கடுவெளி சித்தர் ஜீவ சமாதி--நந்தவனத்திலோர் ஆண்டி
கடுவெளி சித்தர் ஜீவ சமாதி
சித்தன் போக்கு சிவன் போக்கு
சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு வந்தது.
திண்டிவனம்
இவர் திண்டிவனத்தில் பிறந்து, வாழ்ந்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கியுள்ளார். பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கிருந்து கடுவெளியில் ஒளிவடிவான பரம்பொருளை தேடி வந்து சித்தாடல் புரிந்து 35 பாடல்களை இயற்றி உள்ளார்.
வேதாரணியம் திருமறைக்காடர்
கடுவெளி சித்தர் சிவன் மீது கொண்ட அளவிலாத அன்பு காரணமாக வேதாரணியம் திருமறைக்காடரை நித்தம் மனதில் வேண்டி பூஜை செய்து வந்தார் சில முறை வேதாரணியம் சென்று வழிபாடு செய்து வந்தார், அவர் வெட்ட வெளியில் மாடுகளை மேய்த்து வரும் நாட்களில் ஒரு திடலில் இருந்த ஸ்ரீ பரம நாதர் சிவ லிங்க திருமேனி ஸ்ரீ வாலாம்பிகை அம்மனையும் பூஜித்தும் வந்தார்.
நந்தவனத்திலோர் ஆண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி-அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ -என்ற பிரபலமான பாடலை இயற்றியவர் இந்த கடுவெளி சித்தர் தான்.
ஆன்மா கடைத்தேற வழி
பத்து மாதங்கள் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை மனிதன் போற்றி பாதுகாக்காது, அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே’ என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது. பத்து மாதங்கள் தவம் செய்து பெற்றது மனிதா. நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானோ? எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண் என்று மனிதனை அறிவுறுத்தினார் கடுவெளி சித்தர்.
பவுர்ணமி பூஜை
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கடுவெளி சித்தருக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்படும். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படுகிறது.
பறக்கும் ஆற்றல் பெற்றவர்
பறக்கும் ஆற்றல் பெற்றவர் மறையும் ஆற்றல் பெற்றவர்,தனது சக்தியால் அவர் திருவையாறு பாண்டிச்சேரி காஞ்சிபுரம் மதுரை போன்ற பல இடங்களுக்கு சென்று வந்தார்,இவர் ஜீவசமாதி அவர் சித்தி பெற்ற அரச மரத்தடியில் உள்ள விநாயகர் கோவில் முன் உள்ளது .
எப்படி செல்வது ?
கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்-சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment