Search This Blog

Tuesday, August 8, 2017

ஆண்மை குறைவினால் விவகாரத்தில் முடியும் திருமண பந்தங்கள்- Failure of Marriages due to Infertility

ஆண்மை குறைவினால் விவகாரத்தில்  முடியும் திருமண பந்தங்கள்



அவள் நல்ல அழகி . பொருளாதாரத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்று மத்திய அரசில் உயர்ந்த பதவியில் உள்ளார். கை நிறைய சம்பளம். நேர்மையான , கண்டிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். அவரை திருமணம் செய்ய நிறைய பேர் போட்டியிட்டனர். கடைசியில் அமெரிக்காவில் வேலை செய்யும்  மென்பொருள் என்ஜினீயரை திருமணம் செய்ய  அவளின் பெற்றோர் முடிவு செய்தனர்.  மணமகன்  6 அடி  உயரமும் வாட்டசாட்டமான உடல் வாகும் , அழகானவருமாகவும் இருந்தார். பாரம்பரிய குடுமபத்திலிருந்து வந்திருந்தாலும் ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று  இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.


இரு பக்க உறவினர்களும்  வியக்கும் வண்ணம் திருமணம் நடை பெற்றது.  திருமணத்தன்று முதலிரவு வைக்கப்பட்டது. மறுநாள் காலை புதுப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை . மணமுறிவுக்கு மணமகன் ஒத்து கொண்டார் என்று கூறியதை கேட்டு மணமகள் தாய் தந்தை ஐயோ என்று அலறினார்கள்.


ஆண்மை இல்லாத நிலை

ஆண்மை இல்லாதவானோடு வாழ விருப்பம் இல்லை என்று கூறினாள். பல இலட்சங்கள் செலவு செய்த திருமணம் கானல் நீராகி விட்டது. ஆண்மை இல்லாத காரணத்தால் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளன. ஜாதகத்தில் இத்தகைய நிலையை எப்படி கண்டறிவது ?
.200 பவுன் தங்கம்,விலையுயர்ந்தஒரு கார் என வரதட்சணையும்கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்து..முதலிரவில் அந்த கட்டியகணவன் ஆண்மையற்றவன் என தெரிய வந்தால் அப்பெண்ணின் மனநிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது!


பொதுவாக களத்திர ஸ்தானாதிபதி வலு  பெற்றிருக்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகர் சுக்கிரன் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகியிருக்க கூடாது. மேலும் ஆன்மிக கிரகமான கேது 7 ம் வீட்டில் தனித்து அமைய கூடாது. களத்திரகாரகரான  சுக்கிரன் நீச்சமடைந்து காலத்திரஸ்தானமான 7ம் வீட்டில் அமையக்கூடாது.


பொதுவாக ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்து காணப்படக்கூடாது. ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நீச்சமடைந்து துலா ராசியில் காணப்படுவர். அப்படி சூரியன் நீச்சமடைந்து காணப்பட்டாலும் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே சொன்ன மணமகனின் ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது..





குரு
கேது

சூரியன் சுக்கிரன் புதன்

ராசி
சந்திரன்



ராகு
லக்கினம்
ராகு
சனி


தனுசு லக்கினத்தில் பிறந்தவருக்கு ஏழாம் அதிபதியான புதன் 3ம் இடத்தில மறைந்து காணப்படுகிறது. ஏழாம் இடமான களத்திரஸ்தானமான மீதுனத்தில் ஞான காரகரனான  கேது அமைந்துள்ளதால் நல்ல திருமண வாழ்வு அமைவதற்கு தடை ஏற்படுகிறது. சூரியனுடன் களத்திர காரகர் ஆன சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து காணப்படுகிறார். இத்தக கிரஹமைப்பினால்  ஜாதகருக்கு ஆண்மை குறைவால் திருமண வாழ்வு போராட்டகளமாக  ஆகியது.


ஜாதகத்தில் வீரியம் ஸ்தானம் எது ?

ஒரு ஆணின் ஜாதகத்தில் வீரியம் என சொல்லப்படும்  மூன்றாமிடத்தில் சூரியன் இருந்தாலும்,சுகஸ்தானம்,12ம்  இடம்  போன்றவை கெட்டிருந்தாலும் ,சுக்கில கிரகம் சுக்கிரன் கெட்டிருந்தாலும் .வீரியமும் இல்லை.அல்லதுஆண்மையம்  இல்லை.. அவனுக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு .இல்லாமல் போகிறது..மேலும் ஓரின சேர்க்கையில்  அவனுக்கு விருப்பம் ஏற்படுகிறது.


ஏழாம் இடத்தில் குரு தனித்து அமையப்பெற்றாலும் திருமண வாழ்வில் நாட்டம் ஏற்படாது. 7ம் இடத்தில தனித்து அமையப்பெற்ற குரு அமையப்பெற்ற ஜாதகர்கள் பெரும்பாலும் சந்நியாசியாகவே வாழ்கிறார்கள். மிதுனம் மற்றும் கன்யா லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் இடமான தனுசு மற்றும் மீனத்தில் குரு அமையப்பெற்றால் ஆண்மை குறைவால் திருமண வாழ்வு தடை பெறுகிறது.



ஏன் திருமண பொருத்தம் முக்கியமாக பார்க்கவேண்டும்?

பெண்வீட்டார்திருமணபொருத்தம்பார்க்கும்போது,ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தை மட்டும் பார்க்காமல்,ஆண் ஜாதகத்தில் எட்டாமிடம்,மூன்றாமிடம்,12 ஆம் இடத்தையும் ஆய்வுசெய்ய வேண்டும்...ஜாதகத்தில் 3ம் இடம் வீரியத்தை குறிக்கிறது 12ம் இடம் போகத்தை குறிப்பதால் மற்றும் 8ம் இடம்  ஆண்களின் மர்மஉறுப்பையும் குறிக்கிறது. அதன் பிறகே  திருமண சம்பந்தத்தை பற்றி முடிவு செய்ய வேண்டும்.


யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது.

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதே போல் யானை சிங்கம் ஆடு குரங்கு, நாகமும் கீரியும், நாயும்  மானும், பூனை எலியும், புலிபசுவும் ஒன்றுக் கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக்கூடாது.


அப்படி மீறி சேர்த்தால் , ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ சிற்றின்ப தாகம் இல்லாததால் அப்படிப்பட்ட திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றன.

No comments:

Post a Comment