பர்.
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக்
கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள்
ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து
அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து
வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும்
பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும்
வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள்
ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர்
முழுவதையும் குடித்து விட,
இந்திரன் அசுரர்களை அழித்தார்.
அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார்
அகத்தியர்.அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி
அரிய சக்திகளை பெற்றார்.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது
வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு
சிவபெருமான் கட்டளையிட்டார்.மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது.
தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற
அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார்
அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை
போக்கினார்.தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன்
என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை
அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில்
தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.அகத்தியர்
இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன்
மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும்
ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில்
செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து
வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே
வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர்.அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு
படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று
வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான்.
நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம்
மன்னிப்பு கோரினான். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த
கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து
ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார்.
அகத்தியர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய
"அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே
தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில்
சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர்
கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
Please click the following video link to know more about trekking to Agasthiar Koodam at Papavinasam Hills.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில்
காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர். புதுச்சேரிக்கு
அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை
போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு
அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும்
கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல்
நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு
நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது.
பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய
விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய
மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
தமிழின்
ஆதிகவி; - அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்; - முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்; - தொல்காப்பியரின் ஆசிரியர். புத்தமதக் கடவுள்
அவலோகிவர் எனும் போதிசத்துவரிடம் தமிழ் கற்றவர் என்று வீரசோழியமும், சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று கந்தபுராணமும், அகத்தியருடைய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைத்
தருகின்றன.
இராமன்
தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து
பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து
வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார்.
சமணர்களால் போற்றப்படுபவர்களின் பட்டியலிலும்
அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும்
அகத்தியர் இருக்கிறார். - சிலப்பதிகாரம், - மணிமேகலை, - பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள்
இடம் பெறுகின்றன.
வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில்
பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணத்தை
ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை வடமொழியில் அகத்தியர்
எழுதியதாகவும் கூறப்படுகிறது.
அகத்தியம் என்பதோடு "சிற்றகத்தியம்", "பேரகத்தியம்" என்று இரு நூல்கள்
இருந்தனவாம். சிறுகாக்கைப் பாடினியார், பெருங்காக்கைப் பாடினியார் போல சிற்றகத்தியார், பேரகத்தியார் என்று குறுமுனிக்குள்ளும் பல அண்டங்கள்.
சிவபெருமான் திருமணத்தில் வடக்கே இமயம் தாழ, தெற்கு உயர்ந்ததாகவும் வடக்கு, தெற்கை சமநிலைப்படுத்த அனுப்பி வைக்ககப்பட்டவர் அகத்தியர் என்றும் புராணக்
கதைகள் உள்ளன. தென்திசை நோக்கி வந்த அகத்தியர் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீர்
காவிரிதானாம்.
"அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று
ஒரு நூல்,
தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை என்றும் மூவர் பாடிய பதிகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்த பலனை எளிதில் பெரும் பொருட்டு அகத்தியரால் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியளிக்கப்பட்டதாகவும் முன்னுரை கூறுகிறது.
இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த
நாதமுனிகளும், அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப்
பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி
குறிப்பிடுகிறார்.
இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று
நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் வெய்யில் கடுமையாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகைமலை
போகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி.
அதற்கும் மேல் - கல்யாணதீர்த்தம், - பாணதீர்த்தம், பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதிமூலம்-பொதிகைத் தென்றல்
புறப்படும் பூங்குளம், அதற்கும்மேல் அகத்தியர் மொட்டை எனும்
பொதிகைமலை உச்சி. மூன்று நான்குநாள் பயணத் தேவைகளோடு மலையேறி அகத்தியரைப்
பார்க்கப் போகிறார்கள்.
பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்புகின்றார்கள். சித்த
மருத்துவத்திலும் அகத்தியருக்கு இடமிருக்கிறது. பதினெண் சித்தர்களில் ஒருவராகவும்
அகத்தியர் இருக்கிறார்.
இவ்வாறு அகத்தியர் - இலக்கியம், - இலக்கணம், - பக்தி, - மருத்துவம், - சமயம் என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி - தமிழ்-வடமொழி; - சைவம்-வைணவம்; - சமணம்-புத்தம்; - இராமாயணம்-மகாபாரதம்;
- வடக்கு-தெற்கு; - இமயம்-குமரி, - கங்கை-காவிரி, - வடநாட்டார்-தமிழ்நாட்டார் ஆகியவற்றிற்கிடையேயான
நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார்.
