களத்திரதோஷம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் சில குறிப்பிட்ட கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்/ஜாதகிகள் முறையான தோஷநிவர்த்தி செய்யாமல் இருக்கும்பட்சத்தில் களத்திரதோஷத்தால் திருமணம் ஆவதற்கும்,நல்ல வரன் கிடைப்பதற்கும் தாமதம் உண்டாவது,மீறி திருமணம் ஆனாலும் சண்டை சச்சரவான கசப்பான நிம்மதியற்ற வாழ்க்கை அமைப்பு,மணமுறிவு/விவாகரத்து(divorce),திருமணம் மூலம் தொல்லைகள்,திருமணம் ஆனதில் இருந்து மிகுதியான பணவிரயம்,பொருள்சேதம்/உயிர்சேதம்,பொருளாதார கஷ்டம்/நெருக்கடி போன்ற அதிகமான கெடுபலன்களை அனுபவிக்கிறார்கள்..
திருமணம் தாமதம் ஆவதற்கு காரணமான களத்திரதோஷம் தரக்கூடிய சில கிரகஅமைப்புகள் உள்ளன.இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்களுக்கும் திருமணம் நடக்க தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதில் சில கிரக அமைப்புகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி கூற இருக்கிறேன்.
அந்த கிரக அமைப்புகளை உங்கள் ஜாதகத்துடன் ஒப்பிட்டுபார்த்து முன்னெச்சரிக்கையுடன் விழித்துக்கொள்ளுங்கள்..,
1.கடகம்,சிம்மம் லக்னத்தை தவிர மற்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் வீட்டில் மந்தகிரகமான சனிபகவான் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆகும்.
2.மகரம்,கும்பம் லக்னத்தை தவிர மற்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றாம் வீட்டில் மந்தகிரகமான சனிபகவான் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆகும்.
3.லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு/கேது போன்ற தீயகிரகங்கள் இருந்தாலும் களத்திர தோஷமே.முறையான தோஷநிவர்த்தி செய்த பிறகே திருமணம் முடிக்கவேண்டும்.
4.ஏழாம் வீட்டிற்கு உரிய கிரகம் லக்னத்திற்கு 3,6,8,12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தால் களத்திரதோஷம் கழித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும்.இது தாரதோஷத்தை கொடுக்கும்.
5.உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தால் கட்டாயம் தோஷம் கழித்தபிறகே திருமணம் செய்யவேண்டும்.இல்லையேல் மணமுறிவு/கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
6. உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் கட்டாயம் தோஷம் கழித்தபிறகே திருமணம் செய்யவேண்டும்.இல்லையேல் கண்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
7. 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் களத்திர தோஷம் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும்.
8. 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்திரதோஷம்/குழந்தைபாக்கியம் பெறுவதில் தடை இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும்.
9.குரு+சந்திரன் சேர்க்கை ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான தாரதோஷம் ஆகும்.இதற்கு முறையான ஜோதிடஆலோசனை பெறுவது அவசியம்.
10.சந்திரனுக்கு எழில் ராகு/கேது/சனி போன்ற கிரகங்கள் இருந்தாலும் களத்திரதோஷமே..
11.மற்ற கிரகங்களின் தொடர்பின்றி சுக்கிரன்+சூரியன் சேர்க்கை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணத்தடையை உண்டுபண்ணும்.
12.ஏழாம் இடத்தில் மற்ற கிரகங்களின் தொடர்பின்றி செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் அது மிகக்கடுமையான களத்திரதோஷம் ஆகும்.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment