இந்த
குரு பெயர்ச்சி எந்த எந்த ராசி நேயர்களுக்கு யோகமான பலன்களை தரும் ?
எந்த எந்த ராசி நேயர்கள் பரிஹாரம் செய்ய வேண்டும்
?
மேஷம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி விரிவான
பலன்கள்
ஓம் அகஸ்தியரின் திருவடி போற்றி
குரு பெயர்ச்சி வாக்கிய
பஞ்சாங்கத்தின் படி திங்கள் Sep 02, 2017 9:30 AM இந்திய நேரப்படி
கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறது. .குரு பகவான் Oct 4, 2018
10:33 PM வரை துலாம் ராசியில் இருப்பார்.
அதிசாரம் மற்றும் வக்ரகால சஞ்சாரம் - 14 பிப்ரவரி 2018 முதல் 04 ஜூலை 2018 வரை.
மேஷம்
)மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
மேஷம் ராசிக்கு குரு பகவான் ஸ்தானமான 7ம் வீட்டில். 13 மாதங்கள்
சஞ்சரிக்க உள்ளார்.
மேஷ ராசி
|
|||
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
பொது
பலன்கள்
குரு பகவான் ஏழாம் இடத்திற்கு
வருவதால் குரு பலம் உள்ளது. நீண்ட
திருமணம் தடை பெற்றவர்கள் குரு
பகவான் அருளால் திருமணம் நடை பெரும். மேஷம் ராசி நேயர்களுக்கு இந்த வருடம் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் செய்வோர்க்கு
திரண்ட லாபம் ஏற்படும். குடும்பத்தில் சுப
நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில்
ஒற்றுமை , சந்தோசம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில்
சாதனை புரிவார்கள் . கணவன் மனைவி உறவு மிக
நன்றாக இருக்கும்.
களத்திர ஸ்தானத்திலிருந்து உங்களது ஜென்ம ராசி, தைரிய ஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் குரு பகவான் பார்ப்பார்.
இந்த ராசி நேயர்கள் இந்த குரு பெயர்ச்சியால் எதையும்.
துணிச்சலுடன். சாதிக்க முடியும். மனோதைரியம் மிகுந்து காணப்படும். செய்யும் தொழிலில்
திடீர் எதிர்பாராத லாபத்தை ஈட்டுவார்கள். பணவரவு
திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்டு செயலாற்றுவது
வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.
அஷ்டம
சனி
மேஷம் ராசிக்கு அஷ்டம சனி நடை பெறுவதால் , தசை புக்தி வலுவற்ற இந்த
ராசி நேயர்கள் கெடுதலான பலன்களை அனுபவிக்க நேரிடும். ஆகவே , தக்க சனி பிரீத்தி மேற்கொள்வது நலம்.
நான்காம்
இடத்தில உள்ள ராகுவால்
வாகனத்தை ஓட்டும்பொழுது கவனம் தேவை
சொத்து தகராறால் நீதி மன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
பத்தாம்
இடத்தில உள்ள கேதுவால்
உத்யோகத்தில் மற்றும் தொழிலில் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது
வேலையில்
உள்ளவர்களுககு
|
வேலையில்
உள்ளவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேலையில் வேகமாக செயலாற்றுவீர்கள் ,பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
|
வியாபாரம்
செய்வோர்களுக்கு
|
புதிய தொழில்
முயற்சிகள் வெற்றியை தரும் . எதிர்பார்த்ததற்கு குறைவகவே லாபத்தை
ஈட்டுவீர்.வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள்
மற்றும் வாஹனம் வாங்கும் யோகம் அமையும்;
|
கணவன்-மனைவி
உறவு
|
களத்திர ஸ்தானத்தில் குரு இருப்பதால் கணவன் -
மனைவி உறவுவில் சிறிது விரிசல் காணப்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால்
வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
|
விவசாயிகளுக்கு
|
இந்த வருடம்
விவசாயம் அமோகமாக இருக்கும் . வீட்டில் சுப நிகஸ்ச்சிகள் நடைபெறும். அரசாங்க
ஆதரவு உண்டு. வாங்கிய கடனை திருப்பி கட்டுவதற்கு ஏதுவான சூழ்நிலை
காணப்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
மேலிடத்திலிருந்து சந்தோஷமான
செய்திகள் வரும். புதிய பதவிகள் தேடி வரும். வருமானம்
பெருகும். தொண்டர்களின் ஆதரவு
மேலோங்கும். ஒரு சிலர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
சிலருக்கு
வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். புதிய
வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய
வாகனங்களை வாங்குவீர்கள். பணவரவு
எதிர்பார்த்தபடி இருக்கும்.
|
மாணவர்களுக்கு
|
கல்வியில்
சாதனை புரிவார்கள் . உயர் படிப்பு
சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் சென்று கல்வி கற்கும் யோகம் ஏற்படும்
.
|
ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய )
ரிஷபம் ராசிக்கு குரு பகவான் ரண-ருண-ரோக ஸ்தானமான ஆறாமிடத்திற்கு 6ம் வீட்டில். 13 மாதங்கள்
சஞ்சரிக்க உள்ளார்.
ரிஷப ராசி
|
|||
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
ஆறாம் இடத்தில உள்ள குரு
ரிஷப ராசி நேயர்களுக்கு ஆறாம் இடத்தில உள்ள குரு பகவான் 10ம் இடமான ஜீவன ஸ்தானம் , 12 ம் இடமான அயன சயன போக ஸ்தானம் , மற்றும் 2ம் இடமான குடும்ப
, கல்வி , நேத்ரம் , வாக்கு ஸ்தானத்தை பார்வை இடப்போகிறார்.
ரிஷப ராசி நேயர்களுக்கு தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். வீண் செலவும், அலைச்சலும்
உண்டாகலாம்.
ஒரு சில நேயர்களுக்கு எதிரிகளால் தொல்லை உண்டாகும். நீதி மன்றம் , வழக்கு போன்றவற்றால் அலைச்சல் நேரிடும். ஒரு சிலருக்கு நோய் நொடிகளால் வீண்
உபத்ரபவங்கள் ஏற்படும். திடீர் மருத்துவ சிலவு ஏற்படும். ஆரோக்கியத்தில் மிக்க
கவனம் தேவை.
மூன்றாம்
இடத்தில உள்ள ராகு
மூன்றாம் இடத்தில உள்ள ராகு ஜாதகருக்கு எதிர்பாராத செல்வதை தருவார். மனோ
தைரியம் மிகுந்து காணப்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு ஜாதகர் நல்ல
வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஏற்படும். இளைய
சகோதர சகோதிரிகளுக்கு வாழ்வில் நல்ல மேன்மை ஏற்படும்
9ல் உள்ள கேதுவால்
9ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். ஆன்மிக யாத்திரை
மேற்கொள்ளுவார்கள். சித்தர்களின் சாதுக்களின் அருளாசி கிடைக்கும்.
7ல் உள்ள கண்ட சனியால்
திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம்
கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.. எனவே எதிலும் மிகவும்
கவனத்துடன் ஈடுபடுவது
நல்லது. பெரியோர் உதவி
கிடைக்கும். . பல சோதனைகளை கடக்கநேரிடும். வருமானம் பெருகத் தொடங்கும்
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
வியாபாரத்தை
முழுக்கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வது நலம் பயக்கும். .iவாங்கிய கடன்களை இந்த கால கட்டத்தில் திருப்பி அடைப்பீர்கள். புதிய தொழில்
முயற்சிகள் வெற்றியை இதனால் புதிய தொழில் கூட்டாளிகளின் நட்பும் ஆதரவும்
கிடைக்கும். கடுமையான போட்டிசெய்தொழிலில்
நிலவும்.திறம்படச் செயல்பட வேண்டிய நேரம் இது.
|
கணவன்-மனைவி
உறவு
|
குழந்தை
இல்லாதோருக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.
குடும்பத்தில்
பெண்மணிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். .
விட்டுக்கொடுத்துச் சென்றால் ,கணவரிடம்காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம்.
|
விவசாயிகளுக்கு
|
. விவசாயிகளுக்கு
மகசூல் நன்றாக இருக்குக்ம். நல்ல
லாபத்தைப் பார்ப்பீர்கள். புதிய குத்தகைகள் மூலமும் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வீட்டில் சுப நிகஸ்ச்சிகள் நடை பெரும்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
புகழும், பெயரும்
அதிகரிக்கும். புதிய பதவிகளும் பொறுப்பும் தேடி வரும். வழக்கு
விவகாரங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாக
முடித்துக் முடித்துக்கொள்வது நலம்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
புதிய
முயற்சிகள் வெற்றியை தரும். நல்ல
வருமானம் உண்டாகும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும். ஒரு சிலருக்கு தேசிய
மற்றும் மாநில அளவில் விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
|
மாணவர்களுக்கு
|
மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலமிது.. நல்ல மதிப்பெண்களைப்
பெற்று தேர்வில் வெற்றியடைவீர்கள். . சிலர் தனக்கு விருப்பமான பாடப்பிரிவுகளில் சேர்வார்கள்.
ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.
|
பரிஹாரம்
தினமும் குரு அஷ்டோத்தரத்தை மறவாமல் சொல்லிவரவும். வியாழக்கிழமை தோறும்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி கொண்டக்கடலை மாலை சார்த்தி
வழிபட்டால் குரு பகவானின் கருணையால் தீய பலன்கள் விலகி நற்பலன்களே ஏற்படும். கனக புஷ்பராகம் அணியலாம்.
குரு பகவான் அஷ்டோத்திர சடனமாவளியை கேட்க , மேலுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல்
திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
மிதுன
ராசி
|
|||
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
5ம் இடத்தில உள்ள குரு
மிதுன ராசிக்கு குரு பகவான் 5ம் இடத்திற்கு வருவதால் , குரு பலம் நிறைந்த காலம் இது. மேலும் , குரு பகவான் பாக்யஸ்தானமான 9ம் இடத்தையும் , லாப ஸ்தானமான 11ம்
இடத்தையும் , லக்கணத்தையும் பார்ப்பதால் , நல்ல யோகமான பலன்கள் மிதுன ராசி நேயர்களுக்கு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.
இரண்டாம்
இடத்தில உள்ள ராகு
ஜாதகருக்கு முன் கோபம் அதிகம் ஏற்படும். எளிதாக உணர்ச்சி வயப்படுவார்கள்.கோபத்தை கட்டுப்படுத்த தவிறினால் வீண் பிரச்சனைகளில்
மாட்டிக் கொள்ள நேரிடும். பணவரவு தடை படும். உயர்ந்த
நிலையில் உள்ளவர்கள் வீணாக கீழ்நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள ஆர்வம் தடை ஏற்படும்.
8ல் உள்ள கேதுவால்
எட்டாம் இடத்தில் உள்ள
கேது மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் மூலம்
பணவரவை தடைகளை ஏற்படுத்துவார். ஒரு சில
ஜாதகர்கள் வெளி நாடு பயணம் மேற்கொள்ள நேரிடும்.
ஆறாம்
இடத்தில உள்ள சனி பகவானால்
எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் ஏற்படும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை உண்டு.
செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உற்றார் உறவினர்களின் சுமுகமான உறவு வைத்துஇருப்பர்.. சுபகாரியங்கள் நடத்துவதில்
இருந்த தடைகள் நீங்கும்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
ஒரு சிலருக்கு
விருப்பப்படாத இடமாற்றம் ஏற்படலாம்..
மேலதிகாரிகளால் ஆதரவற்ற நிலை ஏற்படும். . ஆயினும் அவற்றை மிக சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைவந்து
சேரும்.. ஒரு சிலருக்கு பதவி உயர்வு வந்து சேரும்.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் காணப்படும்.. புதிய சந்தைகளில்
வியாபாரத்தை விரிவாக்குவீர்கள்.. புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம்
உண்டாகும்.. வியாபார கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை பயக்கும்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள்
மதிப்பு மரியாதை கூடும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை இருப்பதாய்
உணர்வார்கள்.. பிரிந்து இருந்த
உறவினர்கள் மறுபடியும் வந்து தானாகவே கூடுவார்கள்.. உடன்பிறந்தோர் வகையில்
கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி காணப்படும்..
|
விவசாயிகளுக்கு
|
நல்ல
விளைச்சலைக் விவசாயிகள் இந்த காலகட்டத்தில் காண்பார்கள். நல்ல வருமானம் கால்நடைகளாலும்
கிடைக்கும். ஒரு சிலர் புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். உங்கள் கீழ்
பணிபுரியும் விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்து செல்வது நன்மை பயக்கும்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
சமூகத்தில்
அந்தஸ்தான பதவிகள் கிடைத்துச் செயலாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல ஏற்றமான நேரமிது. உங்களின் கடின உழைப்புக்கு எந்த நாளும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய
அங்கீகாரம் கிடைத்து அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
பெயரும் புகழும் கலைத்துறையினருக்கு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் ஒரு சிலரை
நாடி வரும். . உங்கள் திறமை வெளிஉலகுக்கு தெரிய வரும்.. வருமானமும் நல்ல
முறையில் இருக்கும்.
அமோகமாக
ஆதரவு ரசிகர்களிடம் இருந்து
கிடைக்கும்.. ஒரு சிலர் இடையிடையே சிறு
சிறு கிசு கிசுப்பில் மாட்டி கொள்ள
நேரிடும் .
|
மாணவர்களுக்கு
|
உற்சாகமாக
விளையாட்டுகளில் மாணவ செல்வங்கள்
ஈடுபடுவார்கள். இதனால் உடலாரோக்கியம் மிகுந்து காணப்படும்..
படிப்பில்நல்ல முன்னேற்றமான நிலைமை காணப்படும்.. நண்பர்களிடம் விட்டுக்
கொடுத்துப் போவது நன்மை பயக்கும். பெற்றோர்களின் அணைப்பும் ஆதரவும் மிகுந்து
காணப்படும்.
|
கடகம்
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசி
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
நான்காம் இடத்தில உள்ள குரு
கடக ராசிக்கு குரு பகவான் 4ம் இடத்திற்கு வருவதால் , குரு பலம் அற்ற காலம் இது. மேலும் , குரு பகவான் தொழில் ஸ்தானமான 10ம் இடத்தையும் , அயன , சயன மற்றும் மோட்ச ஸ்தானமான
12ம் இடத்தையும் , ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தையும் பார்ப்பதால் ,
சுமாரான பலன்களே கடக ராசி
நேயர்களுக்கு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.
ஜென்ம ராசியில்
உள்ள ராகு
கடக ராசியில் ராகு வீற்றிருப்பதால் , ஜாதகருக்கு மேன்மையான பலன்கள் ஏற்படும்.
ஜாதகர் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம்
நன்றாக இருக்கும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் தென்படும். ஒரு சிலருக்கு
வீண் மனக்கவலைகள் ஏற்படும்.
7ல் உள்ள கேதுவால்
களத்திர ஸ்தானமான 7ம் இடத்திற்கு கேது வருவதால் கணவன் மனைவி இடையே
கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு வியாபார
கூட்டாளிகள் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
5ம் இடத்தில
உள்ள சனி பகவானால்
5ம் இடத்தில உள்ள
சனி பகவான் நன்மைகளை செய்வார்.வெளிநாட்டு வியபாரம், வெளிநாட்டு பயணம் ஆகியவை ஒரு சிலருக்கு ஏற்படும்., பிள்ளைகளுக்கு திருமணம் செயும் நீரம் இது.. உற்றார் , உறவினர்கள் வருகை அதிகரிக்கும் மற்றும் அவர்களுடன் உள்ள
உறவு மேம்படும்.. ஒரு சில நேயர்கள் புதிய வாகனம், வீடு-மனை
வாங்கும் நீரமித்து.. மாணவ செல்வங்களுக்கு
உயர்கல்வி வாய்ப்புகள் வரும். நீண்ட காலமாக தடைப்பட்ட தொழில் நன்றாக செயல்
பட துவங்கும்.. நோய்நொடி அகலும்..
வேலையில்
உள்ளவர்களுககு
|
பணியில் உள்ள
நேயர்களுக்கு அலுவலகப் பணிகளில் சற்று மந்தமான நிலை காணப்படும். உயர்
அதிகாரிகளின் தயவால் எல்லா தடைகளும் விலகும். மேலும் அவர்களின் ஆதரவினால் பதவி
உயர்வு கிடைக்கும்.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
தொழில்
செய்வோர்க்கு கொடுக்கல் வாங்கல்கள்
சிரமமாகவே இருக்கும். மாவு விற்கப்
போனால் காற்று அடிக்கும் என்கிற நிலைமை
தொடரும், . உங்களின்
தேவைக்கேற்ப தொழில் வருமானம்
பெருகும்..நிதி நிலைமை கட்டுக்குள் இருக்கும். அதனால் , கடன்
வாங்குமளவுக்குச் நிலைமை சீர்யழியாது. வியாபார கூட்டாளிகளை நம்பி எதையும்
பெரிதாக முதலீடு செய்வது தவிர்ப்பது நல்லது.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன் மனைவி உறவு சற்று விரிசல் விட்டு
காணப்படும் . சுபநிகழ்ச்சிகள் சற்று காமத்துடன் நடக்கும் சண்டை சச்சரவில்
கணவருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நன்மை தரும்.. குழந்தைகளையும்
ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.வீட்டிற்கு தேவைப்படும் தேவையான நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் ஒரு
சிலருக்கு உண்டாகும்.
|
விவசாயிகளுக்கு
|
விவசாயிகள்
மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய
நேரமிது .. சக விவசாயிகளிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு இருக்காது..
மமனோதைரியம் மிகுந்து காணப்படும். .புதிதாக கால்நடைகல் வாங்குவதை
ஒத்திப்போடவும்.. புதிய குத்தகைகளை தவிர்ப்பது நல்லது.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
உட்கட்சிப்
பூசலில் அரசியல்வாதிகள்மா ட்டிக் கொண்டு அவதி உற நேரிடும்.. நீங்கள் ஒளிவு மறைவு இன்றி
பேசுவதால் பலரின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். உங்களின் வெளிப்படையான பேச்சுக்கு மதிப்பு கிடைக்காது. அதனால் முக்கிய
பிரச்னைகளில் மௌனம் காப்பது நன்மை தரும்.. தொண்டர்களின் ஆதரவால் உங்களின்
அரசியல் செல்வாக்கு உயரும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
கலைத்துறையினருக்கு அதீத முயற்சிக்குப்பிறகு . புதிய ஒப்பந்தங்கள்
கிடைக்கும். எதிர்பார்த்த புகழும்
பாராட்டும் கிடைக்காதால் நீங்கள் மாணவருத்தத்திற்கு ஆளாக நேரிடும்.. உங்கள்
செயல்களை நன்கு ஆலோசித்து பின்பு
செயல் படுத்தவும்.
|
மாணவர்களுக்கு
|
இந்த ராசி
மாணவர்கள் கூட நட்பை ஒதுக்க வேண்டும்.
படிப்பில் தீவிர கவனம் செலுத்த
வேண்டும்.ஒரு சிலருக்கு கஷ்ட பட்டு
படித்தாலும் கிடைக்க வேண்டிய
மதிப்பெண்கள் வராத நிலை ஏற்படும்..
தக்க நேரத்தில் ஆசிரியர்கள் உதவி
உங்களுக்கு கிடைக்கும்.. விளையாட்டிலும் ஈடுபட்டு பல வெற்றிகளை குவிப்பீர்கள்.
|
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம்
முடிய)
ராகு
|
|||
கேது
|
சிம்ம ராசி
|
||
சனி
|
குரு
|
மூன்றாம்
இடத்தில் உள்ள குருவால்
மூன்றாம் இடத்தில் உள்ள குரு சப்தம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம்
ஆகியவற்றைப் பார்ப்பார். சிம்ம ராசி நேயர்களுக்கு எடுத்த காரியங்களில்
வெற்றி உண்டாகும்.. மனோதைரியம்
அதிகரிக்கும் புதிய . வீடு,
வாகனங்கள் வாங்கும் நிலை
ஏற்படும்.. தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை நீங்கும். அரசாங்கம் ஒப்பந்தங்கள் கிடைக்கும்..
புதிய வியாபார முயற்சிகளில் இருந்த
சிக்கல்கள் விலகும்.. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் தங்கு தடை இன்றி
பெருகும்.. தொழிலில் வர வேண்டிய பாக்கிகலய்
வெற்றிகரமாக வசூலிப்பீர்கள்.
12ம் இடத்தில உள்ள ராகுவால்
அயன சயன மோட்ச ஸ்தானமான 12ம் இடத்திற்கு
ராகு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மனநிம்மதி இல்லாத நிலை ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். ஒரு சில ஜாதகர்கள்
சிறை வாசம் அனுபவிக்க நேரிடும். ஒரு சில ஜாதகருக்கு
பணவிரயம் நிறைய ஏற்படும். தொழில்
நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
6ம் இடத்தில உள்ள கேதுவால்
ருண ரோக ஸ்தானமான 6ம் இடத்திற்கு
கேது பகவான் வருவதால் சிலர் நிறைய கடன் வாங்க நேரிடும் . வரவுக்கு மீறிய செலுவுகள்
ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆரோகியதில் மிக்க கவனம் தேவை.
4ம் (அர்த்தாஷ்டம ) இடத்தில உள்ள சனி
பகவானால்
பொதுவாக 4-ம் இடத்தில் சனி அமர்ந்தால், “அர்தாஷ்டம சனி” என்பார்கள். அர்தாஷ்டம சனி நன்மை செய்யாது என்றும்
கூறுவார்கள். அது சிம்ம ராசியை பொறுத்தவரையில் கெடு பலன்களை தரமாட்டார்.
ஏனென்றால் , 5- 8-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக
நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம சனியாக இருந்தாலும், சுப பலன்களைதான் தருவார். . பஞ்சமாதிபதி நட்சித்திர சாரம் வாங்கி வருவதால், கஷ்டங்கள் சூரியனை கண்ட பனி போல்
விலகி விடும். தொட்டது துலங்கும்.
பகைவர்கள் ஒடுங்கி போவார்கள்.. கடன், நொய், நொடி நெருங்காது.. பழைய வீடு, திருத்தும் செய்ய நேரிடும். இது நாள் வரை இருந்த . கல்விதடை நீங்கும்.
உத்தியோகம், சொந்ததொழில் மேன்மை உண்டாகும்.. பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. , தேவையற்ற கடன் வாங்க வேண்டாம்.
எல்லோரிடத்தில் நட்பு பாராட்டுவது நல்லது.. ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்கவும்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
பணியில்
உள்ளவர்கள் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறும்.. உயர் திகாரிகள்
உங்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை நன்கு
தருவார்கள்.. ஒரு சிலருக்கு பதவி உயர்வுடன்
ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் ,பெற , கொடுத்த பணிகளைக் குறித்த காலத்தில் செய்து முடித்து
வெற்றி காணிப்பீர்கள். .
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
வியாபாரிகள் கொடுத்த
கடன்களை வெற்றிகரமாக வசூலிப்பார்கள்..
வியாபார கூட்டாளிகள் நீங்கள் சொல்வதை கேட்டு ஒத்துழைப்பை தருவார்கள்..
புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபட்டால்
வெற்றி நிச்சயம்
|
கணவன்-மனைவி
உறவு
|
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை
பாக்கியமும் உண்டாகும். விமரிசித்து வந்த கணவன் அல்லது மனைவி மனம்
மாறி கனிவுடன் பழகத் துவங்குவார்கள். குடும்பப் பிரச்னைகளை ஜாக்ரதையாக கையாள்வது நன்மை தரும்,. அவசியமற்ற விவாதங்களையும்வாக்கு வாதங்களையும், தவிர்ப்பது நன்மை தரும்.
|
விவசாயிகளுக்கு
|
அமோக
விளைச்லால் ஒரு சில விவசாயிகளுக்கு ஏற்படும்.. அமோக விளைச்லால்
அதீத வருமானம் உண்டாகும். புதிய
நிலங்களை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.. நீர்ப்பாசன வசதிகளைப் முதலீடு
. அதன் மூலம் அதிக மகசூலைக் காண முயற்சிக்கலாம். கால்நடைகளின் மூலம் அதிக லாபம்
வரும் என்பதால் புதிய கால்நடைகளை வாங்கிப் பயனடையலாம்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
அரசியல்வாதிகளுக்கு
நல்ல நேரம் இது. மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.. மேற்கொண்ட
காரியங்கள் தாமதம், அலைச்சலின்றி முடிவடையும். எதிரிகள் உங்கள்வசப்படுவார்கள்..தொண்டர்கள்
கூட்டம் உங்களை தேடி வரும்.. தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அன்பை பெறுவீர்கள்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
கலைத்துறையில் உள்ளவர்கள் பெரும் புகழும் சம்பாதிக்கும் நேரமிது.. ஒரு சில
கலைஞர்கள் படபிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வரும்
அதிர்ஷ்டம் ஏற்படும்..புதிய ஒப்பந்தங்கலில் கையெழுத்து இடுவீர்கள்.. ரசிகர்கள்
கூட்டம் எப்போதும் உங்கள் பார்வைக்காக அலைமோதும்.
|
மாணவர்களுக்கு
|
மாணவசெல்வங்கள் கல்வியில்
வெற்றி அடைவீர்கள். உயர்ந்த
மதிப்பெண்களை பெறுவீர்கள். . ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள்.. தாங்கள் விரும்பிய
பாடப்பிரிவுகளில் சேர்ந்து வெற்றி பெறுவார்கள்.
|
கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல்
அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
கன்னி
ராசி
|
இரண்டாம்
இடத்தில் உள்ள குருவால்
குரு பகவான் தனஸ்தானத்தில் இருந்து உங்களது ரண-ருண-ரோக ஸ்தானம், அஷ்டம ஆயுள் ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது
நன்மை தரும். புதிய தொழில்
கூட்டாளிகள் கிடைப்பார்கள்.ஒரு சிலரது வாழ்க்கைத்தரம்
உயரும்.. ரொம்ப நாட்களாக நடக்காத காரியம் நன்கு முடியும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.. புதிய ஆர்டர்கள்வந்து
சேரும். வியாபாரம் நல்ல முன்னேற்ற பாதையில் போகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள்
மீது வீண்பழி வராமல் பார்த்துக்
கொள்ளவும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் அதிகரித்து நல்ல . முன்னேற்றம் உண்டாகும்.
அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.
11ம் இடத்தில உள்ள ராகுவால்
ராகு 11ம் இடத்திற்கு
வருவதால் , பண வரவு ஏற்படும்
.செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . உத்தியோக உயர்வு ஏற்படும். புதிய
தொழில் முயற்சிகள் வெற்றி காணும்.
5ம் இடத்தில உள்ள கேதுவால்
பூர்வபுன்னிய ஸ்தானத்திற்கு கேது வருவதால் குழந்தைகள் பற்றி மனக்கவலைகள்
ஏற்படும் . யோகமான பல ஒரு சிலர் அரசாங்க நடவடிக்கையால் பாதிக்க பட நேரிடும் . நல்ல
பலன்கள் ஏற்பட தடை ஏற்படும்.
3ம் இடத்தில உள்ள சனி பகவானால்
கன்னி ராசி நேயர்களுக்கு ஏழரை சனி” விடுதலை ஆகிறது. மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.. திருமண தடை
விலகும்.. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு
குழந்தை பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். நலிந்த தொழில் பெருக
மீண்டும் துளிர்க்கும்.. குடும்பதில் உண்டான சண்டை சச்சரவு விலகும்.
இதுநாள் வரை தடைபட்ட கட்டுமான பணிகள் இனி ஆரம்பிக்கும்.. பூர்வீக சொத்தில் வழக்கு பிரச்னைஏற்படலாம்..புதிய
சூத்து சொத்து வாங்கும் பொழுது . கவனமாக
செயல் பட வேண்டும். பிறருக்கு ஜாமீன்
தருவதாக இருந்தால் தவிர்க்கவும்.
