Search This Blog

Showing posts with label அஸ்தங்கம். Show all posts
Showing posts with label அஸ்தங்கம். Show all posts

Sunday, June 23, 2024

ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் அல்லது 7ம் அதிபதி #அஸ்தங்கம்# அடைந்த...


ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் அல்லது 7ம் அதிபதி அஸ்தங்கம் அடைந்தால் திருமணம் நடைபெறதா?



சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சூரியனுக்கு அருகில் செல்லும் போது அஸ்தங்கம், மெளட்யம்,மூடம் எனப்படும் தன்மைகளை அடைகிறார்

சுக்கிரன் காரகத்துவம்

மனைவி, அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல், திருமண சுகங்கள், கலை நிகழ்ச்சி, அழகு சாதனங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம், உல்லாச விடுதி, பாலின இன்பங்கள், சுரோணிதம், ஹார்மோன் மாற்றம், இனக்கவர்ச்சி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை.

 


ஆடம்பர பொருட்கள், இயல், இசை, நாடக கலைஞர்கள், சொகுசு மாளிகைகள், வெள்ளி, உயர்ரக மதுபானங்கள்,

கன்னம், பிறப்புறுப்பு, சிறுநீரகம், கண்களில் ஊனம்

சினிமா, கலைத்துறை பளபளப்பான மேனி, தேவ பெண்கள், மகாலட்சுமி, துணி வியாபாரம், பைனான்ஸ் ஆகியன.

சுக்கிரன் ஜாதகத்தில் பலம் பெற்றால் சினிமா துறையில் பிரபலம் அடைகிறார்கள். எம் ஜீ ஆர் , சிவாஜி , கமல் , ரஜினி , விஜய் , பதமினி , நயன்தாரா , கீர்த்தி சுரேஷ்



நீசமான கிரகங்கள் அஸ்தங்கம் அடைவதும் நல்ல நிலை அல்ல.

உதாரணத்திற்கு சுக்கிரன் நீசமான நிலையில் அஸ்தங்கம் பெற்று இருந்தால் சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு பெரியளவில் குறைபாடுகள் இருக்கும்.

ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் அஸ்தங்கமாக இருப்பது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களை ஏற்படுத்தும்.



அஸ்தங்கம் அடைந்த கிரகங்களின் பலனை சூரியனே எடுத்து செய்வார் என்பதால் அனுதினமும் ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்ரி சொல்லி சூரிய பகவானை வழிபட்டு வருவது நன்மை தரக்கூடிய அமைப்பாகும்

சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா

லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும்.

சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைய பெற்றிருந்தால் சுக்கிரன் அஸ்தங்கம்.



ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் அடைந்து காணப்பட்டால் , சந்தேக மனப்பான்மையால் இல்வாழ்வு அமையாது அல்லது சிறக்காது. உங்கள் மீது பாசம் காட்டுவோர்களை உதாசீனப்படுத்துவார்கள்.

 

ஜாதகத்தில் 7ம் அதிபதி வக்கிரம் அடைந்தாலும் இல்வாழ்வு அமைவதில்லை அல்லது சிறக்காது.

 

 புதன்,சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம் அடைகிறது. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அடையாது.

திருமணம் ஆகாத ஆண் ஜாதகரின் ஜாதக ஆய்வு உங்கள் பார்வைக்கு... ஜாதகருக்கு வயது 47

முக்கியமான சில குறிப்புகள் மட்டும் தரப்பட்டுள்ளன....

1. இரண்டாம் மற்றும் ஏழாம் அதிபதியான சுக்கிரன் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் சூரியனை நோக்கி மிக நெருக்கமான பாகையில் 1 degree நெருக்கத்தில் பரிபூரணமாக அஸ்தங்கம் பெற்றுள்ளது..



இரண்டு - குடும்ப ஸ்தானம்

ஏழு - களத்திற ஸ்தானம்

2. இரண்டில் மாந்தி, லக்னாதிபதி சாரம்

3. ஏழாம் இடத்தில் இராகு லக்னாதிபதி சாரம்.

4. லக்னாதிபதி பாதக ஸ்தானத்தில்.

