Search This Blog

Sunday, April 19, 2026

7ல் ராகு செவ்வாய்-7ம் இடத்திற்கு சனி பார்வை -மனநோயாளி மனைவி அமையும் வாய்ப்பு?

 7ல் ராகு செவ்வாய்-7ம் இடத்திற்கு சனி பார்வை  -மனநோயாளி மனைவி அமையும் வாய்ப்பு?


கிரிஷ்ன் சோகக்கதை

கிரிஷ் நன்கு படித்தவன் ஐ டி துறையில் வேலை கைநிறைய சம்பளம் சொந்த வீடு வாகனம்  அமைய பெற்றவன்

வயது 27   அவனுக்கு அவன் பெற்றோர்கள் பெண் பார்க்க.

ஆரம்பித்தார்கள் . நல்ல வசதியான குடும்பத்தில் ஒரே பெண்ணாக அமைந்தது .

ஆசையுடன் முதலிரவு

திருமணம் பெரும் கோலாகலமாக நடைபெற்றது. அன்று இரவு முதலிரவு . ஆசையுடன் அழகிய மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான். மனைவியும் பால் சொம்புடன் அறைக்குள் வந்தாள் ,

அவன் ஆசை ஆசையாக மனைவின் கையை பிடித்தான். அவ்வளவு தான் அவன் முகத்தில் ஒரு குத்து விழந்தது ,

அறைந்தது வேறு யாருமில்லை . அவனின் ஆசை புது மனைவிதான் ,

என்னை தொந்திரவு செய்யாதீர்கள் , எனக்கு அசதியாக இருக்கிறது. நான் தூங்க வேண்டும் என்றாள் .

சரி பரவாயில்லை என்று கிரிஷ் நினைத்தான் . நாளை எல்லாம் சரியாகி  விடும் என்று கருதினான்.

அடுத்த நாளும் இதே கதைதான்.

இவ்வாறு ஒரு மாதம் சென்றது . தினமும் இதே கதைதான். அவன் பொறுமை இழந்து பெண்ணின் பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னான் .

மனநோய் பிரச்னை

அவர்கள் தங்கள் மனநோய் பிரச்னை உள்ளது என்று கூறினார்கள் . மருத்துவர்கள் திருமணம் நடந்தால் மனநோய் சரியாகிவிடும் என்று சொன்னதால் திருமணம் செய்தோம் என்று கூறினார்கள். பிறகு இரு குடும்பமும் கலந்து உரையாடி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

7 இடத்தில் ராகுவும் செவ்வாயும்

கிரிஷ் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7 இடத்தில் ராகுவும் செவ்வாயும் இணைந்து காணப்பட்டதாலும் , 7 இடத்தை சனி பார்த்ததாலும் இந்த அவல நிலை ஏற்பட்டது.

 

 

 

லக்கினம்

 

 

 

 

 

 

ராசி சக்ரம்

 

 

 

 

சனி

 

 

 

 

 

செவ்வாய் , ராகு

 

 

சனி பார்வை

7-ம் இடத்தில் ராகு-செவ்வாய் சேர்க்கை மற்றும் அதன் மீது சனி பார்வை இருப்பது, கடுமையான திருமண தோஷமாகக் கருதப்படுகிறது. இது திருமண வாழ்க்கையில் அதிக மனக்கசப்பு, தாமதம், பிரிவினை அல்லது துணையின் உடல்/மனநல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனினும், லக்னாதிபதி பலம், குரு பார்வை இருந்தால் பாதிப்பு குறையும். கவனமான ஜாதகப் பொருத்தம் அவசியம்.

7-ல் ராகு-செவ்வாய்:

இந்த சேர்க்கை திருமண வாழ்க்கையில் தேவையற்ற வாக்குவாதங்கள், கோபம், அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம்.

சனி பார்வை:

 7-ம் வீட்டின் மீது சனியின் பார்வை, திருமண வாழ்க்கையில் தேக்கநிலை, பற்றுதலின்மை, கணவன்-மனைவி இடையே இடைவெளியை உண்டாக்கலாம்.

மனைவியின் நிலை:

இத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தில், துணையின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் (மன அழுத்தம், மனநல பாதிப்புகள்) அல்லது குணநலன்களில் கடுமையான மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

11ம் இடத்தில சுக்கிரனும் புதனும்

ஆயினும் கிரிஷ் ஜாதகத்தில் 11ம் இடத்தில சுக்கிரனும் புதனும் இணைந்து காணப்படுவதால் கிரிஷுக்கு மறுமணம் விரைவில் அமையும் என்று பலன் கூறப்பட்டது..

தோஷ சாம்யம்

தோஷ சாம்யம்  என்பது திருமணப் பொருத்தத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜாதகத்தில் உள்ள பாபக் கிரகங்களின் (செவ்வாய், சனி, ராகு, கேது, சூரியன்) பாதிப்பு சமமாக உள்ளதா அல்லது ஒத்துப் போகிறதா என்று பார்ப்பதாகும்.

பெண்ணை  விட ஆணுக்கு அதிக தோஷம் இருந்தால், அது பிரிவினை அல்லது குடும்ப வாழ்வில் கடுமையான கருத்து வேறுபாடுகளை உண்டாக்கலாம்.

ஜோதிட ஆலோசைணைகளுக்கு  ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295




No comments:

Post a Comment