Search This Blog

Tuesday, July 16, 2024

வெற்றிக்கு வழிவகுக்கும ஸ்வஸ்திக் கோலம்,ஸ்வஸ்திக் சின்னம்

 

வெற்றிக்கு வழிவகுக்கும ஸ்வஸ்திக் கோலம்.



ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.

விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர்.

வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.

"ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. என்பது பொருள்.

ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும்.

எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம்.

விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு.

சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றுள்ளது..

வெற்றியைத் தரும் சின்னம் ஸ்வஸ்திக் .

பண்டை காலங்களில் மன்னர்கள் போர் புரியச் சென்றபோது ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டன.

பின்னர் அவை அவரவர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போடப்பட்டன.

அது மட்டும் அல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ஸ்வஸ்திக் எனக் கருதப்பட்டது.

ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே ஸ்வஸ்திகா .

அதாவது சுவாசம் ( ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் ( அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவு படுத்துவதே ஸ்வஸ்திகா .

ஸ்வஸ்திகாவை பாருங்கள் ,ஒவ்வொரு பக்கத்தையும் நோக்கி குழாய் போல நீண்டு இருக்கும்.

ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு அதன் நடுவில் வைக்கப்படும் புள்ளியின் அர்த்தம் என்ன என்றால் நடுப்புள்ளி நம் ஆத்மா.

வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே அது போடப்பட்டது.

மேலும் ஸ்வஸ்திக் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன?

-நான்கு வேதங்கள்

- நான்கு திசைகள்

-நான்கு யுகங்கள்- சத்ய, த்ரேதா , துலாபார, கலி யுக

- நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்) -பிராமண , ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர என்பவை

நான்கு யோகங்கள்- ஞான, பக்தி, கர்ம, ராஜ

நான்கு மூலங்கள் - ஆகாயம்,வாயு, நீர் , நிலம்

-வாழ்கையின் நான்கு பருவங்கள்-

குழந்தை, பிரும்மச்சாரி, கிரஹஸ்தன், சந்நியாசி (அனைத்தையும் துறந்தவர்)

நான்காவது எந்த திசையை நோக்கி வெளியேறும் பகுதி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் படம்.

இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும்.

ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?

நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான்.

நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும்.

இடையூறுகள் இல்லாத தன்மையே *ஸ்வஸ்தி*என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;

ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|

ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:

ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.

இதில் வரும் 'ஸ்வஸ்தி'

என்ற வார்த்தை

"தடையற்றநல்வாழ்வு"

என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.

செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.

பிரணவத்தின் வடிவமான ஓம் போலவே ஸ்வஸ்திக் சின்னமும் புனிதமானது.

இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் ஸ்வஸ்திக் வரைவது வழக்கம்.

இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர்.

எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா. இது ஸூர்யனின் வடிவத்தைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.

முற்காலத்தில் சீனர்கள், அதிர்ஷ்டத்தைச் சேர்க்கும் மங்களகரமான எழுத்துக்களையும் குறியீடுகளையும் தங்கள் வீடுகளில் மாட்டி வந்தார்கள்.

அவை அதிர்ஷ்டம் சேர்க்கும் என நம்பினார்கள்.

நாமும் "ஸ்வஸ்திக்", "ஓம்" போன்ற புனித நற்குறிகளைக் கண்ணில் தெரியும்படி வைக்கலாம்.

இவை மிகுந்த அதிர்ஷ்டத்தைக் குறிப்பவை.

நல்ல எழுத்துக்களையோ,நல்ல குறிகளையோ மேசை. நாற்காலி போன்ற மரச் சாமான்களில் நாம் சித்திரங்களாகச் செதுக்கி வைக்கலாம்.

ஸ்வஸ்திக் சின்னத்தையும்,ஓம் மற்றும் திரிசூலத்தையும் உங்கள் வாசல் கதவின் உள்பக்கமோ வெளிப் பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டின் பாதுகாப்பிற்கு உதவும்.



இதை நீங்கள் உங்களிடமே வைத்திருக்கலாம், அல்லது நாட்குறிப்பில் (Diary) ஒட்டி வைக்கலாம். உங்கள் அதிர்ஷ்டத்திற்கும் தற்காப்பிற்கும் உதவும்.

ஸ்வஸ்திக் சின்னத்தில்எந்த திசையை நோக்கி வெளியேறும் பகுதி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் படம் .

No comments:

Post a Comment