எண் 1 ல் பிறந்தவர்களா நீங்கள்? அரசியலில் அரசு துறைகளில் சாதிப்பவர்களா
நீங்கள்?
எண்
கணிதம் (Numerology)
எண் கணிதம் ஒரு மிக
சிறந்த கலை ஆகும் எண் கணிதம் ஒருவர் பிறந்த தேதி மாதம் வருடம் ஆகியவற்றை வைத்து
அவருடைய குண அதியசயங்கள் , அதிர்ஷட பெயர் , அதிர்ஷ்ட தேதிகள் அதிர்ஷ்டத்தை தரும் நிறங்கள் , அகியவற்றை பற்றி
அறிந்து கொள்ளலாம்.
ஆங்கில உயிர்
எழுத்துக்களை வைத்தே நிர்ணயணம் செயகிறது. ஒருவருடைய உயிர் மற்றும் விதி எண்ணை
வைத்து ஒருவருடைய எதிர்காலம் , குணாதியசங்கள்
பற்றி அறிந்து கொள்ளலாம்.
கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களுக்கு வெவ்வேறு எண்கள்
தரப்பட்டுள்ளது.
A I J Q Y
|
1
|
BKR
|
2
|
CGLS
|
3
|
DMT
|
4
|
EHNX
|
5
|
UVW
|
6
|
0Z
|
7
|
FP
|
8
|
உதாரணமாக ஒருவருடைய பெயர்
N. RAM என்று வைத்து கொள்வோம். இவருடைய பெயரின் கூட்டு எண் கீழ்கண்டவாறு தெரிந்து கொள்ளலாம்.
N = 5, R =2,
A=1, M=4. ஆக இவருடைய பெயரின் கூட்டு எண் 5+2+1+4 =12 மற்றும் மொத்த கூட்டு எண் (1+2) 3 ஆகும்.
உதாரணமாக N RAM பிறந்த தேதி 1-1-2017 என்று வைத்து
கொள்வோம். இவருaடைய உயிர் எண் 1 (பிறந்த தேதி) மற்றும் விதி எண் ( 1+1+2017) =12=3 . ஆக RAM அவர்களின் உயிர் எண் 1 மற்றும் விதி எண் 3 என்று அறிந்து
கொள்ளலாம். அதாவது அவர்கள் சூரியன் மற்றும் குரு
ஆதிக்கத்தில் பிறந்துள்ளார் என அறிந்து கொள்ள
வேண்டும்.
சூரியனின் ஒளியும் உஷ்ணமும் இன்றி உயிர்
வாழ முடியாது என்பது உலகறிந்த உண்மை. ஆக, உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக
விளங்குவது சூரியனே.
சூரியனின்
காரகத்துவம் எவை ?
சூரியன் காரகத்துவம் - தந்தையை
குறிக்கும் கிரஹம் அரசு.
அதிகாரிகள், அரசியல்வாதிகள், பெயர், புகழ்,. கௌரவம். நம்பிக்கை. நாணயம், அதிகாரத் தன்மை. தலைமை பொருப்பு.. நாட்டின் நிதி
நிறுஅரசு.
அரசு சார்புடைய நிறுவனங்கள். அரசு. ஆண்மீகத் தலைவர். அரசியல்,.
எண் 1 ல் பிறந்தவருக்குரிய பலன்கள் –
எண் 1 சூரியன் (Sun) : க்கு உரிய கிரஹம் சூரிய பகவான் ஆவர். சூரியனே
ஆதி பகவான் ஆவார். நவகிரஹங்களுக்கு அவரே தலைமை தாங்குகிறார் கண்ணுக்கு தெரியும்
கடவுள் அவரே ஆவார். அதனால் அவரே
ப்ரத்தியேக்ஷே தெய்வம் என்று அறியப்படுகிறார்.
எண் 1 ல்
பிறந்தவருக்குரிய குணாதிசியங்கள்
இந்த எண்ணில்
பிற்தநவர்கள் பார்வைக்கும் ,பழகுவதற்கும், கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை
இவர்களிடம் அதிகம் இருக்கும்.
இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம்
மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். தங்களின்
பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.