5. லக்னத்தில் புதன் கேது சேர்க்கை , அதற்கு சனியின் 10 ஆம் பார்வை என்பதால் புதன் , சனி , கேது தொடர்பு, துறவு போன்ற வாழ்க்கை..

6. தாம்பத்திய சுகத்தை குறிக்கும் சுக்கிரன் பரிபூரண அஸ்தங்கம் ( 1 deg ) பெற்றதால் , பெண் சுகம் கிடைப்பதில் சிரமம் மற்றும் நாட்டமின்மை..

7. லக்னாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி பாகை முறை இணைவில் தொடர்பு என்பது, பிறவியில் தொடங்கிய தாம்பத்ய உறவில் குறைபாடு...

8. வீரியம், களத்திரம், போகம் குறிக்கும் 3,7,11 ஆம் அதிபதிகள் மூன்று பேருமே அலி கிரக நட்சத்திர சாரம் பெற்று வீரிய குறைபாட்டை உறுதி செய்கின்றனர்..

3 ஆம் அதிபதி - கேது சாரம்

7 ஆம் அதிபதி - புதன் சாரம்

11 ஆம் அதிபதி - சனி சாரம்

9. புத்திர ஸ்தானாதிபதி சூரியன் 12 இல் மறைவு, புத்திர காரகன் குரு மாந்தி உடன் சேர்ந்து பாதக ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாயின் பார்வையில் , பகை வீட்டில் வலு குறைந்த நிலையில்.

10. சதுர் கேந்திர சனி, கர்ம யோக ஜாதகம்..

11. நடப்பு தசை சுக்கிர தசை ( 2039 வரை, ).


Sunday, November 20, 2022

பாதகாதிபதி வலுப்பெற்ற ஜாதகம் ஏன் போராட்டங்களை சந்திக்கிறது ?

 பாதகாதிபதி வலுப்பெற்ற ஜாதகம் ஏன் போராட்டங்களை சந்திக்கிறது ?

"பாதகம் " என்பது கெடுதல் என்று பொருள் என விளங்கும். பாதகஸ் தான அதிபதியையோ "பாதகாதி பதி" என்கிறோம்.

பாதகாதிபதி ஒரு ஜாதகத்தில் வலு பெற கூடாது. அப்படி வலு பெற்றா ல் வாழ்வில் பல்வேறு சோதனைக ளை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

எந்த லக்கினத்திற்கு யார் பாதகாதிபதி ?

சர லக்கனம்

சர லக்கனம் ஆன மேஷம் , கடகம் , துலாம் , மற்றும் மகர லக்கினத்தி ற்கு 11ம் அதிபதி பாதகாதிபதி ஆவார். மேஷத்திற்கு சனியும் , கடகத்திற்கு சுக்கிரனும் , துலாத்தி ற்கு சூரியனும் , மகரத்திற்கு செவ்வையும் பாதகாதிபதிகளாக வருவார்கள்.

ஸ்திர லக்கனம்

ஸ்திர லக்கனம் ஆன ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்கினத்திற்கு 9ம் அதிபதி (திரிகோண ) பாதகாதி பதி ஆவர். திரிகோணாதிபதி ஆன 9ம் அதிபதியே ஸ்திர லக்கினத்திற்கு பாதகஆதிபதி ஆவதால் , ஸ்திர லக்கினங்களுக்கு பாதகாதிபதி நன்மையே செய்வார் என எடுத்து கொள்ளலாம். ரிஷப ராசிக்கு பாதகாதிபதியாக சனி பகவான் வருவார்.சிம்ம ராசிக்கு பாதகாதிபதி யாக செவ்வாய் பகவான் வருவார்.விருச்சக ராசிக்கு பாதக அதிபதியாக சந்திரன் பகவான் வருவார். கும்பம் ராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன் பகவான் வருவார்.

உபய லக்கனம்

உபய லக்கனம் ஆன மிதுனம் , கன்னி , தனுசு , மீனத்திற்கு 7 ம் அதிபதி பாதகாதிபதி ஆக வருவார். மிதுன ராசிக்கும்,கன்னி ராசிக்கும் பாதகாதிபதியாக குருபகவான் வருவார். தனுசு மற்றும் மீனம் ராசிக்கு பாதகாதிபதியாக புதன் பகவான் வருவார்.

பாதகாதிபதி எப்போது நன்மை யை தருவார் ?

1.பொதுவாக 6,8,12ல் மறைந்தால் மிகுந்த நன்மைகளை தருவார், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழிக்கு ஏற்ப .

2. பாதகாதிபதி நீச்சம் அடைந்து காணப்பட்டால் நன்மைகளை தருவார்

3. பாதகாதிபதி அஸ்தங்கம் அடைந்து காணப்பட்டால் நன்மைகளை தருவார்

4. பாதகாதிபதி திரிகோணம் ஏறின் செல்வனுக்கு செல்வம் செப்பு என்கிறார் புலிப்பாணி முனிவர்.

அதாவது பாதகாதிபதி திரிகோண ஸ்தனங்கள் ஆன 1,5,9 போன்ற இடங்களில் அமர்ந்து மேலும் அந்த திரிகோணாதிபதி பலம் பெற்றிரு ப்பது நற்பலனை உண்டாக்கும்

5. பாதகாதிபதி நீசபங்கம் பெற்றிருக்க, தனது தசை , புக்தி , அந்திரங்களில் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை ஏற்படுத்து வார்.

6. பாதகாதிபதி தன் சொந்த வீட்டிலிருந்து மறைந்து காணப்பட்டால் நன்மைகளை செய்வர்.

7. திரிகோணாதிபதி நட்சத்திர சாரங்களில் இருந்தால் பாதகாதி பதி ஜாதகருக்கு நன்மை செய்வர்.

8. பாதகாதிபதியும் திரிகோணாதி பதியும் ஒருவருக்கு ஒருவர் பரிவர் த்தனை பெற்றால் யோகத்தை தருவார்.

9. ராசியாக வரும் பாதகாதிபதி ஜாதகருக்கு தீமை செய்வதில்லை. உதாரணத்திற்கு மேஷ லக்கினத்தி ற்கு சனி பாதகாதிபதி ஆவர். மேஷ லக்கனத்தில் பிறந்தவர்கள் மகர ராசியில் அல்லது கும்ப ராசியில் பிறந்து இருந்தால் தீமைகளை செய்வதில்லை.

பாதகாதிபதி எப்பொழுது தீமை செய்வார் ?

1.பாதகாதிபதி தசையில் அட்டமாதிபதி புத்தியில் அதிக கவனம் தேவை

2.பாதகாதிபதி வலுவான இடங்களில் அமர்ந்து, ஸ்தானபலம் பெற்று, சுபர் பார்வையும் பெறுவ து யோகமான பலன்களை தராது. ஆரம்பத்தில் சுப பலன்களை தந்தால் , முடிவில் மாரகம் அல்லது அதற்கு இணையான கண்டத்தை ஜாதகருக்கு தந்து விடும்.

3. லக்னமும், ராசியும் ஒன்றாக அமைபவர்கள் பாதகாதிபதி தசை, புக்திகளில் கவனமாக இருக்க வேண்டும்

4.மிதுனம் மற்றும் கன்யா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் பாதகாதிபதி ஆவார் . இவர்களுக்கு , பாதகாதிபதியான குரு 7. ஆட்சி பெற்று காணப்பட் டால் , கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத் துவார். ஒரு சில ஜாதகர்கள் ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ளவர் ஆக காணப்படுவார்கள். இவர்களுக்கு திருமண வாழ்வு என்பது கானல் நீராக அமைந்து விடும்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் மிதுன லக்கனத்தில் பிறந்தவர். 7ம் இடமான தனுசில் 7ம் அதிபதியான குரு ஆட்சி பெற்றதால் , பாதகாதிபதி வலுப்பெற்றதால் , கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டதால் , இவருக்கு திருமன்ன வாழ்வு என்பது காணல் நீராக அமைந்ததது.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க, ஜாமக்கோள் ஆருடம் மூலமாக உங்கள் பிரச்சனைகளு க்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'ராகு சுக்கிரன் லக்கினம் சூரியன், புதன் சனி செல்வி ஜெயலலிதா ஜாதகம் 24-02-1948 02.30 PM MYSORE குரு சந்திரன் செவ்வாய் கேது'

Saturday, October 29, 2022

எந்த வித கஷ்டமும் படாமல் ஜாதகரை செல்வந்தராக்கும் அயத்தின தன லாப யோகம் .அயத்தின தன லாப யோகம் என்றால் என்ன ?

எந்த வித கஷ்டமும் படாமல் ஜாதகரை செல்வந்தராக்கும் அயத்தின தன லாப யோகம்

அயத்தின தன லாப யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி யும் தனக்காரகர் ஆன 2ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்தால் அயத்தின தன லாப யோகம் ஏற்படும்.

லக்கினாதிபதியும் 2ம் அதிபதியும் பரிவர்த்தனை அடைந்தால் அதிக முயற்சி இல்லாமல் செல்வ சேர்க்கை ஜாதகருக்கு ஏற்படும் அது தானாகவே ஏற்படும்

பரிவர்த்தனை யோகம்

கிரகங்கள் தங்களது வீடுகளுக்குள் இடம் மாறி நிற்பது பரிவர்த்தனை யோகம் ஆகும்.பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தனது கிரக வலுவானது அதிகரிக்கிறது.இவை ஆட்சி பலத்திற்கு நிகரான பலத்தை அடைகிறது.

தனகாரகர் குரு

மேலும் 2ம் அதிபதியாய் தனகா ரகர் குரு அமைந்தால் இந்த யோக ம் நன்றாக வேலை செய்யும். இந்த அமைப்பு விருச்சிக மற்றும் கும்ப லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.

அயத்தின தன லாப யோகம்

இங்கு கொடுக்க பட்டுள்ள ஜாதகத்தில் துலா லக்கினம் . லக்கினாதிபதியான சுக்கிரன் 2ம் இடத்திலும் , 2ம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் அமையப்பெற்றுள் ளதால் , அயத்தின தன லாப யோக ம் ஏற்பட்டுள்ளது.

அஸ்தங்கம் ஆனால் 50% யோகம்

ஆனால் இந்த யோகம் இந்த ஜாதகருக்கு முழுமையான யோக பலன்களை தராது என் என்றால் , இங்கே 2ம் அதிபதியான செவ்வாய் லக்கினத்தில் சூரியனுடன் இணை ந்து அஸ்தங்கம் ஆகியுள்ளதால் , இந்த யோகம் ஜாதகருக்கு 50% யோக பலன்களைதான் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பகை சாரம்

மேலும் செவ்வாய் ராகு சாரம் பெற்று பகை வேறு அடைந்துள்ள து. ஜாதகத்தில் உள்ள யோகம் முழுமையாக பலன் தரும் வேண்டும் என்றால் அவை நட்பு அல்லது சமம் சாரம் பெறவேண்டு ம். மேலும் யோகம் சம்பந்த பட்ட கிரஹங்கள் அஸ்தங்கம் , நீச்சம் , போன்ற நிலைகளை அடைய கூடாது.

சுக்கிரன் நீச்சம்

உதாரணத்திற்கு , கன்யா லக்கனத் தில் பிறந்த ஒரு ஜாதகருக்கு அயத்தின தன லாப யோகம் பெற்றுஇருந்தால் , புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடைந்து இருப்பார்கள் . இங்கே சுக்கிரன் நீச்சம் பெற்று கன்யா லக்கினத்திலும் , லக்கினாதிபதி யான புதன் 2ம் இடத்திலும் இருப் பார்கள் . இத்தகைய அமைப்பில் இந்த யோகம் 100% சுப பலன்களை தராது.

ஆகவே , ஒரு ஜாதகத்தில் உள்ள யோகம் முழுமையாக பலன் தரவேண்டும் என்றால் , அந்த யோகத்தை ஏற்படுத்தும் கிரஹங்கள் வலிமை பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இந்த யோகம் முழுமையாக வேலை செய்யும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , உங்கள் பிரச்சனைகளை ஜாமக்கோள் பிரசன்ன ஆருடத்தால் தெரிந்து கொள்ள , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'கேது குரு அயத்தின தன சனி, சந்திரன் லாப யோகம் 18-10-1976 சுக்கிரன் லக்கினம் புதன் சூரியன், செவ்வாய் ராகு'