Search This Blog

Thursday, May 20, 2021

திருமணம் தடை, குழந்தைப் பேறின்மை தடை நீக்கும் தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில், திண்டுக்கல்

 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

திருமணம் தடை, குழந்தைப் பேறின்மை தடை நீக்கும் தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில், திண்டுக்கல்




இராஜகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

கோட்சார நவக்கிரக சிலைகள்

இங்கு முற்றிலும் வித்தியாசமாக பஞ்சலோகத்தால் வடித்த கோட்சார நவக்கிரக சிலைகள் சித்த ஆகம முறைப்படி அமைந்துள்ளதாக அறிகிறோம். இந்த கோயிலில் தனி சிறப்பு என்னவென்றால் , நவகிரஹ சிலைகளை தினமும் கோட்சார கிரஹ நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஷ்ட நாகர் சிலை

மற்றொரு சிறப்பு அஷ்ட நாகர் (எட்டுத் தலை பாம்பு) மேல் நின்று நடனமாடும் ஸ்ரீ கிருஷ்ணர் சிலை.



கன்னி பூசை

சித்த முனிவர் போகர் (பதினெண் சித்தர்களில் ஒருவர்) தம் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்கள் சூழ வருகை புரிந்து கன்னி பூசை செய்துள்ளதாக அறிகிறோம். பூசை தொடங்குமுன் தன சித்துக்களை பயன்படுத்தி, கமண்டல நீர் தெளித்து, ஒரு கல்லுக்கு உயிரளித்து 'கன்னிவாடி' எனக்கூறியபடி ஒரு கன்னிப் பெண்ணை உருவாக்கி பூசை செய்யத் தொடங்கினார்.



போகரின் கன்னி பூசை, சாபம், சாப நிவர்த்தி

போகர் கன்னிவாடி மலைக்கு தம் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்கள் சூழ வருகை புரிந்து கன்னி பூசை செய்தார்.. பூசை தொடங்குமுன் தன சித்துக்களை பயன்படுத்தி, கமண்டல நீர் தெளித்து, ஒரு கல்லுக்கு உயிரளித்து 'கன்னிவாடி' எனக்கூறியபடி ஒரு கன்னிப் பெண்ணை உருவாக்கி பூசை செய்யத் தொடங்கினார்.

தெத்துபட்டி இராஜகாளியம்மன் கோவிலில் போகர் தவம்

போகரின் கன்னி பூசை நிறைவுறும் முன்பு அன்னை புவனேஸ்வரி அம்மன் கடும் சினமுற்று போகர் முன் தோன்றினாள். தன சினத்தை போகருக்கு உணர்த்தி கன்னிப்பெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். இது மட்டுமல்லாமல் போகருக்கு சாபம் கொடுத்தாள். போகர் இந்த சாபத்தால் தவ வலிமை இழந்து முதுமையுற்று கன்னிவாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெத்துபட்டி இராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்து தவமி யற்றினார். இவர் தவத்தை மெச்சி இராஜகாளியம்மன் போகர் முன் தோன்றி சாப நிவர்த்தியளித்தார்



மதுரை காளி அடைந்த சாபம்

மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரை காளி, பாண்டிய மன்னன் தன கடமை தவறி கண்ணகி என்ற கற்புகரசியின் வாழ்வை அழித்தது மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொண்டுள்ளான். எனவே அவனுக்கு மறுபிறவி உண்டு. மன்னன் தன கடைசி பிறவியில் காளி கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். இது காலம் வரை மதுராபதி தெய்வமாகிய மதுரை காளி குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவில் மேற்கு கோபுரத்தில் துயில் கொள்ள வேண்டும். இதன்படி இராஜகாளியம்மனுக்கு போகர் எழுப்பிய கோவிலில் மதுரை காளியாகிய மதுராபதி அரூப சக்தியாக உறைகிறாள் என்பது போகர் குறிப்பு.

நேர்த்திக்கடன்

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்பட்டு அபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No photo description available.

No comments:

Post a Comment