அரசியல் அல்லது அரசு
சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு கண்டிப்பாக அமையும். ஒன்றின் எண்
ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், இவர்கள் அரசியலில் பெரும் தலைமை பதவியில் இருப்பார்கள்.
கண்டிப்பான நடத்தையும், கடின உழைப்பும் இவர்களைத் தலைமை
ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.
வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள்.
மனதில் பட்டதை பட்டென சொல்லிவிட்டு, பின்னர் பரிதாபத்திற்குரியவராகின்றனர்.
மன சாட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஏதேனும் சிறு தவறு செய்தாலும், அவர்களின்
மனசாட்சியே தண்டித்து விடும். இத்தகைய குணங்கள் கொண்ட 1-ஆம்
எண்ணின் ஆதிக்கர்களில் அநேகர் இரக்க சுபாவத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்து
விட்டு, அதனால் உபத்திரவப்படுபவர்களும் இவர் களே.
சூரியனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள்
அடிக்கடி கோபப்படுதல், நினைத்த காரியம் நிறைவேறாமல் காலதாமதம் ஆகிறதேயென்ற ஆதங்கம், படபடப்பு, மற்றவர்கள் செய்யும் சிறு தவறுக்கும்
கடிந்து கொள்ளுதல் போன்ற குணாதிசயங்களுடன் காணப்படுவர்.
தொழில்கள்
அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள்,அரசியல், பத்திரிகை நடத்துதல், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், மின்சாரம்
தொடர்புடைய அனைத்து துறை, மற்றும் அரசுத்துறையில் உயர்பதவி முதல்
கீழ்மட்டப் பதவி.
அதிர்ஷ்ட
நாட்கள்
·
1, 10, 19 ஆகிய கூட்டு தேதி
இவர்களுக்கு நன்மை செய்யும்
·
28ந் (சந்திரன் மற்றும்
சனி) தேதி சுமாரான பலன்களை தரும்
அதிர்ஷ்ட
இரத்தினம்
·
மாணிக்கம் (RUBY), அணிவது மிக்க
நலம் தரும்.
·
சூரிய காந்தக்கல் (Sun Stone) சிவப்பு ரத்தினம் (Red Opal), ஆகியவையும் அணியலாம்.
அதிர்ஷ்ட
நிறங்கள்
·
பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம். இளம் சிவப்பு, வெள்ளை
தவிர்க்க வேண்டிய நிறங்கள்
·
கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும்
வர்ணங்கள் தவிர்க்க வேண்டும்
.
அதிர்ஷ்டம் தரக்கூடிய ஹோரைகள்
சந்திரன், குரு, புதன்
அதிர்ஷ்டம் தரக்கூடிய திசைகள்
எண் 1 ல்
பிறந்த அரசியல் பிரபலங்கள்
பெயர்
|
பிறந்த தேதி
|
உயிர் எண்
|
விதி எண்
|
கிரஹ ஆதிக்கம்
|
திருமதி. இந்திராகாந்தி
|
19-11-1917
|
1
|
3
|
சூரியன் குரு
|
நடிகர் என்.டி.ராமராவ்
|
28.05.1922
|
1
|
2
|
சூரியன்
சந்திரன்
|
ஜெயப்பிரகாஷ் நாராயண்
|
10.10.1902
|
1
|
5
|
சூரியன்
புதன்
|
இளவரசி டயானா
|
01.07.1961
|
1
|
7
|
சூரியன்
கேது
|
பில்கிளிண்டன்
|
19.08.1946
|
1
|
2
|
சூரியன்
சந்திரன்
|
மைக்கேல் ஜாக்சன்
|
01.09.1959
|
1
|
7
|
சூரியன்
கேது
|
1ம் எண்ணில் பிறந்து இன்னும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கையில் பல தடைகளையும் தோல்விகளையும் சந்திப்பவரா நீங்கள்? உங்கள் உயிர் எண் மற்றும் விதி எண் ஏட்டாற்போல் உங்கள் பெயரை சிறிது மாற்றி அமைத்துக்கொண்டால் வெற்றிகள் பதவிகள் உங்களை நாடி வரும் என்பது திண்ணம்





Best astrologer in India states that you guided well through this blog. Please do it continue, so that people can get tips and astrology knowledge. thanks
ReplyDelete