பெரியவர்களிடம் பணிந்து போவது நன்மை
தரும். பெரியவர்களிடம் வீண் சர்ச்சை செய்ய வேண்டாம். மனைவியால்
திடீர் யோகம் உண்டு. தடைப்பட்ட கல்வி மீண்டும்
தொடர வாய்ப்பு ஏற்படும்.. ஏற்றுமதி
வியபாரத்தில் அதிக தன லாபம் கிட்டும்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
பணவரவு சரளமாக
இருக்கும். அதனால் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்மிகுந்த
கவனத்துடன்அலுவலகப் பணிகளில் ஈடுபட வேண்டும்.. மேலதிகாரிகளின் அரவணைப்பு உண்டு என்றாலும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு நேயர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.. சக
ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
புதிய
முதலீடுகளைத். வியாபாரிகள்
தவிர்க்கவும். வியாபாரத்தை மிகவும்
கவனத்துடன் செயல்பட்டு
உழக்கைவேண்டும் .. நண்பர்களையோ, கூட்டாளிகளையோ நம்பி எந்த புது முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம்.. வியாபார
தளத்தை சீரமைக்கும் எண்ணத்தை தள்ளி
போடவும்.. புதிய பணியாளர்களை அமர்த்தி, பல புதிய
சந்தைகளுக்குக் உங்கள் பொருள்களை கொண்டு சென்று விற்பனையை அதிகரிக்க செயும்
முயற்சி வெற்றி தரும்.
|
கணவன்-மனைவி
உறவு
|
குழந்தைகளுக்கு நன்மைகள் உண்டாகி அதனால்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கணவன் மனைவி உறவுநிலை சுமாராகவே இருக்கும். . நெருங்கிய உறவினர்கள் ஆதரவு
உண்டு. வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
|
விவசாயிகளுக்கு
|
வீண்விரயங்களைத்
தவிர்க்கவும்.விவசாயிகளுக்கு மகசூல் நல்ல லாபத்தை தரும்.. மேலும் உங்கள் கீழ்
வேலை சேயும் விவசாயப் பணியாளர்கலய்
அரவணைத்து செல்லவும். வீணாக
அக்கம் பக்கத்து விவசாயிகளிடம்
சண்டை சச்சரவுகளில் இறங்க
வேண்டாம். கால்நடைகளால் நிரம்ப லாபம்
கிடைக்கும். புதிய வயல்களில்
வாங்கிமுதலீடு செய்து லாபத்தை பெருக்குவீர்கள்.. பழுத்த விவசாய
அனுபவஸ்தர்களின் ஆலோசனையைப் பெற்று நடக்கவும்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
அரசியல்
வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.. உட்கட்சிப் பூசலில் தேவையின்றி
இறங்க வேண்டாம்.. கட்சி தொண்டர்களின் குறைகளை அன்புடன் கேட்டு . அவர்களின்
அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
கலைத்துறையினருக்கு திடீரென பாராட்டுகள் மற்றும் புகழும் தேடி வரும்.
உங்கள் தொழிலில் மிகவும் கவனமாக இருக்கவும். ஒரு சில கலைஞர்களுக்கு திடீரென்று புதிய பட
வாய்ப்பு கிடைக்கும். . ரசிகர்களின் ஆதரவு என்றஎன்றும் இருந்து வரும்.
|
மாணவர்களுக்கு
|
மாணவர்கள்
தங்குளுடைய கடின உழைப்பால் நல்ல
மதிப்பெண்களை பெறுவார்கள்.. கல்வியிலிருந்த தேக்க நிலை நீங்கி கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். ஒரு சில
மாணவர்கள் விளையாட்டுகளில்
பாராட்டையும் ,விருதுகளையும் அள்ளுவார்கள் . எனினும், நம்பிக்கையும் விடா முயற்சியும்
தொடர்ந்து வெற்றிபெற உங்களுக்கு தேவை.
|
துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
துலா ராசி
குரு
|
ஜென்ம
ராசியில் உள்ள குருவால்
குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம குருவாக மாறுகிறார். ராசியிலிருந்து
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம், சப்தம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம்
ஆகியவற்றைப் பார்ப்பார். துலா ராசி நேயர்களுக்கு பணவரத்து பெருகும்.
எதிர்பார்த்தபடி நிதிஆதாரம் உயரும்.
கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.இல்லத்தில்
சுப நிகஸ்ச்சிகள் நடைபெறும். நடக்கும். வெளியூர்ப் பயணங்கள் ஆதாயத்தை தரும். ஒரு
சில நேயர்கள் . உடல் உபாதைகளால் பாதிக்க படுவர்.. தொழிலில் கொடுக்கல், வாங்கலில் ,மிக்க கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சரளமான போக்கு
காணப்படும். ஆகவே, பணவரத்துக்குக் குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் விட்டு கொடுத்து போவது நன்மை
தரும்.. பணியில் உள்ளவர்கள் தங்கள் பணியில் மிகவும் கவனமாகப் ஈடுபடுவது நல்லது. ஒரு சில நேயர்கள் வீண்
அலைச்சலும் கடின உழைப்பும் கட்ட வேண்டியது இருக்கும். சாதூரியமான பேச்சால்
முன்னேற்றம் காண்பார்கள்.
10ம் இடத்தில உள்ள ராகுவால்
ஜீவன ஸ்தானத்திற்கு ராகு வருவதால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மூலம்
திரண்ட செல்வம் சேரும்.. நீண்ட காலமாக தள்ளிப்போன பதவிஉயர்வு கிடைக்கும். புதிய
தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகள்
உண்டாகும்.
4ம் இடத்தில உள்ள கேதுவால்
கேது 4ம் இடத்திற்கு
வருவதால் ஒரு சிலர் புதிய சொத்துக்கள் , மனை வாங்கும் யோகம் உண்டாகும் . ஆன்மீக பயணத்தால் கடவுளின் அருளாசியை
பெறுவார்கள். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை..தீயோர் சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும்.
பணம் கையில் புழங்கும்.,
2ம் இடத்தில உள்ள சனி பகவானால்
துலா ராசி நேயர்களே , ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் கவலை
வேண்டாம்..சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார்.
பூர்வீக சொத்தில் வழக்கு இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது, பேச்சில் கவனம் தேவை. கல்வி ஏற்பட்ட தடங்கல் நீங்கும். மேலதிகாரிகளின் அன்பும் அரவணைப்பும்
கிடைக்கும். அரசாங்க மற்றும் வங்கி உதவி
கிடைக்கும். பெற்றோர்கள் தக்க சமயத்தில்
உதுவுவார்கள்.. ஆரோக்கியத்தில் நல்ல
முன்னேற்றம் தெரியும். பணியில்
வேலை சுமை அதிகரிக்கும். குடும்ப
செலவுகளும் அதிகரிக்கும்.. வாஹனம் ஓட்டும் பொழுது
கவனம் தேவை. சிலவை கட்டுப்படுத்த வேண்டும் கவனமாக செயல்பட்டால், சனி பகவான் முன்னேற்றத்தை தருவார் .
வேலையில்
உள்ளவர்களுககு
|
பணியில் உள்ளவர்கள்
அதிக வேலை வேலை பளு . காரணமாக அவதி உருவார்கள். மேலதிகாரிகளையும் நீக்கு போக்காக நடந்து கொள்வது நன்மை தரும் . சக ஊழியர்களையும் அரவணைத்து செல்வதே நன்மையான பலன்களை தரும்..
கடுமையான உழைப்பால் மேலதிகாரிகளின்
ஆதரவை பெறமுடியும். சக ஊழியர்கள்உதவியால் வேலை பளு குறையும்.. பனி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளும்போது மிகவும் ஜாக்கிரதை
ஆக இருப்பது நன்மை.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
வியாபாரம்
மிகவும் நன்றாக இருக்கும்.இந்த ராசி நேயர்கள்
தாங்கள் எண்ணிய லாபத்தை
அடைவார்கள். உங்களின் பலம் ஓங்கி . எதிரிகளின் பலம் அடிபட்டு போகும்..
நேரம் நன்றாக இருப்பதால் , புதிய முயற்சியை தைரியமாக மேற்கொள்ளலாம். மனோ நிம்மதியும் தன வரவும் மிகுந்து காணப்படும்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். நீண்ட
நாள் தள்ளி போன சுபகாரியங்கள் இந்த கால கட்டத்தில்
நடக்கும். திருமண தடையை
சந்தித்தவர்களுக்கு இந்த கால கட்டத்தில்
திருமணம் பந்தம் ஏற்படும். . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த
காலகட்டத்தில் கர்ப்பம் தரிக்கும்.
|
விவசாயிகளுக்கு
|
விவசாயிகளுக்கு
சாகுபடி சரிவர அமையாது. கடன்
தொல்லை அதிகரித்து மன
நிம்மதி இழக்க \நேரிடும்
இருப்பினும் இந்த ராசிநேயர்களுக்கு
நீண்ட நாள் வர வேண்டிய பணம் கைவந்து சேரும். தேவைக்கேற்ப உதவி
நண்பர்களும் கூட்டாளிகளும் செய்வார்கள்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
புதிய
பொறுப்புகள் அரசியல்வாதிகளுக்கு வந்து
சேரும்.. கட்சிமேலிடத்தால் புதிய பதவிகள் தந்து கௌவரவிக்கப்படுவீர்.. அனைத்து
துறைகளிலும் வெற்றியை அடைவார்கள்..
தொண்டர்களின் பேர் ஆதரவுடன் அரசியலில்
வெற்றியை சூடுவீர்கள்.. உங்கள் பேச்சுத்
திறனால் எதிர்கட்சியினரை திக்குமுக்காட செய்வீர்கள் .
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
கலைத்துறை
நேயர்கள் புதிய ஒப்பந்தங்கள்அதிக முயற்சிகளுக்குப்பிறகே கிடைக்கும்.. எதிர்பார்த்த புகழ் மற்றும் பாராட்டுகள் கிடைக்கக்காமல் போகும். . ஒரு
சில நேயர்கள் வெளி நாடு சென்று படப்பிடிப்பில் பங்குகொள்வார்.
|
மாணவர்களுக்கு
|
மாணவர்கள்
விளையாட்டை தவிர்த்து படிப்பில் மிக்க கவனம் செலுத்த வேண்டும்..
ஆசிரியர்களின் ஆதரவு ஏனோ தானோ என்று இருக்கும். . விளையாட்டில் அதிக ஈடுபாட்டை தவிர்க்கவும்.. நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. .
|
பரிஹாரம்
தினமும் குரு அஷ்டோத்தரத்தை மறவாமல் சொல்லிவரவும். வியாழக்கிழமை தோறும்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி கொண்டக்கடலை மாலை சார்த்தி
வழிபட்டால் குரு பகவானின் கருணையால் தீய பலன்கள் விலகி நற்பலன்களே ஏற்படும். கனக புஷ்பராகம் அணியலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
ராகு
|
|||
கேது
|
|||
விருச்சிக ராசி
சனி
|
குரு
|
12ம் இடத்தில
உள்ள குரு பகவான்
விருச்சிக ராசி
நேயர்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அயன சயன போக ஸ்தானமான விரய ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து உங்களது
சுகஸ்தானம், ரண- ருண- ரோக ஸ்தானம், அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றை பார்ப்பார்.
கடன் பிரச்னை தீரும். வரவுகள் சரளமாக இருப்பதால் நீங்கள் செலவு செய்ய அஞ்ச மாட்டிர்கள். ஆடை, ஆபரணச் . செலவுகள் அதிகம்
காணப்படும்.. அலைச்சல், வீண்செலவுகள் மற்றும் காரியத்தடை, ஏற்படலாம். கெட்ட கனவுகள் வந்து மனக்குழப்பத்தை
ஏற்படுத்தும்..முன் கோபத்தால் பலரின் பலரின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும்., பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக
இருப்பது அவசியம்..தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றமான நிலை
காணப்படும். செய் தொழிலில் போட்டிகள் குறையும். தொழில் சம்பந்தமான சச்சரவுகள்
நீங்கும்.. எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவது சந்தோஷத்தை தரும்.
9ம் இடத்தில உள்ள ராகுவால்
பாக்கியஸ்தானத்திற்கு ராகு பகவான் வருவதால் , எதிர்பாராத பண வரவுகள் இந்த ராசிகாரர்களுக்கு உண்டு. அரசாங்க
தொடர்பால் அல்லது ஒப்பந்தங்களால் ஆதாயம் ஒரு சில நேயர்களுக்கு உண்டு. நண்பர்களால்
ஆதாயம் உண்டு.
3ம் இடத்தில உள்ள கேதுவால்
கேது பகவான் 3ம் இடத்திற்கு வருவதால் , எதிர்பாராத தனவரவு ஒரு சில நேயர்களுக்கு ஏற்படும். இளைய சகோதிரர்
மற்றும் சகோதிரிகளால் ஆதாயம் உண்டு. வலுவான தசை புக்தி நடைபெறாத ஒரு சில நேயர்கள் கவலைகளும், கஷ்டங்களும் இருக்கும்.
பணத்தைக் கெட்டதற்காகவே
செலவு செய்ய நேரிடும்.
.ஜென்ம ராசியில் உள்ள சனி பகவானால்
.தன மற்றும் பூர்வ
புண்ய ஸ்தானக்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி பகவான்
அமர்கிறார்.இதனால் , இல்லத்தில் குழந்தைபேறு
மற்றும் திருமணம், என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சில
நேயர்களுக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.
ஒரு சிலர் உத்தியோகத்தை ராஜினாமா
செய்துவிட்டு , சொந்த தொழில்
ஆரம்பிப்பார்கள். எதிர்பாராத பணவரவு
உண்டாகும். தொழில்கூட்டாளிகளால் நிறைய
ஆதாயம் வரும். ஒரு சிலருக்கு சொந்தங்களால்
நன்மை உண்டாகும். பட்டப்படிப்பு மற்றும் மேல்படிப்பு வாய்ப்பு ஒரு
சிலருக்கு கிட்டும்.. இதுவரை பட்ட கஷ்டம்
நீங்கும் .சொத்தை அடமானம் வைத்து
ஒரு சிலர் தொழில் துவங்குவதற்கு நேரும். , தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். வரவுக்கு மேல் செலவுகள்
இருக்கும்.. மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். நோய்நொடி நீங்கும்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
விவேகமாக நடந்துகொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு
உங்களுக்கு உண்டு.கடின உழைப்பால் பெயர்,
புகழ் ஆகியவற்றை
பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல்
இருந்த கடன்கள் இந்த காலகட்டத்தில் வசூலாகூம்.. எந்த காரியத்தையும் திட்டமிட்டு
செய்தால் வெற்றி நிச்சயம்.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
இந்த
ஆண்டு முழுவதும் கூடுதலான நற்பலன்கள்
கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் எந்த பிரச்சனைகள் இல்லாமல் நடைபெறும்..
நண்பர்களால் தக்க நேரத்தில் உதவி கிடைக்கும்.வங்கிகளிடமிருந்து தக்க நேரத்தில்
கடன் வசதி கிடைக்கும்.வியாபாரத்தை விரிவாக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். .விட்டுக் கொடுத்து
அனைவரையும் அனுசரித்துச்சென்றால் நல்ல மேன்மை உண்டாகும் . உறவினர்கள் தக்க
சமயத்தில் உதவி செய்வார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.
|
விவசாயிகளுக்கு
|
இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசன
வசதிக்காக செலவு செய்ய நேரிடும் .
மாற்றுப்பயிர் பயிரிட்டு விவசாய வருமானத்தை பெருகுவீர்.. கால்நடைகளால் பால் வியாபாரத்தை விரிவாக்குவீர்கள்.விவசாய கடன் தள்ளுபடியால்
மனநிம்மதி உண்டு.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
சமூகத்தில் நன் மதிப்பு ஏற்படும்.. எந்த
செயலையும் நன்றாகத் திட்டமிட்டே
செய்தால் வெற்றி உண்டு.. மிக்க
கவனத்துடன் செயல் வேண்டிய நேரம்
இது.. தொண்டர்களை அரவணைத்துச் சென்றால் உங்கள் செல்வாக்கு யுயரும் . புதிய
பொறுப்புகளை இந்த காலகட்டத்தில் கட்சி
உங்களுக்கு தரும்,. உங்கள் செயல்பாட்டால் நல்ல பெயர் உங்களை நாடி வரும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
புதிய ஒப்பந்தங்களைப் பெற கடினமாக உழைக்க
வேண்டும்.. கலைஞர்கள் பெயர் புகழ் ஓங்கும்.. கடினமாக உழைத்து விருதுகளையும் பாராட்டையும் பெறுவர்.
.சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
|
மாணவர்களுக்கு
|
மாணவர்கள் கடின
உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
புதிய மொழிகளைக் கற்றுக் கொண்டு அதனால் ஆதாயம் பெறுவீர்கள்.. நண்பர்களிடம்
நீக்கு போக்காக நடந்து கொண்டு அவர்களின்
அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
|
பரிஹாரம்
தினமும் குரு அஷ்டோத்தரத்தை மறவாமல் சொல்லிவரவும். வியாழக்கிழமை தோறும்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி கொண்டக்கடலை மாலை சார்த்தி
வழிபட்டால் குரு பகவானின் கருணையால் தீய பலன்கள் விலகி நற்பலன்களே ஏற்படும். கனக புஷ்பராகம் அணியலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல்
பாதம் முடிய)
ராகு
|
|||
கேது
|
|||
தனுசு
ராசி
|
சனி
|
குரு
|
11ம்
இடத்தில உள்ள குரு பகவான்
இதுவரை உங்களது ஜீவன
ஸ்தானத்தில் இருந்த ராசிநாதனான குருபகவான் இனி உங்களது 11ம் வீட்டில் நட்பு வீட்டில் சஞ்சாரம்
செய்யப்போகிறார். இங்கிருந்து உங்களது
தைரிய வீர்ய ஸ்தானம், பஞ்சம பூர்வ
புண்ணிய ஸ்தானம், சப்தம ஸ்தானம்
ஆகியவற்றைப் பார்ப்பார்.
வியாபார
வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். எதிரிகள் வலுவுஇழந்து காணப்படுவார்கள்.; பிறரால் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் ஒரு
வரும்.பணவரத்து தாராளமாக
இருக்கும்..அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப்பெரும்.. பழைய
பாக்கிகள் வசூலாகும்நிறைய தான தர்மங்கள் செய்வீர்கள்.. நண்பர்களிடமிருந்து
வேண்டிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்க
பெறுவீர்கள்.. மதி மயக்கம்
உண்டாகும். மற்றவர்களின் விமர்சனத்திற்கு
ஆளாகவேண்டிவரும். . புதியவர்களின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண்செலவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்., ஒரு சிலருக்கு மருத்துவ மனை சிலவுகள் ஏற்படலாம்.. . தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும்.. வியாபாரம் விரிவாக நடைபெறும்.
8ம் இடத்தில
உள்ள ராகுவால்
8ம் இடத்திற்கு வரும் ராகு பகவான் நற்பலன்களை தரமாட்டார். உடல் ஆரோக்கியம்
கெடும். மருத்துவ சிலவு ஏற்படும். சொந்த ஊரை
விட்டு வெளியேற நேரிடும். நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது
நலம்.
2ம் இடத்தில
உள்ள கேதுவால்
கேது 2ம் இடத்திற்கு
வருவதால் பணவரவு தாராளமாக இருக்கும் .
குடும்பத்தில் மகிஸ்ச்சி நிலவும் .குழந்தைகளின் கல்வியில் மேன்மை ஏற்படும்.
12ம் உள்ள சனி பகவானால்
உங்களுக்கு “ஏழரை சனி ”ஆரம்பித்து இருக்கிறது.. ஒன்று நான்குக்குறிய குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில்
சனி அமையப்பெற்றிருப்பதால் , ஏழரை சனி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது..
குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். புதிய . சொத்துக்கள் வாங்க
நேரிடும். வாக்கு ஸ்தானத்தில் கேது உள்ளதால் . வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால்
நல்ல யோகமான பலன்கள் உண்டு.பூர்வீக சொத்து
கைக்கு வரும்.. திருமண தடை உள்ளவர்களுக்கு
திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு சச்சரவு நீங்கும். வேலை பறிபோனவர்கள்
மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும்.
நீண்ட கால கடன் தீரும். ஒரு சில நேயர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
. குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய
தொழில் துவங்க வாய்ப்பு ஏற்படும்.. கண்களில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடன் வாங்குவதை தவிர்க்கவும்.பெற்றோர், பெரியோரிடம் அனுசரித்து
செல்லுங்கள்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
அலுவகத்தில்
நிலைமை அனுகூலமாகவே காணப்படும்.
சிலருக்கு வெகு நாட்களாக விரும்பியே இடமாற்றம் கிடைக்கும். . பணவரவு சரளமாக இருக்கும்.பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பாராமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் அன்பும்
அரவணைப்பும் கிடைக்க பெறுவீர்கள் வேலை
ரீதியான பயணங்கள் விரும்பிய பயனை
கொடுக்கும்.
|
வியாபாரம் செய்வோர்களுக்கு
|
தொழிலில் நல்ல
முன்னேற்றம் இருக்கும். மறைமுகமாக
இருந்து வந்த தடைகள் , வெற்றிகள் குவியும்.. எல்லோரும் உங்களிடம்
அன்புடன் பழகுவார்கள். தொழிற்
கூட்டாளிகளின் உங்களுக்கு வேண்டிய உதவியை செய்வார்கள்கூட்டு தொழில் முயற்சி விரும்பிய பலனளிக்கும். வியாபாரத்தை விரிவாக்குதல்,புதிய சந்தை, புதிய கடை, போன்ற
துணிச்சலான காரியங்களில் இருங்குவீர்கள்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன்
-மனைவியிடம் ஒற்றுமை அதிகரித்து
காணப்படும்.. ஒரு சில நேயர்கள் புதிய
ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.ஒரு சில நேயர்கள். வீடு, வாகனம்
போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லற வாழ்வு இனிதாக அமையும்.
|
விவசாயிகளுக்கு
|
விவசாயத்தில் லாபங்கள் எதிர்பார்த்தற்கு மேலாக இருந்து வரும். புதிய குத்தகை உங்களை
தேடி வரும்.. நவீன விவசாய உபகரணங்களை கொள்முதல் செய்துமகசூலை பெருக்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல வருமானம் கிடைக்கும். பழைய கொடுக்கல்
வாங்கல் சிரமமின்றி நடைபெறும்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
அரசியல்வாதிகளுக்கு பெரிய ஆதாயங்கள் தேடி
வரும்.. எந்த காரியத்தை செய்தலும் முடிவு வெற்றிகரமாக அமையும். அரசியலில் புதிய பதவிகள் கிடைக்கும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
நல்ல முன்னேற்றத்தைக் கலைத்துறையினருக்கு கொடுக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு கிடைக்கும்.புதிய
ஒப்பந்தங்கள் சக கலைஞர்களால்
உங்களுக்கு கிடைக்கும்.. தீவிரமான போட்டிகளை தாண்டி வெற்றியைக் காண்பீர்கள்.
வெளிநாட்டுப் படப்பிடிப்பில் கலந்து
கொள்ளும் யோகம் ஒரு சில நேயர்களுக்கு கிடைக்கும்.
|
மாணவர்களுக்கு
|
படிப்பில்
நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும்.. சிலருக்கு உயர் கல்விக்கு
அரசாங்கத்தின் மான்யம் கிடைக்கும்.ஒரு சில நேயர்களுக்கு . வெளிநாடு சென்று
படிக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். ஒரு
சில நேயர்கள் விளையாட்டிலும் சாதனைகள் புரிவார்கள்.
|
மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
ராகு
|
|||
மகர ராசி
கேது
|
|||
சனி
|
குரு
|
பத்தாம்
இடத்தில உள்ள குரு பகவானால்
இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் (9ம் இடத்தில) இருந்த குருபகவான்,
ஜீவனம் அல்லது தொழில்
ஸ்தானமான 10 இடத்திற்கு
மாறுகிறார். இங்கிருந்து உங்களது தனவாக்கு குடும்ப ஸ்தானம் (2ம் இடம்) , சுக ஸ்தானம் (4ம் இடம்), ரண- ருண-ரோக ஸ்தானம் (6ம் இடம்) ஆகியவற்றைப் பார்ப்பார்.
இந்த குரு பெயர்ச்சி சம்யதாயத்தில் உங்குளுடைய அந்தஸ்தை நிலை நாட்டும். பணவரவு
தாராளமாக இருக்கும்;.. பொருளாதார விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களுக்கு சாதகமான
தீர்ப்பு வழக்குகளிலும் கிடைக்கும்.
இதனால் பிதுரார்ஜித சொத்து கிடைத்து அதன்
மூலம் திரண்ட வருமானமும் வரத் தொடங்கும்.
பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு நல்ல லாபம் அடைவீர்கள்.. சமயோசிதமாக செயல்
படுவீர்கள்.. வசீகரமான பேச்சினால் புதிய
நண்பர்களைப் பெறுவீர்கள். உங்கள் எதிரிகளையும் உங்களுக்கு பலமாக மாற்றிக்
கொள்வீர்கள்.
7ல் உள்ள ராகுவால்
7ம் இடத்திற்கு வரும் ராகு பகவான் இந்த ராசி நேயர்களுக்கு திடீர் பண வரவு, தொழிலில் மேன்மை, கூட்டுத்தொழிலில்
யோகம் போன்ற நற்பலன்களை தருவார். புதிய ஆண் நண்பர்கள் அல்லது பெண் நண்பர்கள்
கிடைப்பார்கள். ஒரு சிலருக்கு வெளியூர்களுக்கு சென்று சம்பாதிக்கும் நிலை
ஏற்படும். அரசாங்கத்தால் மற்றும்
நண்பர்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய ரீதியான
பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மருத்துவ சிலவுகள் உண்டு.
ராசியில்
உள்ள கேது பகவான்
கேது பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் , திடீர் தனவரவு உண்டாகும். கௌரவம் ஓங்கும் . பெயரும்
நர்மதிப்பும் உண்டாகும். குழந்தைகளின்
கல்வியில் மேன்மை உண்டாகும். வாகனங்கள் ஓட்டும்பொழுது மிகவும் கவனம் தேவை. வலுவான தசை புக்தி நடைபெறாத ஒரு சில நேயர்கள் முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் கெடும்.
பதினொன்றாம்
இடத்தில் உள்ள சனி பகவானால்
ம கர இராசிக்கு சனி பகவான் 11-ம் இடத்தில் லாப
சனியாக இருந்து வருகிறார்.. குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி
அமர்ந்துள்ளார்.. செல்வந்தர்களின் நட்பும், உதவியும்
கிடைக்கும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும்.பிரிவினை-சச்சரவு தீரும்.
பொதுவாக11-ல் சனி அமர்ந்தாலே இராஜயோகமான பலன்களை தருவார்.. தட்டிப்போன
.வரன்கள் திரும்ப வரும். மனை , வீடு, வாகனம் யோகம் அமையும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு
தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும்
சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அதிகம் கவனம் தேவை. வீண் அலைச்சல்
அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..
புதிய சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. போட்டி , பொறாமைகளை தவிர்க்கவும். ஆடம்பர செலவை குறையுங்கள்..
நலிவுற்ற தொழில், மீண்டும் புத்துணர்வுடூன் துளிர்க்கும்.. குழந்தைகளுக்கு உத்தியோகம், மற்றும் திருமணம் நடக்க
ஏற்ற நேரம் இது. .
