வெளி நாட்டில்
குடிஉரிமை பெற்று வசிக்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?
இன்றைய காலக் கட்டங்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிற்கு சென்று
வருவதும், ஒரு சிலர்கள் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. பெரும்பாலும் 12மிடம் தான் வெளிநாட்டுப் பயணங்களை தீர்மானிக்கிறது என்றாலும் ஒன்பதாம் இடம் தான்
வெளிநாட்டிலேயே செட்டிலாகும் யோகத்தைப் பற்றி தெளிவாக கூறுகின்றது.
நமக்கு தெரிந்த
வரையில் மக்கள் 5லிருந்து 10, 15 ஆண்டுகள் வரை தங்கிவிட்டு மீண்டும் தங்கள்
சொந்த நாட்டிற்கே திரும்பி வந்து விடுகின்றனர். இவர்களுக்கு இந்த யோகம்
பொருந்தாது. அவர்களுடைய ஜாதகத்தில் அதற்கு வேறுவகையான யோகங்கள் அமைந்திருக்கும்.
வெகு சிலருக்கு தான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகும் யோகம் உண்டு. அதனை இந்த ஜாதக அலங்கார ஜோதிடப் பாடல் தெளிவாக்குகிறது.
நாடி ஜோதிடப் பாடல்
கண்ட பாக்கியா திபனும்
கருது வெள்ளி யிருவோரும்
மிண்டு சன்மத் திருந்திடினும்
வேந்தன் பாக்கி யாதிபத்தில்
அண்டி உறினும் பிறதேசத்து
அரசனாய் தனவான் ஆகியுமே
பெண்ட தொன்றை மணம்புரிந்து
பிரதா பங்கள் பெருங்குணவான்
ஒன்பதாம் அதிபதியும்,
சுக்கிரனும் கூடி லக்கினத்தில் இருந்தாலும், குருவும் ஒன்பதாம் அதிபதியும் கூடி பத்தில்
இருந்தாலும், பிறருடைய நாட்டில் ராஜ மரியாதையுடன், மிகுந்த செல்வத்துடன், பெண்ணொருத்தியை மணம்புரிந்து வாழ்வான்.
தமிழர்கள் பலர் அமெரிக்கா , ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் , மலேஷியா , ஐரோப்பா , இங்கிலாந்து நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதை மேற்க்கண்ட ஜோதிட
பாடல் தெளிவு படுத்துகிறது.
No comments:
Post a Comment