காகவந்தியா(புருஷவந்தியா):தோஷம் என்றால் என்ன ?
வந்தியா தோஷம்: ஜோதிடத்தில் குழந்தைப்பேறு தொடர்பான குறைபாடுகளை “வந்தியா தோஷம்” என அழைக்கிறார்கள். இது நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது:
கதவீ வந்தியா – பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
ஸ்திரீ வந்தியா – ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
மிருத வந்தியா – குழந்தைகள் பிறந்து உயிரிழப்பது.
ஸாஷாத் வந்தியா – குழந்தை பிறக்காத நிலை.
காகவந்தியா தோஷம் என்பது ஜோதிடத்தில் “வந்தியா தோஷம்” எனப்படும் நான்கு வகை தோஷங்களில் ஒன்றாகும். இது “புருஷ வந்தியா” என்றும் அழைக்கப்படுகிறது; அதாவது, ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்காமல், பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலையை குறிக்கிறது.
ஐந்தாம் இடத்தில் குரு நின்று , ஐந்தாம் அதிபதி பலம் இழந்து , சனி பார்வை செய்தால் இந்த தோஷம் அமையப்பெறுகிறது. எத்தணை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தை மட்டுமே உயிர் வாழும்.
காகவந்தியா தோஷம் (புருஷ வந்தியா):
ஜாதகத்தில் சனி, சூரியன் இலக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் சேர்ந்து இருந்தாலும், அல்லது தங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும்,
அதே அமைப்பில் சந்திரன், புதன் கூடினாலும்,
ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு குறையும்; பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
இந்த தோஷம் நீங்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும் ?
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, நவக்கிரக வழிபாடு செய்வது போன்றவை நவக்கிரக தோஷங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
பரிகார பூஜைகள்: சனீஸ்வரன், சூரியன், சந்திரன், புதன் ஆகியோருக்கான சிறப்பு பூஜைகள்.
கோவில் வழிபாடு: பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற முருகன் கோவில்களில் சஷ்டி விரதம்.
ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:
Post a Comment