Search This Blog

Monday, May 17, 2021

கபால மோட்சம் அடைந்த எரும்பு சித்தர்-ஸ்ரீ வீர நாராயண பெருமாள் சித்தர்

 கபால மோட்சம் அடைந்த எரும்பு சித்தர்

பகவான் ஸ்ரீ வீர நாராயண பெருமாள் சித்தர் ஸ்வாமிகள் அல்லது எரும்பு சித்தர் ஒலக்கூர் ஸ்வாமிகள் சென்னை -திருச்சி தேசிய நெடுசாலையில் உள்ள ஒலக்கூர் என்ற ஊரில் ரோட்டிலேயே அமர்ந்து இருப்பர்.



சாலை விபத்துக்கள்

அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டன . ஸ்வாமிகள் அங்கு இருந்த பிறகு , சாலை விபத்துகள் வெகுவாக குறைந்தன. அவரது பக்தர்கள் அவர் இருப்பதற்கு ஒரு ஓலை குடிசை அமைந்து கொடுத்தனர் . அந்த ஓலை குடிசை இன்றும் உள்ளது.

காலில் காயம்

ஸ்வாமிகளுக்கு ஒரு சமயம் காலில் காயம் ஏற்பட்டது.அதனை அவர் பொருட்படுத்தாமல் இருந்தார். அந்த காயத்தை எறும்பூகளுக்கு உணவாக அளித்தார். இதனால இவர் எறும்பு சித்தர் என்று அழைக்க பட்டார் .



கோபம்

ஒரு நாள் ஸ்வாமியின் பக்தர் ஒருவர் ஸ்வாமிகளின் கால் காயத்தில் இருந்த எறும்பூகளை அகற்றி விட்டார். இதனால் ஸ்வாமிகள் அவர் மீது கோபம் கொண்டு அவரிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தார்,

கபால மோட்சம்

ஒலக்கூர் , நல்லாத்தூர் கிராமத்தில் பல அற்புதங்கள் நிகழ்த்திய ஸ்வாமிகள் 2010 ஆண்டு சித்ரா பௌர்ணமி முதல் நாள் பிரதோஷ திரயோதசி திதியன்று கபால மோட்சம் அடைந்தார்

கபாலம் மோட்சம் – இதை அடைந்தவருக்கு மறுபிறவி இல்லை

கபால மோட்சம் என்றால் என்ன?

கபாலம் எனில் தலை. மோட்சம் எனில் வாழ்கை எனும் தொடர் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் வீடுபேறு அடைதல். இந்துத் தொன்ம வியலில் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேற முடிவு செய்த துறவிகள், யோகிகள், ஞானிகள் மற்றும் தவசிகள் தங்களின் சட உடலை இவ்வுலகிலே விட்டுவிட்டு, தங்களின் உயிர் சக்தி என்ற பிராணனை (ஆத்மா) உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம் என்ற துவாரம் வழியாக வெளியேற்றுவதே கபால மோட்சம் எனப்படும்.



வடலூர் ராமலிங்க ஸ்வாமிகள்

கபால மோட்சம் என்பது அபுர்வமாக ஒரு சில சித்தர்களுக்கு தான் கிடைக்கும். வடலூர் ராமலிங்க ஸ்வாமிகள் கூட கபால மோட்சம் அடைந்த சித்தர் .

எறும்பு சித்தர் சமாதி அமைவிடம்

எறும்பு சித்தர் சமாதி அமைவிடம் - சென்னை -திண்டிவனம் சாலை ,திருச்சி NH -45 மெயின் ரோடில் நல்லாத்தூர் ஏரிக்கரை , பள்ளிபாக்கம் கூட்டு பாதை இடது புறம் அழகான ஜீவசமாதி அமைந்துள்ளது.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment