Search This Blog

Sunday, July 7, 2024

மாசி அமாவாசை அன்று அங்காளம்மன் கோயில்களில் நடைபெறும் 'மயானக் கொள்ளை'

 மாசி அமாவாசை அன்று அங்காளம்மன் கோயில்களில் நடைபெறும்  'மயானக் கொள்ளை'


 

பிரம்மாவின் அகந்தையை அடக்க சிவன் அவரின் ஐந்தாவது சிரசை துண்டிக்க செய்வார்.ஒவ்வொரு முறையும் சிரசு புதிதாக முளைக்கும்.அப்படி இருக்க கிள்ளிய சிரசை கையிலியே வைத்திருக்கு அது அப்படியே ஒட்டிக்கொண்டது.சிவனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

பிக்ஷாடனாரக வலம்வந்து பிக்ஷை எடுத்தால் எல்லாவற்றையும் கையிலிருந்த சிரசே விழுங்கிவிடும்.

அதேசமயம் சரஸ்வதி பிரம்மாவின் தலையை கொய்ததால் பரமேஸ்வரி மேல் கோபம் கொண்டு பேயிரு கொண்டு அலைவாய் என சாபமிட்டார்.அதன்படி பேயிரு கொண்டு அலைந்து மேல்மலையுனூர் வந்து வாசம் செய்யும் போது சிவன் பிக்ஷை வேண்டி வரும் சமயம் முதல் உருண்டை உணவை கபாலத்திலிட சிரசு விழுங்கிவிடும் இரண்டாம் முறையும் விழுங்கிவிடும்.மூன்றாம்முறை கபாலத்திலிடாமல் கீழை போட சிரசு கையிலிருந்து இறங்கும்.உடனை பரமேஸ்வரி விஸ்வரூபமெடுத்து தலையை காலால் அழுத்தி சிதைத்துவிடுவார்.

இது நடந்த தினம் மாசி அமாவாசை.ஆக ஒவ்வொர வருடமும் மாசி அமாவாசை அன்று இதை எல்லா அங்காள பரமேஸ்வர ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடுவார்கள்.

அம்மாவாசை .முதல் நாள் ஐந்து தலையுடன் ஒருவர் வேடம் அணிந்து ஆடிக்கொண்டு அம்மன் வீதிவலம் வரும் போது வருவார்.மயானத்தில் கோர உருவம் வரைந்து வைக்கப்பட்டிருக்கும் அங்கு வந்தவுடன் ஐந்து தலை வேடமணிந்தவருக்கு ஆவேசம் வந்து அந்த உருவத்தை தலைப்பாரம்.அதுவே மயான கொள்ளை ஏன் கூறப்படுகிறது.



அம்மன் வீதிவலம் வரும்போது மக்கள் வெள்ளரி,சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து,சுற்றல்,பழங்களை அமாமனுக்கு படைத்து சூறைவிடுவார்கள்.

No comments:

Post a Comment