வேலையில்
உள்ளவர்களுககு
|
வேலை பளு குறையும். நீங்கள் பல நாட்களாக . விரும்பிய
இடமாற்றங்கள் ஏற்படும். ஒரு சில நேயர்கள் மேலதிகாரிகளின் அவமதிப்புக்கு ஆளாகலாம். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களின் புத்திசாலித்தனத்தால் எதிரிகளின்
தடைகளைத் தகர்ப்பீர்கள். அலுவலகத்தில் தங்கள் திறமையால் நல்ல பெயர் வாங்க
முயற்சிப்பீர்கள்.
|
வியாபாரம்
செய்வோர்களுக்கு
|
தொழிலில்
அதிக முன்னேற்றம் இல்லாமல்
அவதியுறுவீர்.. லாபம் அதிகம் இல்லாததால் செலவை
குறைத்து கொள்ள வேண்டியதாக இருக்கும். வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி
புதிய முதலீடுகளை செய்வீர்கள். வியாபார
கூட்டாளிகளால் நன்மை உண்டு.
|
கணவன்-மனைவி
உறவு
|
களத்திர
ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கணவன் - மனைவி உறவுவில் சிறிது விரிசல் காணப்படும்.
ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
|
விவசாயிகளுக்கு
|
விவசாயத்தில்
அதிக மகசூல் இருந்தாலும் லாபம் சுமாராக
இருக்கும். பால் வியாபாரம், மாற்றுப் பயிர் செய்வதிலும், கோழி வளர்ப்பு போன்ற உப தொழில்கள்
மூலமாக வருமானத்தைக் காண்பீர்கள். புதிய குத்தகை ஒப்பந்தங்களை பெற்று அதன் மூலம்
வருமானத்தை பெறுக்குவீர்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
கட்சி
மேலிடத்தின் பார்வையை உங்களது
கடினமான உழைப்பால் கவர்ந்து
இழுப்பீர்கள். . தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு. உயர்ந்த பதவிகள் உங்களை அலங்கரிக்கும். எதிரிகளின்
சூழ்ச்சியை உங்கள் மதியூகத்தால்
முறியடிப்பீர்கள். வருமானம் சரளமாக காணப்படும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
புதிய
ஒப்பந்தங்கள் சக கலைஞர்களால்
உங்களுக்கு கிடைக்கும். கடினமாக உழைத்து விருதுகளையும் பாராட்டையும் பெறுவர்.
ஒரு சில கலைஞர்களுக்கு திடீரென்று புதிய
பட வாய்ப்பு கிடைக்கும்.
|
மாணவர்களுக்கு
|
மாணவர்களுக்கு
நல்ல நேரம் இது.சிறப்பாக படித்து
திறமையான மாணவர் என்று பெயரெடுப்பீர்கள்.
பாடங்களைப் புரிந்து கொண்டு படித்து அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள்.. சக
நண்பர்களுக்கு கல்வியில் உதவி
செய்வீர்கள். விளையாட்டிலும் ஆசிரியர்களின் ஆதரவுடன் ஈடுபட்டு நல்ல பெயர்
எடுப்பீர்கள்.
|
பரிஹாரம்
தினமும் குரு அஷ்டோத்தரத்தை மறவாமல் சொல்லிவரவும். வியாழக்கிழமை தோறும்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி கொண்டக்கடலை மாலை சார்த்தி
வழிபட்டால் குரு பகவானின் கருணையால் தீய பலன்கள் விலகி நற்பலன்களே ஏற்படும். கனக புஷ்பராகம் அணியலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய )
கும்ப ராசி
|
ராகு
|
||
கேது
|
|||
சனி
|
குரு
|
9ல் உள்ள குருவால்
இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் (8ம் இடத்தில் ) இருந்த
குருபகவான், பாக்கிய ஸ்தானத்திற்கு (9ம் இடத்திற்கு) மாறுகிறார்.
இங்கிருந்து உங்களது ஜென்ம ராசி,
தைரிய வீர்ய ஸ்தானம் (3ம் இடம்), பஞ்சம பூர்வபுண்ணிய ஸ்தானம் (5ம் இடம்) ஆகியவற்றைப் பார்ப்பார்..
தொழிலில் இருந்த மெத்தனபோக்கு மாறும்பணவரவு
அதிகரித்து காணப்படும்..
ஆனால் செலவு இனங்களும்
அதிகரிக்கும்.. நீண்ட நாட்களாக
காத்துஇருந்த உதவிகள் கிடைக்கும். மனோதைரியம் அதிகரித்து காணப்படும்.
எந்த காரியத்தையும் முன் பின் யோசிக்காமல் இறங்க வேண்டாம்.. ஒரு சில நேயர்கள்
விருப்பமற்ற இடத்திற்கு இடமாற்றம் செய்ய
நேரிடலாம்.. உங்கள் வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள். . அணைத்து வகைகளிலும் சசௌகரியம்
உண்டாகும். செயும் முயற்சிகளில்
விருப்பமான பலன் கிடைக்கும். ஒரு சிலர்
வயிறு கோளாறால் அவதி படுவீர்.. புதிய நட்பு கிடைக்கும். அரசாங்கப் பணிகள் மூலம்
நல்ல லாபம் உண்டு . பெரியவர்களின்
உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். . வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல
பலன்கலை தரும்.
6ல் உள்ள ராகுவால்
ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.எதிரிகளால்
தொல்லை மற்றும் காரியத்தடை உண்டாகும். அரசியலில் உள்ளவர்கள் தங்கள் எதிரிகளால் பதவி
இழக்கும் நிலை ஏற்படும். உறவினர்களுக்கு
குறிப்பாக மாமன் வகையில் உடல் பாதிப்பு ஏற்படும். கண் சம்பந்தமான நோய்கள்
ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தீயபழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை உள்ளது . ஆகையால்
மிக கவனம் தேவை.
12ல் உள்ள கேதுவால்
12ம் இடத்திற்கு வரும் கேது பகவானால் உடல் அரோக்கியம் பாதிக்கப்படலாம்.தீர்த்த
யாத்திரை மற்றும் சித்தர்களின் தரிசனம் ஒரு சிலருக்கு ஏற்படும். மனதில் அமைதி
என்பது ஒரு சிலருக்கு கானல் நீராக அமையும். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய
நேரிடும். தொழில் தொடர்பாக ஒரு சிலர் பிறந்த ஊரை விட்டு செல்ல நேரிடும்.
ஜீவன
ஸ்தானத்தில் (10ல்
உள்ள) சனி பகவானால்
கும்ப இராசிக்கு சனி பகவான் 10-ம் இடத்தில் உள்ளார்.. தன-லாபாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாக
நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பதால் , ஒன்றுக்கு மேற்பட்ட
தொழில்கள் செயும் யோகம் உண்டாகும்..தன, தான்யத்தோடு மகிழ்ச்சியான
வாழ்க்கை அமையும். உங்கள் வார்த்தையை
பிறர் மதிக்கும் நேரம் இது.. எதிரிகள் உங்களை இப்பொழுது புகழ ஆரம்பிப்பார்கள். திட்டமிட்ட வாழ்க்கை வாழ
ஆரம்பிப்பீர்கள்.
நண்பர்கள், உறவினர்கள், எப்படிப்பட்டவர்கள் என்று. அறிந்து கொள்ளும் நேரம்
இது.குடும்பத்தில் பண வரவு சீராக இருக்கும்.
ஒரு சில நேயர்கள் வீடு, மனை வாங்கும்நேரம் இது.. வாழுங்கள். கூட்டாளி வசம், குடும்பத்தார் வசமும் அடங்கி போகாமல் உங்கள் தனித்தன்மையை காட்டுகின்ற நேரம்
இது., ஆனால் எல்லோரையும்
அரவணைத்து செல்வது நல்லது.
கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும்.. பிறருக்கு ஜாமீன் அளிப்பதை
தவிர்க்கவும்.. வாகன பயணங்களில் கவனம் தேவை.
சகோதர ஒற்றுமை வளரும். உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். கடன் சுமை
தீரும். 10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார்.
வேலையில்
உள்ளவர்களுககு
|
சகஊழியர்களுடன்
கவனமாக பழகுவது நல்லது. எந்த பணியையும்
செய்துமுடிப்பதில் வேகம் காட்டுவீர்கள் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும்..பணவரத்து திருப்தி தரும். வாக்குவாதத்தைத்
தவிர்ப்பது நன்மைதரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
|
வியாபாரம்
செய்வோர்களுக்கு
|
வியாபாரம்
அமோகமாக இருக்கும். உங்கள் பழைய
முதலீடுகள் இந்த நேரத்தில் பலன் தரும்.வியாபார
கூட்டாளிகளை கலந்தாலோசிக்காமல்
எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்கள் ஊழியர்கள் நல்ல விசுவாசத்துடன் உழைப்பார்கள்.
உங்களுடைய . மறைமுக உழைப்பு வீண் போகாது. உங்கள் பழைய முதலீடுகள் இந்த காலகட்டத்தில்
பலனளிக்கத் தொடங்கும். மேலும் நண்பர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முக்கிய
முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் நல்ல
விசுவாசத்துடன் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி கருத்து வேற்றுமையைத் தவிர்க்கலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதால் செலவு உண்டாகும். உறவினர்கள்
வருகை இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
|
விவசாயிகளுக்கு
|
அரசு
மானியங்கள் கிடைக்கும்.விவசாயிகளுக்கு
அதிக மகசூலால் லாபம்
அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளில்
நல்ல பலன் உண்டாகும்.. விவசாய பொருட்களை
கொள்முதல் செய்வதில் அதிக கவனம்
செலுத்தவும். கூலிவேலை செய்வோரோடு
அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பழைய கடன்களும் வசூலாகும். பால் வியாபாரம்
செய்தும் மாடுகள் வளர்த்தும் அதிக
லாபங்களைப் பெறுவீர்கள்.
|
அரசியல்
வாதிகளுக்கு
|
அரசாங்க
காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்எடுத்த காரியம் மற்றும் முயற்சியும்
வெற்றியாக முடியும். விருப்பமானவர்ளை சந்திப்பீர்கள். நீங்கள் ஆவலாக
எதிர்பார்த்துஇருந்த நிதிஉதவி
கிடைக்கும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
கலைஞர்களுக்கு
எதிர்ப்புகள் நீங்கும். தாராள பணவரத்து மனமகிழ்ச்சி தரும். நீண்டநாட்களாக இருந்த
பிரச்னைகள் குறையும். வாக்குவன்மையால்
நீங்கள் நினைத்த காரியத்தை சாதிக்க நேரிடும்.. நீங்கள் எதிர்பார்த்தபடியே உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
|
மாணவர்களுக்கு
|
உயர்கல்விக்காக
எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.மாணவர்கள் எந்த காரியங்களில்
ஈடுபட்டாலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது
நல்லது. உயர் கல்வி பற்றிய மன கவலை நீங்கும்.நீங்கள் எண்ணியபடியே பாடங்களை படித்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
|
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசி
|
|||
ராகு
|
|||
கேது
|
|||
சனி
|
குரு
|
அஷ்டமத்தில்
(8ம் இடத்தில்) உள்ள குருவால்
இதுவரை உங்களது சப்தம ( 7ம் இடத்தில்
) ஸ்தானத்தில் வீற்றிருந்த ராசிநாதனான குருபகவான் இனி அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு
(8ம் இடத்திற்கு) மாறுகிறார். இங்கிருந்து
உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானம் (2ம் இடம்) , சுக ஸ்தானம் (4ம் இடம்) , ருண , சத்ரு ஸ்தானம் (6ம்
இடம்) ஆகியவற்றைப் பார்ப்பார்.
மீன ராசி நேயர்கள் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல விதமான
சங்கடங்களை சந்திப்பீர்கள். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். மிகவும் கவனம் தேவை.
வீண் வாக்குவாதங்கள் செய்வதை அறவே தவிர்க்கவும்., இதனால் உங்குளுக்கு
எதிரிகளால் மிகுந்த தொல்லை உண்டாக்ககூடும். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக திருடுபோகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால் வியாபாரத்தில்
கூடுதல் லாபம் பெறமுடியும். வாகனங்களால் செலவு ஏற்படும். ஒரு சிலருக்கு தந்தையுடன்
சண்டை போடும் நிலைமை ஏற்படும்..அலுவலகம் தொடர்பான பயணம் செல்லவேண்டி வரலாம்
பாகப்பிரிவினைஇழுபறி அமையும்.. தொழில், வியாபார
காரியங்களில் நிலை காணப்படும்.பணியில்
உள்ளவர்களுக்கு வீண் அலைச்சலும்கூடுதல்
பணிச்சுமையும் உண்டாகும். மேலதிகாரிகளின் தொந்தரவுக்கு ஆளாக நேரிடலாம்.
5ல் உள்ள ராகுவால்
ராகு பகவான் 5ம்
இடத்திற்கு வருவது நல்ல ஏற்றமான பலன்களை
தருவார் . பங்கு சந்தை , தரகு தொழிலில்
யிடுபட்டுஉள்ளவர்கள் தொடர் லாபங்களை பெறுவார்கள். ஒரு சில நேயர்களுக்கு
புதிய நண்பர்கள் அமைவார்கள்.
11ல் உள்ள கேதுவால்
கேது 11ம் இடத்திற்கு வருவதால் செயும் தொழிலில் மேன்மை
உண்டாகும். வேளையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். நண்பர்களால் உதவி
உண்டு. குடும்பத்தில் சுபீக்ஷமான நிலை இருக்கும். புதிய தொழில் முயற்சிகள்
வெற்றியை தரும். வேலை தேடும் அன்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
9ல் உள்ள சனி பகவானால்
மீன இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு சனி பகவான் வந்துள்ளார். இது நாள் வரை அல்லல் பட்டு கொண்டிருந்த
அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெற்று
விட்டீர்கள். பொதுவாக பாக்கியத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் வாரி கொடுப்பார்இதுவரை முடங்கி கொண்டு இருந்த நீங்கள், இனி, சுறுசுறுப்புடன் வீர நடை போடுவீர்கள். மனதில் பட்டதை
துணிந்து செய்வீர்கள். குடும்பத்தில் சுப
நிகஸ்ச்சிகள் நடை பெரும் காலமிது.. இல்லத்தில் திருமணம் போன்ற சுபசெலவுகள்
ஏற்படும். 9-ம் இட சனி, உறவினர் வருகையை
அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம்
உண்டு.வேலையில்லா பட்டதாரிகள், வேளையில் அமர்வார்கள்.. பொன், பொருள், ஆபரண சேர்க்கை
உண்டாகும். பெற்றோர் உடல்நலனில் மிக அக்கறை தேவை. , வீண் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.. உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில்
ஈடுபாடு வேண்டாம். . வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.. விட்டு கொடுத்து போவது நன்மை
தரும்.. மனநிம்மதி உங்களை தேடி வரும்.. சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை.
வேலையில்
உள்ளவர்களுககு
|
பணியில்
உள்ளவர்களுக்கு வேலை பளு கூடும். இது
நாள் வரை மேலதிகாரிகளின் மனக்கசப்புகளுக்கு உள்ளானவர்கள் அவர்களின் ஆதரவு நிறைய
கிடைக்கும்.. ஊதிய உயர்வு எதிர்பார்த்த
அளவில் கிடைக்கும். . பணவரவும் சரளமாக
இருக்கும். வேளையில் வீண் அலைச்சல் தற்பொழுது குறையும்.. சக ஊழியர்களின்
ஆதரவு உண்டு.. அவர்களின் உங்களின் வேலைகளையும் பகிர்ந்து பனிபளுவை
குறைப்பார்கள்.
|
வியாபாரம்
செய்வோர்களுக்கு
|
தன்னம்பிக்கையுடன்
செயல்படுவீர்கள். தொழில் சிறப்பாகவே நடக்கும்.தற்போது புதிய
முதலீடுகளைச் செய்தால் நல்ல பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபாட்டுடன்
இருந்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். . தொழிலில் இருக்கும் போட்டிகளைத்
திறமையாகச் சமாளிக்கும் ஆற்றல் கூடும்.
|
கணவன்-மனைவி
உறவு
|
கணவன் - மனைவி
உறவுவில் சிறிது விரிசல் காணப்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் வீண்
பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
|
விவசாயிகளுக்கு
|
குடும்பத்தில்
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல ஆதாயம்
உண்டு.. எதிலும் பெரிய பணவரவை
எதிர்பார்க்க முடியாது. சக
விவசாயிகளை அனுசரித்துச் சென்று குத்தகைகளை முடிக்க முயற்சிக்கவும். பாசன
வசதிகளையும் பெருக்கி கொள்ள செலவு செய்ய வேண்டிய நேரம் இது..
|
அரசியல்
வாதிகளுக்கு
|
ஒளிமயமான
எதிர்காலம் உங்கள் கண்ணில் தெரியும்.. எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப்
பெறுவார்கள். பழைய கஷ்ட நஷ்டங்களை பொருட்படுத்தாமல் சந்தோஷமாக எதிர்காலத்தை
எதிர்கொள்வீர்கள்..எல்லோரையும் அனுசரித்து நல்லபெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும்.
|
கலைத்துறை
நண்பர்களுக்கு
|
புதிய
ஒப்பந்தங்கள் சிறிய
தடைகளுக்குப்பிறகு கிடைக்கும். திருமணம்
போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்சக கலைஞர்களுடன் எச்சரிக்கையாக பழகுவது
நல்லது..அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்மணிகள் செல்வச் செழிப்போடு வாழக்கூடிய
தருணம் இது.. குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவில்லை.. . குழந்தைகளால்
சந்தோஷமடைவீர்கள்.
|
மாணவர்களுக்கு
|
விளையாட்டு , கேளிக்கை போன்றவைகளில் நேரத்தைக் கழித்தாலும் . கல்வியிலும் நல்ல
மதிப்பெண்களைப் பெறுவார்கள்.எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது.
கெட்டப்பழக்கங்கள் உள்ள நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்குவது மிகவும்
நன்மை தரும்.
|
பரிஹாரம்
தினமும் குரு அஷ்டோத்தரத்தை மறவாமல் சொல்லிவரவும். வியாழக்கிழமை தோறும்
நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி கொண்டக்கடலை மாலை சார்த்தி
வழிபட்டால் குரு பகவானின் கருணையால் தீய பலன்கள் விலகி நற்பலன்களே ஏற்படும். கனக புஷ்பராகம் அணியலாம்.
This prediction with Rasi Kaddam is wonderful and easy to understand even to a layman!
ReplyDeleteதங்களுடைய பாராட்டுக்கு மிக நன்றி
ReplyDeleteநன்றி அய்யா
ReplyDelete