Search This Blog

Sunday, May 16, 2021

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் காலசர்ப்ப தோஷ பூஜை-கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

 ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் காலசர்ப்ப தோஷ பூஜை

தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்

"சொல்லுமையா பாக்கியத்தோன்,

பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!

எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !

தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர் பல பேரும் உண்டு பாரு!

வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையோடு வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் காலசர்ப்ப தோஷ பூஜை

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவரின் ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே ஏனைய கிரகங்கள் அமைந்து, அவைகள் கொடுக்கும் நன்மைகளில் நஞ்சு ஏற்பட்டு தீமையாகும்.

இவர்களுக்குத் திருமண தடை ஏற்பட்டு வயது 35 வரை வாழ்க்கையை வீணடிப்பார்கள்.

1.திருமணம் ப்ராதம் நகர்ந்து கொண்டே இருக்கும்.

2. எந்த ஒரு வேலையும் மிகவும் சிரம்மம் கொண்டு முடிக்க வேண்டும் .

3. நோயின் அறிகுறிகள் கண்டறிய முடியாது.

4. நம்முடைய உழைப்பு பிறருக்கு உயர்வு தரும்.

5. குழந்தை பிறப்பு இருக்காது.

6. சிலருக்கு, ஆண் மட்டுமே அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.

7. சிலருக்கு; தலை, முதுகு, கால்கள் பலமற்று இருக்கும்.

8.அதிர்ஷ்டம், தரித்தரம், இவைகள் ஏற்படுவது இதனால் தான்.

9. போதை, களிப்பாட்டம், இவைகள் தான் வாழ்க்கை என்று இருப்பர்.

10. மன நலம் பாதிப்பு, மாந்த்ரிக பழக்கம், தொல்லைகள் இருக்கும் அல்லது உண்டாகும்



பரிகாரம்

சர்ப்பதோஷ முள்ளவர் கள் பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம், மகப்பேறு, சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு-கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

பரிகாரம் கோயில்

ஸ்ரீகாளஹஸ்தி சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஞான பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளஸ்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வர நிம்மதி கிடைக்கும்

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் சர்ப்ப சாந்தி பூஜை தினமும் நடை பெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் சர்ப்ப சாந்தி பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீங்கி வாழ்வில் வெற்றி உண்டாம்.


ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment