பேசாத குழந்தைகளை பேச வைக்கும் பேசும் பெருமாள்! திண்டிவனம் குமளம் பட்டு சீனிவாச பெருமாள்,
பேசாத குழந்தைகளை பேச வைக்கும் பேசும் பெருமாள்!
திண்டிவனம் குமளம் பட்டு சீனிவாச பெருமாள்
திண்டிவனம் குமளம் பட்டு பகுதியில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் திருக்கோயில். 600 ஆண்டுகளுக்கு முந்தைய கிழக்கு நோக்கிய திருக்கோயில். கிழக்கு நோக்கி விநாயகர் சன்னதி, பலிபீடம், நீண்ட நெடிய கொடிமரம், சீனிவாச பெருமாளின் சன்னதியில் பார்த்தவாறு நேர் எதிரே நின்ற நிலையில் கருடாழ்வார், தாயார் ஆண்டாள் காட்சி தருகின்றனர்.
பேசும் பெருமாள் சீனிவாச பெருமாள்
ஒரே சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் ஒருபுறமும் யோக நரசிம்மர் மறுபுறமும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் கருவறை முன்பு சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவராக அமர்ந்து அருள்கின்றார். கருவறையில் பேசும் பெரும்பாலான சீனிவாச பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
கனவில் தோன்றும் பெருமாள்
இக்கோயிலில் பக்தர்கள் தமது குறைகளை எடுத்துக் கூறி மனம் உருகி வழிபட்டால் பக்தர்களின் கனவில் தோன்றி குறைகளை போக்க அருள் புரிகின்றார். வழிபடும்போதே அசரீரியாக வேண்டும் வரங்களை அழிப்பதால் பேசும் பெருமாள் என்று மக்கள் சிறப்புடன் போற்றி வழிபட்டு நலமாகின்றனர்.
ஒன்பது அமாவாசை
வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு ஒன்பது அமாவாசை தினங்கள் தொடர்ந்து பெருமாளின் தீர்த்து பிரசாதத்தை அளித்தும், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாளாக கோயில் கொண்டுள்ளார். புராதன பெருமைமிக்க குமளம் பட்டு சீனிவாச பெருமாள் திருக்கோயில், விஜயநகர பேரரசின் சின்னமான வராகம் மற்றும் கத்தி ஆகியவை திருச்சன்னிதியின் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளதாலும், தூண் சிற்பங்களில் ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பாணியிலான ஸ்ரீ ஆஞ்சநேயர் சிற்பங்கள் மற்றும் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாலும், திருக்கோயிலுக்கு விஜயநகர பேரரசின் மன்னர்கள் பல திருப்பணிகள் செய்து வழிபட்டுள்ளதை அறிய முடிகின்றது.
மச்ச அவதாரம்
பத்து அவதாரம் எடுத்த பரமனின் மச்ச அவதாரத்திற்கு உரிய ஸ்தலமாக இத்திருத்தலம் போற்றி வணங்கப்படுகின்றது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி மக உற்சவம், புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை விழா, தைமாத அமாவாசை உற்சவம், வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு, ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாள் தேர்த் திருவிழா, ஒன்பதாம் நாள் தீர்த்த வாரி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும். கோவிலின் தல விருட்சம் வெள்ளை அரளி மரம் ஆகும்
No comments:
Post a Comment