குறிப்பாக தனிப்பட்ட மொழி, இனம், மதம், நாடு கடந்து இந்திய கலாச்சார வரலாற்றின் படிமமாக
இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த ஒரே படிமமாக அகத்தியர் மட்டுமே தென்படுவது
வியப்பையும் பெருமிதத்தையும் தருகிறது. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு
ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1
|
அகத்தியர் வெண்பா
|
2
|
அகத்தியர் வைத்தியக்
கொம்மி
|
3
|
அகத்தியர் வைத்திய
ரத்னாகரம்
|
4
|
அகத்தியர் வைத்தியக்
கண்ணாடி
|
5
|
அகத்தியர் வைத்தியம் 1500
|
6
|
அகத்தியர் வைத்திய
சிந்தாமணி
|
7
|
அகத்தியர்
கர்ப்பசூத்திரம்
|
8
|
அகத்தியர் ஆயுள் வேத
பாஷ்யம்
|
9
|
அகத்தியர் வைத்தியம் 4600
|
10
|
அகத்தியர் செந்தூரம் 300
|
11
|
அகத்தியர் மணி 4000
|
12
|
அகத்தியர் வைத்திய நூல்
பெருந்திரட்டு
|
13
|
அகத்தியர் பஸ்மம் 200
|
14
|
அகத்தியர் நாடி சாஸ்திரம்
|
15
|
அகத்தியர் பக்ஷணி
|
16
|
அகத்தியர் கரிசில் பஸ்யம்
200
|
17
|
சிவசாலம்
|
18
|
சக்தி சாலம்
|
19
|
சண்முக சாலம்
|
20
|
ஆறெழுத்தந்தாதி
|
21
|
காம வியாபகம்
|
22
|
விதி நூண் மூவகை காண்டம்
|
23
|
அகத்தியர் பூசாவிதி
|
24
|
அகத்தியர் சூத்திரம் 30
|
25
|
அகத்திய ஞானம் என்னும்
அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
|
26
|
அகத்திய சம்ஹிதை என்னும்
வடமொழி வைத்திய நூலும்
|
அகத்தியர் பரிபூரணம் ஞான காவியம் வாத காவியம் 1000 வைத்திய காவியம் 1500 என்பன போன்ற பல நூல்கள் இவர் பெயரில் கிடைக்கின்றன.
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்: தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள்
இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை
வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட
குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை
அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான
தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார
கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி,
கதிர்பச்சை,
விபூதி
பச்சை போன்ற பச்சிலைகளைக்
கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1
|
தேவாதி தேவர்களைக்
காத்தவரே போற்றி!
|
2
|
சிவசக்தி திருமண தரிசனம்
கண்டவரே போற்றி!
|
3
|
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
|
4
|
விந்திய மலையின் அகந்தையை
போக்கியவரே போற்றி!
|
5
|
கும்பத்திலுதித்தக் குறு
முனியே போற்றி
|
6
|
சித்த வைத்திய சிகரமே
போற்றி!
|
7
|
சுவேதனின் சாபம்
தீர்த்தவரே போற்றி!
|
8
|
இசைஞான ஜோதியே போற்றி
|
9
|
உலோப முத்திரையின் பதியே
போற்றி!
|
10
|
காவேரி தந்த கருணையே
போற்றி!
|
11
|
அகத்தியம் தந்த அருளே
போற்றி!
|
12
|
இராமபிரானுக்கு சிவ
கீதையருளியவரே போற்றி
|
13
|
அசுராசுரர்களை அழித்தவரே
போற்றி!
|
14
|
அரும் மருந்துகளை
அறிந்தவரே போற்றி!
|
15
|
இசையால் இராவணனை வென்றவரே
போற்றி!
|
16
|
இன்னல்கள் போற்றி இன்பம்
தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
|
நிவேதனம்:
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம்
அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே
போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:
1
|
இசையிலும்
கவிதையிலும் மேன்மையுண்டாகும்
|
2
|
கல்வித்தடை
நீங்கும்.
|
3
|
புதன் பகவானால்
உண்டான தோஷம் நீங்கும்
|
4
|
முன்வினை பாவங்கள்
அகலும்.
|
5
|
பித்ருசாபம் நீங்கி
அவர்களின் ஆசி கிடைக்கும்
|
6
|
பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
|
7
|
பூர்விக
சொத்துக்கள் கிடைக்கும்
|
8
|
சகலவிதமான
நோய்களும் தீரும்.
|
9
|
குடும்பத்தில்
ஒற்றுமை உண்டாகும்.
|
வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி
நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து
விடமுடியும் என்பதே சித்தர் நெறி.உடலைப் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த
உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்படவேண்டும்.
தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்
அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க
கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று கூறாதே சூத்தரம் என்று சொல்லே. –
அகஸ்தியர் வாத சௌமியம் 260. இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக்
கொண்டது. உணவு இல்லையென்றால் உடலும் இல்லை. அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு
உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப்
பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி
ஓம் அகதீஸ்வராய விதமஹே பொதிகை சஞ்சராய
தீமஹி தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்
No comments:
Post a Comment